அதிக நேரம் லேப்டாப் முன்னாடி செலவு செய்யறவங்க முதுகெலும்பை கவனிச்சுக்க உதவும் டிப்ஸ்!!!

Author: Hemalatha Ramkumar
17 December 2024, 10:29 am

முதுகெலும்பு என்பது தண்டுவடத்தை பாதுகாக்கும் மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தில் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கக்கூடிய ஒரு சிக்கலான அமைப்பு. நாம் எழுந்து நடமாடுவதற்கு முதுகெலும்பின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். இந்த டிஜிட்டல் யுகத்தில் நாம் பெரும்பாலான நேரத்தை மேசை முன்பு நாற்காலியில் அமர்ந்தவாறு செலவிடுகிறோம். நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பதால் நம்முடைய முதுகெலும்புக்கு அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் தசைகள் இறுக்கமாகி, நெகிழ்வுத் தன்மை குறைந்து, முதுகு வலி ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாகிறது.

அதிலும் குறிப்பாக உங்களுடைய நாற்காலியின் உயரம், மேசையமைப்பு அல்லது மானிட்டர் அல்லது லேப்டாப் நிலை சரியாக இல்லாவிட்டால் அது மோசமான தோரணைக்கு வழிவகுத்து, அதன் விளைவாக முதுகெலும்பின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இதனால் சியாடிகா, செரிமான கோளாறுகள், நுரையீரலின் திறன் குறைந்து போதல் போன்ற மோசமான நோய்களுக்கு வழிவகுக்கலாம். எனவே ஒருவேளை நீங்கள் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும் ஒரு நபராக இருக்குமாயின் உங்களுடைய முதுகெலும்பின் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு நிபுணர்கள் பரிந்துரை செய்யும் ஒரு சில குறிப்புகளை பற்றி பார்க்கலாம்.

காலையில் நீட்சி பயிற்சிகள் 

உங்களுடைய நாளை ஒரு சில நீட்சி பயிற்சிகளை செய்வதன் மூலமாக நீங்கள் ஆரம்பிக்கலாம். அதனை செய்யும் பொழுது உங்களுடைய முதுகெலும்புக்கு அதிக கவனம் கொடுப்பதற்கு முயற்சி செய்யுங்கள். காலையில் முதுகை வளைத்து நெளிப்பது அதில் ஏற்பட்டுள்ள இறுக்கத்தை குறைத்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

குறுகிய இடைவெளிகள்

நீங்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை 5 நிமிடங்களாவது நாற்காலியில் இருந்து எழுந்து அங்கும் இங்குமாக நடப்பது போன்றவற்றை செய்வது நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கும்.

நல்ல ஆதரவு வழங்கும் நாற்காலி 

நீங்கள் கூன் விழுந்தவாறு உட்காருவதை தவிர்ப்பதற்கு 90 டிகிரி கோணத்தில் அமைக்கப்பட்டுள்ள நல்ல ஒரு நாற்காலியை தேர்வு செய்யுங்கள். உங்களுடைய தொடை பகுதி நாற்காலியால் முழுவதுமாக ஆதரவு பெற்றிருக்க வேண்டும். மேலும் ஸ்கிரீன் உங்களுடைய கண்களின் நிலைக்கு சரியாக வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

பேக் பேக்குகள் 

நீங்கள் முதுகில் மாட்டிக் கொண்டிருக்கும் பேக் பேக்குகள் அதிக எடை கொண்டதாக இருக்கக் கூடாது. மேலும் அது தொங்குவதை தவிர்ப்பதற்கு அதில் சரியான ஸ்ட்ராப்புகள் இருப்பதை உறுதி செய்யுங்கள். ஒருவேளை உங்களுடைய பேக் பேக் இடுப்பு பகுதியில் தொங்குமாயின் அது முதுகு மற்றும் தோள்பட்டைக்கு அதிக அழுத்தத்தை உருவாக்கும்.

இதையும் படிச்சு பாருங்க: முட்டையை வைத்து பாயாசமா… அதுவும் முட்டை வாசனை கொஞ்சம் கூட வராம…!!!

கீழ் முதுகுக்கு குஷன்

உங்களுடைய கீழ் முதுகுக்கு ஆதரவு வழங்க நல்ல ஒரு குஷனை பயன்படுத்துங்கள். இதனை பயன்படுத்துவது நீங்கள் நிமிர்ந்து நேராக உட்காருவதற்கு உதவும்.

மணிக்கட்டை சரியாக வைத்தல் 

ஒரு சிலர் டைப் செய்யும் பொழுது அல்லது மவுஸ் பயன்படுத்தும் பொழுது மணிக்கட்டுகளை லேப்டாப் மீது வைத்திருப்பார்கள். இவ்வாறு செய்வது உங்களுடைய விரல்களில் அழுத்தத்தை ஏற்படுத்தி அதனால் முதுகு, கழுத்து மற்றும் தோள்பட்டைக்கு பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

சரியான தோரணை 

சரியான தோரணையை கொண்டிருப்பது மிகவும் அவசியம். நேராக நிமிர்ந்து தோள்பட்டைகளை ரிலாக்ஸாக வைத்து, கால்களை தரையில் தட்டையாக வைத்தவாறு அமருங்கள். மேசையை  நோக்கி வளைந்து உட்காருவதை தவிர்க்கவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • maharaja movie director got bmw car gift மாபெரும் வெற்றியை ருசித்த மகாராஜா…இயக்குனருக்கு கிடைத்த விலையுயர்ந்த பரிசு..!
  • Views: - 62

    0

    0

    Leave a Reply