இந்த உணவுகளை இப்படி சாப்பிட்டால் தான் நல்லது… தெரிஞ்சுக்கோங்க!!!
Author: Hemalatha Ramkumar23 June 2023, 4:55 pm
உங்கள் உணவில் ஆரோக்கியமான சூப்பர்ஃபுட்களை சேர்த்துக்கொள்வது போதாது. அதன் பலனைப் பெற நீங்கள் அவற்றை சரியான வழியில் சாப்பிட வேண்டும். இதுவரை நீங்கள் தவறாக சாப்பிட்டு வந்த சில உணவுகள் குறித்து இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பாதாம் ஒரு பிரபலமான நட்ஸ் வகை. ஆனால் அவற்றை ஊறவைத்து சாப்பிடுவது அவற்றின் செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தும். பாதாமை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைப்பது, ஊட்டச்சத்து உறிஞ்சுதலைத் தடுக்கும் ஒரு கலவையான பைடிக் அமிலத்தை உடைக்க உதவும் என்சைம்களை செயல்படுத்துகிறது. மேலும் இந்த செயல்முறை துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் கிடைப்பதை அதிகரிக்க முடியும்.
தானியங்களுக்கு பசையம் இல்லாத மாற்றாக கினோவா அமைகிறது. இருப்பினும், பலர் அதை சமைப்பதற்கு முன் ஒரு முக்கியமான படியை தவிர்த்து விடுகிறார்கள். தானியங்களை கழுவுதல் மிகவும் அவசியம். குயினோவாவில் இயற்கையாகவே சபோனின் என்ற கசப்பான பூச்சு உள்ளது. இது சுவை மற்றும் செரிமானத்தை பாதிக்கும்.
சமீபத்திய ஆய்வு ஒன்றில், ஆப்பிள் தோலில் உணவு நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும் பிற நன்மை பயக்கும் கலவைகள் உள்ளன என்று கண்டறியப்பட்டது. ஆப்பிளின் ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் பெற அதனை தோலுடன் சாப்பிட வேண்டும்.
ப்ரோக்கோலியை வறுத்தோ அல்லது அதிக நேரம் வேகவைத்தோ சாப்பிடக்கூடாது. இது அதில் உள்ள வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களை தக்கவைக்க உதவுகிறது. ப்ரோக்கோலியை அதிகமாக சமைப்பது ஊட்டச்சத்து இழப்புக்கு வழிவகுக்கும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.