சுருட்டை முடியை கவனித்துக் கொள்ள உதவும் சில டிப்ஸ்!!!
Author: Hemalatha Ramkumar27 January 2023, 6:25 pm
இயற்கையாகவே சுருள் முடி கொண்ட பெண்கள் தங்கள் முடி பராமரிப்பு பற்றிய சில விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம். சுருள் முடி அடிக்கடி சிக்காக்கூடும். இது எரிச்சலூட்டுவதாக அமையலாம். ஆனால் சுருட்டை முடி பார்ப்பதற்கு மிகவும் அழகான ஒன்று. அவை பெரும்பாலும் உடைந்து போகக்கூடும். எனவே சுருள் முடியை எவ்வாறு நிர்வகிப்பது என்பது பெரிய சவாலாக உள்ளது. உங்கள் சுருட்டை முடியை கவனித்துக் கொள்ள உதவும் சில குறிப்புகள் பற்றி பார்ப்போம்…
ஷாம்பு:
சுருள் முடி அடிக்கடி வறண்டு போகும். ஏனெனில் உங்கள் உச்சந்தலையில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய்கள் உங்கள் இழைகளின் முனைகளை அடைவதற்குப் போராடுகிறது. ஆகவே, சுருள் முடிக்கு ஊட்டமளிக்கும் ஷாம்பூவைப் பயன்படுத்தவும்.
தலைமுடியை கழுவும் முன் சிகிச்சை:
அதேபோல், நீங்கள் ஃப்ரிஸ்ஸுக்கு ஆளாகிறீர்கள் என்றால், ஊட்டமளிக்கும் எண்ணெய் உங்களுக்கானது. கழுவும் முன் உங்கள் தலைமுடியை வேரில் இருந்து நுனி வரை ஊட்டச்சத்து நிறைந்த ஹேர் ஆயில் கொண்டு மசாஜ் செய்யவும்.
உலர்த்தும் போது கவனமாக இருங்கள்:
உங்கள் தலைமுடியைக் கழுவிய பிறகு, அதை துடைத்து உலர்த்தாதீர்கள். அது உங்கள் தலைமுடியை சேதமாக்கும். அதற்கு பதிலாக உங்கள் தலையை முன்னோக்கி சாய்த்து, அதிகப்படியான தண்ணீரை அகற்ற மெதுவாக மேல்நோக்கி அழுத்தவும்.
முடியை அடிக்கடி சீவ வேண்டாம்:
சுருள் முடியை அடிக்கடி சீவுதல் முடிக்கு சேதத்தை உண்டாக்கும். இது தலைமுடியை சிக்காக்கும். உங்கள் தலைமுடி ஈரமாக இருக்கும் போது தலைமுடியை சீவலாம்.
ஈரமான முடியில் எண்ணெய்களைப் பயன்படுத்துங்கள்:
உங்கள் தலைமுடி ஈரமாக இருக்கும்போதே சுருள் முடிக்கான தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள். இது ஈரப்பதத்தை தக்க வைக்கவும், உங்கள் சுருட்டையை தடிமனாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.