தாய்மை என்பது பல ஆச்சரியங்கள் மற்றும் சவால்கள் நிறைந்த மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான பயணமாகும். இதில் உங்களுடைய தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிப்பதில் உணவு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் தாய்ப்பால் கொடுப்பது அவசியம். குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்களுக்கு கட்டாயமாக தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.
தாய்ப்பாலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய காரணம் என்ன?
தாய்ப்பால் என்பது குழந்தைக்கு அத்தியாவசிய போஷாக்கை வழங்குவது மட்டுமல்லாமல் அது பல்வேறு ஆன்டிபாடிகளின் களஞ்சியமாக திகழ்கிறது. இந்த ஆன்டிபாடிகள் தொற்றுகள் மற்றும் இன்ஃபான்ட் டெத் சிண்ட்ரோம் போன்றவை ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது. மேலும் தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்வதற்கு உதவுகிறது.
குழந்தை பிறந்த உடனேயே நீங்கள் சீம்பாலை உற்பத்தி செய்ய துவங்குவீர்கள். இந்த சீம்பாலில் ஆன்டிபாடி அதிகம் இருக்கும். மேலும் இது உங்களுடைய குழந்தைக்கு தேவையான நீர்சத்தை வழங்கி குழந்தையை தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது. ஒரு சில நாட்களில் இந்த சீம்பால் வழக்கமான பாலாக மாறும். ஆரம்பத்தில் குழந்தை உடல் எடை குறைவது சகஜம்தான். ஆனால் அதன்பிறகு நீங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க கொடுக்க அவர்களின் உடல் எடை அதிகரிக்கும். ஒருவேளை உங்களுக்கு உடல் நலக்குறைவுகள் ஏற்பட்டால் உங்களுடைய தாய்ப்பாலில் உள்ள ஆன்டி பாடிகள் குழந்தைக்கு மாற்றப்படும். இது குழந்தைக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.
தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
தாய்ப்பாலில் எளிதில் செரிமானம் ஆகும் கேஸின் மற்றும் வே போன்ற புரோட்டீன்கள் உள்ளன. இவை வளர்ச்சிக்கு அவசியமான அமினோ அமிலங்களை கொடுக்க கூடியவை. வே புரதங்களில் பாக்டீரியாக்களுக்கு எதிரான பண்புகள் உள்ளது. மேலும் தாய்ப்பாலில் உள்ள ஒமேகா-3 மற்றும் ஒமேகா 6 போன்ற கொழுப்புகள் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் அறிவுதிறன் செயல்பாட்டுக்கு பங்களிக்கிறது.
தாய்ப்பாலில் காணப்படும் கார்போஹைட்ரேட்டுகள் தேவையான ஆற்றலை வழங்கி குடலில் உள்ள நன்மை தரும் பாக்டீரியாக்களுக்கு ஆதரவு வழங்குகிறது. இதனால் செரிமான ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது. மேலும் இது தவிர தாய்ப்பாலில் வைட்டமின்கள் ஏ, டி, இ மற்றும் கே போன்றவை நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஆதரவு அளிப்பது, பார்வை மேம்பாடு, எலும்பு ஆரோக்கியம் போன்ற நன்மைகளை வழங்குகிறது. அது மட்டுமல்லாமல் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் ஜிங்க் போன்ற தாதுக்களும் தாய்ப்பாலில் உள்ளது. இவை எலும்பு வளர்ச்சி, நொதி செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பங்களிக்கிறது.
தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதற்கு தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய குறிப்புகள் அதிக கலோரிகள் நிறைந்த சரிவிகித உணவை தினமும் சாப்பிடுங்கள்.
கால்சியம் நிறைந்த உணவுகள், இரும்பு சத்து அதிகம் உள்ள மூலங்கள் மற்றும் மெலிந்த புரதங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
போதுமான அளவு திரவங்களை பருகுங்கள்.
காஃபின் எடுத்து கொள்வதை முடிந்த அளவு குறைத்துக் கொள்வது நல்லது.
போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் டி போன்ற வைட்டமின் சப்ளிமெண்ட்களை மருத்துவரின் ஆலோசனையை பெற்று சாப்பிடவும்.
ஏதேனும் உணவுகளுக்கு உங்களுக்கு சென்சிடிவிட்டி உள்ளதா என்பதை அவ்வப்போது கண்காணிக்கவும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டாம்.
நிலையான ஒரு உணவு உண்ணும் அட்டவணையை பின்பற்றவும்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.