கர்ப்ப காலம் என்பது இரத்த சர்க்கரை அளவுகளை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்கலாம். அதிலும் குறிப்பாக இரண்டாவது மற்றும் மூன்றாவது டிரைமெஸ்டர்களில் இதில் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஹியூமன் பிளாசண்டல் லாக்டோஜன், கார்டிசால் மற்றும் புரோஜஸ்டரான் போன்ற ஹார்மோன்கள். இந்த ஹார்மோன்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆனால் அதே நேரத்தில் இன்சுலின் சிறப்பாக பயன்படுத்தப்படுவதில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
கர்ப்ப காலத்தில் பொழுது இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே கர்ப்ப காலத்தில் டயாபடீஸ் பிரச்சனையை எப்படி கையாள வேண்டும் என்பதற்கான சில முக்கியமான குறிப்புகளை தெரிந்து கொள்வோம்.
கிளைசிமிக் எண் கட்டுப்பாட்டை மிகவும் கண்டிப்பாக பின்பற்றுவது தாய் மற்றும் குழந்தைக்கு டயாபடீஸ் காரணமாக ஏற்படும் சிக்கல்களை சமாளிப்பதற்கு உதவும். இதனை எப்படி செய்வது என்பதற்கான யுக்திகளை இப்பொழுது பார்க்கலாம்.
இரத்த சர்க்கரை அளவை கண்காணித்தல்
அடிக்கடி இரத்த குளுக்கோஸ் அளவை சுய கண்காணிப்பு செய்வது மிகவும் அவசியம். அதிலும் குறிப்பாக உணவு சாப்பிடுவதற்கு முன்பு மற்றும் உணவு சாப்பிட்ட பிறகு இருக்கும் குளுக்கோஸ் அளவுகளில் கவனம் செலுத்துங்கள். அதே நேரத்தில் HbA1C அளவுகளையும் கண்காணிப்பது அவசியம்.
மெடிக்கல் நியூட்ரிஷனல் தெரபி (MNT)
காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து மற்றும் மெலிந்த புரோட்டீன்கள் அடங்கிய கவனமாக வடிவமைக்கப்பட்ட உணவை சாப்பிடுவது அவசியம். அதே நேரத்தில் சர்க்கரையை குறைவாக சாப்பிடுவது குளுக்கோஸ் ஏற்ற இறக்கங்களை குறைப்பதற்கு உதவும்.
இதையும் படிக்கலாமே: தினமும் இந்த மூன்று விஷயங்களை செய்தாலே நீண்ட ஆயுளைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்!!!
உடல் செயல்பாடு
மிதமான அளவு உடற்பயிற்சியில் ஈடுபடுவது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, கிளைசிமிக் கட்டுப்பாட்டிற்கு உதவி செய்யும். எனினும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை பெறுவது மிக அவசியம். ஏனெனில் கர்ப காலத்தில் தனிப்பட்ட முறையில் எந்த ஒரு உடல் பயிற்சிகளும் ஈடுபடக் கூடாது.
மருந்துகளின் விளைவுகள்
கர்ப்ப காலத்தில் டயாபடீஸ் பிரச்சனையை நிர்வகிப்பதற்கு இன்சுலின் என்பது முக்கியமான ஒரு விஷயமாக அமைகிறது. ஏனெனில் இது குழந்தைக்கு உணவையும் ஆக்சிஜனையும் வழங்கும் தொப்புள் கொடியை மீறி செல்லாது. இதன் காரணமாக இன்சுலின் அளவுகளை தேவைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம். பொதுவாக உணவு சாப்பிடுவதற்கு முன்பு மற்றும் உணவு சாப்பிட்ட பிறகு ஏற்படக்கூடிய ரத்த சர்க்கரை அதிகரிப்பை சமாளிப்பதற்கு பேசல் இன்சுலின் மற்றும் பிராண்டையல் இன்சுலின் வழங்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் பிரச்சனை அனுபவிக்கும் ஒரு சில பெண்களுக்கு மெட்ஃபார்மின் பரிந்துரை செய்யப்படுகிறது. இதனுடன் சேர்ந்து ஒரு சில வாழ்க்கை முறை மாற்றங்களும் பின்பற்றப்பட வேண்டும்.
குழந்தை வளர்ச்சியை அடிக்கடி கண்காணித்தல்
வழக்கமான முறையில் குழந்தையின் வளர்ச்சியை ஸ்கேன் மூலமாக கண்காணிப்பது அவசியம். அதே நேரத்தில் பணிக்குட நீர் போதுமான அளவு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வதும், குழந்தையின் இதயத்துடிப்பை கண்காணிப்பதும் எந்த ஒரு கர்ப்ப கால சிக்கல்களை ஆரம்பத்தில் கண்டறிவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.