வயதானவர்கள் தங்களுடைய நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பின்பற்ற வேண்டிய டிப்ஸ்!!!

Author: Hemalatha Ramkumar
1 October 2024, 6:53 pm

மோசமான நுரையீரல் ஆரோக்கியம் என்பது கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான பிரச்சனை. ஏனெனில் இதனால் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய ஆபத்துகள் ஏற்படலாம். அதிலும் குறிப்பாக உங்களுக்கு வயதாகும் பொழுது உங்களுடைய நுரையீரல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது இன்னும் கூடுதல் முக்கியத்துவத்தை பெறுகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான வயதானவர்களிடையே நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடை நீக்கி நமது உடலுக்கு போதுமான அளவு ஆக்ஸிஜனை வழங்குவதில் நுரையீரல்கள் முக்கிய பங்கு கொண்டுள்ளன. 

பல்வேறு காரணிகள் நுரையீரலின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். உதாரணமாக அதிகப்படியாக புகைபிடிப்பது, காற்று மாசுபாடு, அடிக்கடி நுரையீரல் சம்பந்தப்பட்ட தொற்றுகளுக்கு ஆளாவது மற்றும் நாள்பட்ட நுரையீரல் பிரச்சனைகள் போன்றவை ஆஸ்துமா டயாபடீஸ் மற்றும் இதய சம்பந்தப்பட்ட நோய்கள் வயதானவர்களில் நுரையீரல் பிரச்சனைகளை இன்னும் மோசமாக்கலாம். 

வயதானவர்களில் மோசமான நுரையீரல் ஆரோக்கியத்தை உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறிகள்  

அன்றாட வேலைகளை செய்யும் போது தொடர்ச்சியான இருமல், மூச்சுத் திணறல் போன்றவை, மூச்சு விடும் பொழுது விசில் சத்தம், சோர்வு மற்றும் நெஞ்சை இறுக்கிப் பிடிக்கும் உணர்வு ஆகியவை மோசமான நுரையீரல் ஆரோக்கியத்திற்கான முக்கியமான அறிகுறிகள். இது மாதிரியான அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். 

இப்போது வயதானவர்களில் நுரையீரல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு உதவும் ஒரு சில குறிப்புகளை பார்ப்போம்:-

புகை பிடிப்பதை தவிர்த்தல் அதிகப்படியாக புகைபிடிப்பது வயதானவர்களில் நுரையீரல் பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாக அமைகிறது. இதனால் பிராங்கைட்டிஸ், எம்பைசிமா மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படலாம். அதேபோல புகை பிடிக்காதவர்கள் புகை பிடிப்பவர்கள் வெளியிடும் புகையை சுவாசிப்பதும் தீங்கு விளைவிக்கும். இதனால் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு நாள்பட்ட நுரையீரல் நோய்கள் உருவாகலாம். 

வீட்டிற்குள் உள்ள காற்றை சுத்தமாக வைக்கவும் 

Health tips - update News 360

தரமான காற்று உங்களுடைய நுரையீரல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு கொண்டுள்ளது. ஒருவேளை உங்களுக்கு ஆஸ்துமா அல்லது வேறு ஏதேனும் சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் உங்கள் வீட்டிற்குள் இருக்கும் காற்று சுத்தமாக இருப்பதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு ஏர் பியூரிஃபையர்களை நீங்கள் பயன்படுத்தலாம். மேலும் வீட்டை அவ்வப்போது சுத்தம் செய்வது மற்றும் உங்களுடைய சுற்றுச்சூழலை சுகாதாரமாக வைப்பது அவசியம்.  

மேலும் படிக்க: நுரையீரல் ஆரோக்கியம் காக்கும் யோகா பயிற்சிகள்!!!

ஆரோக்கியமான உணவு

ஆரோக்கியமான மற்றும் சரிவுகித உணவை சாப்பிட்டு வந்தால் மட்டுமே உங்களுடைய நுரையீரல் ஆரோக்கியம் உட்பட உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும். தொற்றுகளை எதிர்த்து போராடுவதற்கு உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குங்கள். பழங்கள், காய்கறிகள், நட்ஸ், விதைகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றை சாப்பிட உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களை ஊக்குவியுங்கள். 

ஆக்டிவாக இருக்கவும் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பது உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க அவசியம். அதிலும் குறிப்பாக உங்களுடைய நுரையீரல்களுக்கு இது மிகவும் தேவை. நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும் பொழுது அது உங்களுடைய ஸ்டாமினாவை அதிகரித்து, உங்கள் நுரையீரல்களின் திறனை மேம்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல் உங்களுடைய நுரையீரல் தசைகள் வலிமை பெற்று, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதற்கு நீங்கள் நடைப்பயிற்சி, நீச்சல், ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் யோகா போன்றவற்றை செய்யலாம். 

தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் 

காய்ச்சல் மற்றும் நிமோனியா போன்ற சுவாச தொற்றுகள் வயதானவர்களுக்கு உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமையலாம். அதிலும் குறிப்பாக மோசமான நுரையீரல் ஆரோக்கியம் கொண்டவர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எனவே அவ்வப்போது இதற்கான தடுப்பூசைகளை போட்டுக்கொள்ள மறக்காதீர்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Keerthy Suresh new glamorous look தாலியுடன் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 189

    0

    0