நமக்கு எப்பவும் நாம தான் ஃபர்ஸ்ட்… சுய பராமரிப்புக்கான ஈசி டிப்ஸ்!!!
Author: Hemalatha Ramkumar3 January 2025, 6:53 pm
2025 ஆம் ஆண்டிற்குள் நாம் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த சமயத்தில் புத்தாண்டை கொண்டாடுவது முக்கியமான விஷயம்தான். ஆனால் அதை விடவும் சுய பராமரிப்பில் கவனம் செலுத்துவது இன்னும் கூடுதலாக அவசியமானதாக கருதப்படுகிறது. இந்த ஆண்டாவது சுய பராமரிப்பு செயல்பாடுகளுக்கு நேரத்தை ஒதுக்குவதற்கு முன்னுரிமை கொடுப்பதற்கு முயற்சி செய்யுங்கள். இது உங்களுடைய மன நலனை மேம்படுத்துவதற்கு உதவும். பிசியான தினசரி வாழ்க்கையை சமாளிக்கும் அதே நேரத்தில் உங்களுக்கும் நீங்கள் சிறிது நேரத்தை செலவு செய்வது அவசியம். எனினும் சுய பராமரிப்பு சம்பந்தப்பட்ட ஒரு சிறிய விஷயம் கூட மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
நண்பர்களுடன் ஒரு லாங் வாக் செல்வது, டைரி எழுதுவது, சரும பராமரிப்பில் ஈடுபடுவது, ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி அல்லது அமைதியான இடத்தில் அமர்ந்து ஒரு புத்தகம் வாசிப்பது போன்ற செயல்பாடுகள் மன அழுத்தத்தை குறைத்து, உங்களுடைய மனநலனை மேம்படுத்தும். அந்த வகையில் உங்களுடைய மனநலனை மேம்படுத்த உதவும் எளிமையான சுய பராமரிப்பு வழிகள் சிலவற்றை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கட்டிப்பிடித்தல்
பிறரை கட்டிப்பிடிப்பது என்பது எப்பொழுதும் தவறாகவே பார்க்கப்படுகிறது. எனினும் இது நம்முடைய ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும், வலியை குறைக்கவும், பதட்டம் மற்றும் மனசோர்வு அளவுகளை குறைக்கவும் உதவுகிறது.
உங்களுடைய ஆசிர்வாதங்களை எண்ணி பாருங்கள்
எப்பொழுதாவது நீங்கள் அதிக சோர்வாக, மன அழுத்தத்தோடு உணரும் பொழுது உங்கள் வாழ்க்கையின் நல்ல பக்கத்தை நினைத்து பாருங்கள். எதிர்மறை எண்ணங்களுக்கு பதிலாக உங்கள் வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயங்களைப் பற்றி யோசியுங்கள்.
குளிப்பது
ஒரு நாளின் முடிவில் உங்களுடைய தனிப்பட்ட மற்றும் அலுவலகம் சார்ந்த பொறுப்புகளை நிறைவேற்றிய பிறகு குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது குளிப்பது உங்களுடைய மன அழுத்தம் மற்றும் எதிர்மறை ஆற்றலை போக்க உதவும்.
இதையும் படிக்கலாமே: நம்ம உடம்புல இந்த ஒரு உறுப்பு ஸ்ட்ராங்கா இருந்தா போதும் மொத்த ஆரோக்கியத்திற்கும் கேரண்டி உண்டு!!!
யோகா மற்றும் நீட்சி பயிற்சி
சோகமாக இருக்கும் பொழுது நீட்சி பயிற்சிகளை செய்ய முயற்சி செய்யுங்கள். இது உங்களுடைய மனதை அமைதிப்படுத்தி பாசிட்டிவிட்டியை உருவாக்கி மன அழுத்தத்தை போக்க உதவும்.
உங்களுக்கு பிடித்தமான பாடலை கேட்பது
உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான எளிமையான வழிகளில் இதுவும் ஒன்று. இசைக்கு உங்களுடைய மனநிலையை மேம்படுத்தும் வலிமை உள்ளது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.