தன்னம்பிக்கையை வளர்த்து, வாழ்க்கையில் வெற்றி பெற நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பழக்கங்கள்!!!
Author: Hemalatha Ramkumar9 November 2024, 6:41 pm
டீனேஜ் வயதை கடந்து உங்களுடைய 20க்குள் நுழையும் பொழுது ஒரு சில விஷயங்களை கட்டாயமாக செய்வது உங்களுடைய தனிப்பட்ட வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் மிகவும் உதவும். அந்த வகையில் உங்களுடைய தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும் ஒரு சில பழக்க வழக்கங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சுய பராமரிப்பு
எப்பொழுதும் நீண்ட கால வெற்றிக்கு உங்களுடைய உடல் மற்றும் மனதிற்கு நீங்கள் முன்னுரிமை வழங்க வேண்டும். போதுமான அளவு தூங்குதல், ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது மற்றும் தினமும் உடற்பயிற்சி செய்வது ஆகியவை உங்களுக்கு தேவையான ரீசார்ஜை வழங்கும்.
வளர்ச்சிக்கான மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுதல்
உங்களை நீங்கள் முதலில் நம்ப வேண்டும். அடுத்தபடியாக உங்களுடைய முயற்சி மூலமாகவும் உறுதியான மனப்பான்மை மூலமாகவும் எதையும் சாதித்து அடுத்த கட்டத்திற்கு செல்லலாம் என்ற வளர்ச்சிக்கான மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது அவசியம். இதுபோன்ற சூழ்நிலையில் உங்களுடைய பாதையில் எப்பேர்பட்ட தடைகள் வந்தாலும் அவற்றை நீங்கள் தகர்த்து முன்னோக்கி செல்வீர்கள்.
பொருளாதார சுதந்திரம்
நல்ல பொருளாதார சம்பந்தப்பட்ட பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொள்வது உங்களுடைய இலக்குகள் அடிப்படையிலான விருப்பங்களை தேர்வு செய்வதற்கான சுதந்திரத்தை உங்களுக்கு கொடுக்கும். இல்லையெனில் எப்பொழுதும் யாரையாவது சார்ந்து இருக்க வேண்டிய நிலையில் இருப்பீர்கள்.
இதையும் படிக்கலாமே: வெயிட் லாஸ் டயட்: புரோட்டீன் நிறைந்த காலை உணவுக்கான யோசனைகள்!!!
டைம் மேனேஜ்மென்ட்
எப்பொழுதும் நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். எந்த ஒரு விஷயத்தையும் சரியான நேரத்தில் செய்வது உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைத்து இலக்குகளில் தொடர்ந்து கவனம் செலுத்த உங்களுக்கு உதவும்.
எமோஷனல் இன்டலிஜென்ஸ்
எமோஷனல் இன்டெலிஜென்ஸ் என்பது உறவுகளை வளர்ப்பதற்கு மிகவும் அவசியம். இது பல்வேறு உணர்வுகளை சமாளிக்கவும் பிறருடைய இடத்திலிருந்து அவர்களைப் பற்றி யோசிக்கவும் அவசியம் தேவை.
தனிப்பட்ட வளர்ச்சிக்கான முதலீடு
தொடர்ந்து அதிவேகத்தில் வளர்ந்து வரும் இந்த உலகத்தில் உங்களுடைய திறமைகளையும், அறிவுத்திறனையும் நீங்கள் மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பொழுது உங்களுடைய 20 களில் நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் விரைவாக கற்றுக் கொள்வீர்கள்.
வலிமையான நெட்வொர்க் எப்பொழுதும் உங்களைச் சுற்றி பாசிடிவ்வான அதே நேரத்தில் ப்ரொஃபஷனலான நெட்வொர்க் இருப்பதை உறுதி செய்யுங்கள். இது உங்களுக்கு தேவையான நேரத்தில் வாய்ப்புகள், ஆலோசனைகள் மற்றும் ஆதரவை கொடுக்கும்.