நைட் டைம்ல இரத்த சர்க்கரை அதிகமாகாம இருக்க என்ன செய்யணும்…???

Author: Hemalatha Ramkumar
14 October 2024, 3:42 pm

டயாபடீஸ் பிரச்சனையை கையாள்வது என்பது பகல் நேரத்தில் மட்டுமல்லாமல் இரவு நேரத்திலும் உங்களுடைய ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். தூங்குவதற்கு முன்பு நாம் பின்பற்றும் ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் மூலமாக இரவு சமயத்தில் ரத்த சர்க்கரை அதிகரிக்காமல் கவனித்துக் கொள்ளலாம். அதற்கான சில குறிப்புகளை இப்போது தெரிந்து கொள்வோம். 

இரவு உணவை சாப்பிட்ட பிறகு படுக்கைக்கு செல்வதற்கு முன்பு உங்களுக்கு திடீரென்று பசி ஏற்பட்டால் அந்த சமயத்தில் நீங்கள் சாப்பிடும் தின்பண்டங்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி அளவு நட்ஸ், கிரேக்க தயிர் அல்லது கேரட் போன்றவற்றை சாப்பிடலாம். இது மாதிரியான பண்டங்கள் உங்களுடைய ரத்த சர்க்கரை அளவுகளை அதிகரிக்காது. அதே நேரத்தில் சர்க்கரை சேர்க்கப்பட்ட தின்பண்டங்கள் அல்லது கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளை தவிர்க்கவும். 

உங்களுடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் ரத்த சர்க்கரையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும் ஒரு நல்ல தூக்கம் அட்டவணை இருப்பது அவசியம். தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்கு செல்ல வேண்டும். அதேபோல காலை எழுவதற்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அமைத்துக் கொள்ளுங்கள். வீக்-எண்ட் சமயத்தில் கூட இதையே பின்பற்றவும். உங்களுக்கு தரமான தூக்கம் கிடைத்தால் பசி ஏற்படுத்தும் ஹார்மோன்கள் சீராக்கப்பட்டு, ரத்த சர்க்கரை அளவுகள் கட்டுக்குள் வைக்கப்படும். மாறாக உங்களுக்கு போதுமான அளவு தூக்கம் கிடைக்காவிட்டால் அதனால் இன்சுலின் எதிர்ப்பு திறன் ஏற்பட்டு டயாபடீஸ் பிரச்சினையை கட்டுப்படுத்துவது சிக்கலாகிறது. 

தூங்குவதற்கு முன்பு ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கம்ப்யூட்டர்கள் போன்றவற்றை பயன்படுத்துவதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.

இதுபோன்ற சாதனங்களில் இருந்து வெளிவரும் நீல நிற ஒளியானது நம்முடைய உடலில் மெலடோனின் உற்பத்தியை பாதித்து, அதனால் நமக்கு தூக்கம் வராமல் போகலாம். எனவே படுக்கைக்கு செல்வதற்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு முன்பாவது இது இந்த சாதனங்களை பயன்படுத்தாதீர்கள். அதற்கு பதிலாக உங்கள் மனதை அமைதிபடுத்த உதவும் புத்தகம் வாசித்தல், தியானம் போன்றவற்றை நீங்கள் செய்யலாம்.

இதையும் படிங்க: காய்கறி வெட்டுற சாப்பிங் போர்டுல இவ்வளவு பெரிய ஆபத்து மறைந்து இருக்குதா…???

நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பது அவசியம். அதே நேரத்தில் படுக்கைக்கு செல்வதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு நீங்கள் சாப்பிடும் திரவங்களை ஓரளவு குறைத்துக் கொள்ளுங்கள். அதிகப்படியாக தண்ணீர் குடிப்பதால் நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க கழிவறைக்கு செல்ல வேண்டி இருக்கலாம். இது உங்களுடைய தூக்கத்தை பாதிக்கும். படுக்கைக்கு செல்வதற்கு முன்பு கட்டாயமாக உங்களுடைய ரத்த சர்க்கரை அளவுகளை சோதித்து பார்க்க வேண்டும். இந்த விஷயத்தை செய்வது உங்களுடைய உடல் நீங்கள் சாப்பிட்ட உணவுக்கு எப்படி ரியாக்ட் செய்கிறது என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு நீங்கள் உணவை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். 

இந்த ஐந்து முக்கியமான யுக்திகளை படுக்கைக்கு செல்வதற்கு முன்பு பின்பற்றினால் நிச்சயமாக இரவு நேரத்தில் ரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 200

    0

    0