தினமும் காலை இந்த 4 விஷயங்களை தவறாம செய்து வந்தாலே ஆரோக்கியம் உங்க கைய விட்டு எங்கேயும் போகாது!!!
Author: Hemalatha Ramkumar18 November 2024, 10:46 am
ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று சொல்லும் பொழுது நீங்கள் இந்த விஷயத்தில் உங்களுடைய உடலை நிச்சயமாக நம்ப வேண்டும். ஏனெனில் குடல் என்பது நம்முடைய நல்வாழ்விற்கு மிகவும் முக்கியமான ஒன்று. நம்முடைய குடல் ஆரோக்கியம் நோய் எதிர்ப்பு அமைப்பு, மனநலன், செரிமானம், உடல் எடை மற்றும் பலவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வாழ்க்கை முறை சம்பந்தமான நோய்களான உடற்பருமன், டயாபடீஸ், ஹைப்பர் டென்ஷன் மற்றும் பதட்டம் போன்றவை உலக அளவில் அதிகரித்து வருவதை நாம் அனைவரும் அறிவோம். வாழ்க்கை முறை மாற்றங்கள் மட்டுமல்லாமல் நாம் சாப்பிடுகின்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் தின்பண்டங்களும் இதற்கு காரணம்.
வாழ்க்கை முறை நோய்கள் ஏற்படுவதற்கான முன்னணி காரணங்களில் ஒன்று ஆரோக்கியமற்ற ஊட்டச்சத்து. எனினும் நல்ல குடல் ஆரோக்கியத்தை பராமரிப்பது என்பது நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவும். இதனை நீங்கள் உங்களுடைய நாளின் முதல் உணவில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். உங்களுடைய உணவில் மாற்றத்தை ஏற்படுத்திய 24 மணி நேரத்திற்குள் குடலில் உள்ள நுண்ணுயிரிகளில் மாற்றம் ஏற்படும். எனவே உணவு சார்ந்த தேர்வுகளில் மாற்றத்தை ஏற்படுத்தினால் நிச்சயமாக அது உங்களுடைய செரிமானம், மெட்டபாலிசம், ஏன் மனநிலையில் கூட மாற்றத்தை உண்டாக்கும்.
நவீன வாழ்க்கை முறை மூலமாக தூண்டப்படும் பல உணவுகள் நமக்கு அத்தியாவசிய ஊட்டசத்துகளை வழங்காமல் கேடு விளைவிக்கின்றன. எனவே குடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு உங்களுடைய நாளை எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்பது சம்பந்தமான சில குறிப்புகளை பார்க்கலாம்.
புரோட்டீன் நிறைந்த காலை உணவு
புரோட்டீன் என்பது நமது உடலில் குறைவான இரத்த சர்க்கரையளவு நீண்ட நேரத்திற்கு பராமரிக்கப்படுவதை உறுதி செய்கிறது. மேலும் இது நன்மை தரும் பாக்டீரியாக்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலமாக குடலில் உள்ள திசுக்களை சரி செய்கிறது. பீன்ஸ் வகைகள், நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவற்றில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. இது நம்முடைய குடலை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கு உதவும். இந்த புரோட்டீன் நிறைந்த உணவை சாப்பிடுவதற்கான சிறந்த நேரம் காலை ஆகும்.
இதையும் படிக்கலாமே: புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பது சரியா…???
குடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ப்ரோபயாடிக் தயிர், இட்லி மற்றும் தோசை போன்ற உணவுகளில் குடலுக்குப் நன்மை தரும் பாக்டீரியா உள்ளது. இவை குடலை ஆரோக்கியமாக்கி, செரிமானத்தை மேம்படுத்தி, குடல் செயல்பாடுகளை கவனித்துக் கொள்ளும். மிக முக்கியமாக இவை நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ப்ரீ பயாடிக்ஸ்
ப்ரி பயாடிக்ஸ் என்பது நம்முடைய உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கான உணவு. இந்த ப்ரீ பயாடிக்ஸ் வாழைப்பழம், ஆப்பிள், பருப்பு வகைகள், ஓட்ஸ், பாதாம், ஆளி விதைகள், தர்பூசணி போன்றவற்றில் காணப்படுகிறது. நம்முடைய செரிமான ஆரோக்கியத்திற்கு ஆதரவு தருவதற்கு இவை அத்தியாவசியமானவை. எனவே உங்களுடைய காலை உணவில் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் குடல் பாக்டீரியாக்களுக்கு தேவையான உணவை வழங்கி செரிமானம் சீராக நடைபெற செய்யும்.
நீர்ச்சத்து
உணவு சாப்பிடுவது எவ்வளவு முக்கியமோ காலை நேரத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் அவ்வளவு முக்கியமானது. காலை எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான எலுமிச்சை தண்ணீர் குடிப்பது உங்களுக்கு ஆரோக்கியமானதாகவும், இரைப்பை குடல் செயல்பாட்டை மேம்படுத்துவதாகவும் அமைகிறது. இரண்டாவதாக நீங்கள் சாப்பிடும் பொழுது உங்களுடைய கவனம் முழுவதும் உணவிலேயே இருக்க வேண்டும். நீங்கள் உணவை ஒவ்வொரு முறை கடித்து மெல்லும் பொழுதும் அதனை நன்றாக கூழாக்கி விழுங்குவது அவசியம். இவ்வாறு நீங்கள் செய்து வர செரிமானம் நன்றாக நடைபெறுவதோடு, அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சிறந்த முறையில் உறிஞ்சப்படும்.
இந்த அத்தியாவசிய காலை ஊட்டச்சத்து பழக்கங்களை உங்களுடைய வாழ்க்கை முறையில் புகுத்தினால் நிச்சயமாக உங்களுடைய ஆரோக்கியத்தில் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.