இன்றைய காலகட்டத்தில் கீழ் முதுகு வலி என்பது பெரும்பாலான நபர்களை பாதித்து வருகிறது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதாலும், உடல் செயல்பாடு எதுவும் இல்லாத காரணத்தாலும், மோசமான தோரணையின் காரணமாகவும் இது ஏற்படுகிறது. மருந்துகள் வலியை தற்காலிகமாக போக்கினாலும் இதிலிருந்து நீண்ட கால நிவாரணம் பெறுவதற்கு யோகா உங்களுக்கு உதவும். அந்த வகையில் கீழ் முதுகு வலி வலியிலிருந்து நிவாரணத்தை அளிப்பதற்கான ஒரு சிறந்த ஆசனம் தான் புஜங்காசனம். இது ‘கோப்ரா போஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த ஆசனம் குறிப்பாக நம்முடைய கீழ் முதுகு பகுதியில் கவனம் செலுத்தி, அப்பகுதியில் உள்ள வலியைப் போக்கி, முதுகு தண்டு நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது. இந்த ஆசனத்தை சரியான வழியில் செய்தால் நிச்சயமாக கீழ் முதுகு வழியில் இருந்து நிவாரணம் பெறலாம். இப்போது புஜங்காசனத்தை சரியான முறையில் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
புஜங்காசனம் செய்வதற்கு முன்பு வார்ம்-அப் செய்வது அவசியம். அதிலும் குறிப்பாக நீங்கள் புதிதாக யோகா பயிற்சிகளில் ஈடுபடுகிறீர்கள் என்றாலோ அல்லது கீழ் முதுகு வலியால் பாதிக்கப்பட்டிருந்தாலோ வார்ம்-அப் செய்வது மிகவும் முக்கியம். முதுகுத்தண்டு தசைகளை தளர்த்துவதற்கு நீங்கள் குழந்தை போஸ் அல்லது பூனை-மாடு போஸ் போன்றவற்றை செய்யலாம். இது அந்த பகுதியில் உள்ள தசைகளின் பதட்டத்தை தளர்த்தும். புஜங்காசனம் பயிற்சி செய்வதற்கு முன்பு வார்ம்-அப் செய்வது பயிற்சியின் போது உங்களுக்கு அழுத்தம் அல்லது காயங்கள் ஏற்படுவதை தவிர்க்க உதவும்.
புஜங்காசனம் எப்படி செய்வது?
முதலில் வயிறு தரையில் படும்படி கால்களை ஒன்றாக வைத்து குப்புற படுத்துக் கொள்ளுங்கள்.
உங்களுடைய உள்ளங்கை பாயில் தட்டையாக இருக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே: தொப்புளில் விளக்கெண்ணெய் வைத்தால் தொப்பை குறையுமா… இது என்ன புது கதையா இருக்கு!!!
இப்போது உங்களுடைய மார்பு பகுதியை பொறுமையாக தூக்கி கைகளை பாயில் வைத்து அழுத்தி மேல் முதுகை தூக்கி மேலே அண்ணாந்து பார்க்க வேண்டும்.
புஜங்காசனம் மட்டுமல்லாமல் எந்த விதமான பயிற்சி செய்யும் பொழுதும் சுவாசம் என்பது மிகவும் முக்கியம்.
புஜங்காசனம் செய்யும் பொழுது பொறுமையான ஆழ்ந்த சுவாசங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் மார்பு பகுதியை தூக்கும் பொழுது மூச்சை உள்ளெடுக்கவும், அதே போல கீழே படுத்துக் கொள்ளும் பொழுது மூச்சை வெளியே விடவும்.
ஆழ்ந்த சுவாசம் உங்களுடைய தசைகளுக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதி செய்யும்.
அதே நேரத்தில் உங்களுக்கு ஏதாவது அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக உங்கள் தோரணையை மாற்றிக் கொள்ளுங்கள்.
புஜங்காசனம் செய்யும் பொழுது முதலில் உங்களுடைய முழங்கைகளை வளைக்க வேண்டுமே தவிர மார்பை தூக்கக்கூடாது.
பொறுமையாக உங்கள் முதுகில் உள்ள தசைகள் வலிமையாக ஆரம்பித்து நெகிழ்வுத்தன்மையை பெற்றவுடன் உங்கள் மார்பை தூக்கவும்.
இந்த நிலையில் ஒரு சில வினாடிகள் அப்படியே இருக்கவும். போகப்போக இந்த நேரத்தை நீங்கள் அதிகரித்துக் கொள்ளலாம்.
0
0