உங்களோட குழந்தை உங்க மேல அதிக லவ்வோடு இருக்க நீங்க செய்ய வேண்டிய சின்ன சின்ன விஷயங்கள்!!!

Author: Hemalatha Ramkumar
20 December 2024, 3:44 pm

பெற்றோர் மற்றும் குழந்தைக்கு இடையிலான அன்பு என்பது விலைமதிப்பில்லாதது. இந்த பந்தத்தை அமைப்பதற்கு அன்பு நம்பிக்கை மற்றும் புரிதல் அவசியம். சிறிய மற்றும் அதே நேரத்தில் யோசனைப்பூர்வமான சில செயல்கள் உங்களுடைய பந்தத்தை வலுப்படுத்தி உங்கள் குழந்தையை அன்பானவராக மாற்றும்.

உங்களுடைய குழந்தை அவருடைய யோசனைகள் மற்றும் உணர்வுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் பொழுது அதனை கவனமாக கேட்க வேண்டுமே தவிர இடையில் எந்த ஒரு குத்தல் குறையும் சொல்லக்கூடாது. அவர்களுடைய இடத்தில் இருந்து யோசித்து, அவர்களை புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் நினைப்பதை கூறுவதற்கு நீங்கள் அவர்களை பாதுகாப்பாக உணர வைக்க வேண்டும். இது நம்பிக்கையை வலுப்படுத்தி, மீண்டும் ஏதேனும் ஒரு விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு ஏற்ற சூழலை அமைத்துக் கொடுக்கும்.

விளையாட்டு புத்தகம் வாசிப்பது அல்லது பேசிக்கொண்டு இருப்பதே போன்ற உங்கள் குழந்தை விரும்பும் செயல்பாடுகளை அவர்களோடு சேர்ந்து செய்யுங்கள். இவ்வாறு நீங்கள் பகிர்ந்து கொள்ளும் தருணங்கள் மகிழ்ச்சியான நினைவுகளை உருவாக்கி, நீங்கள் அவர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதை உணர்த்தும்.

உங்கள் குழந்தையின் சிறிய வெற்றியைக் கூட நீங்கள் கொண்டாட வேண்டும் மற்றும் அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். பரிட்சையில் நல்ல மதிப்பெண் எடுப்பது அல்லது ஒரு புதிய திறனை கற்றுக் கொடுப்பது போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்களுடைய தன்னம்பிக்கையை அதிகரித்து, அவர்களுக்கு நீங்கள் ஒரு மிகப்பெரிய சியர் லீடர் என்பதை உணர்த்துங்கள்.

கட்டி பிடிப்பது, முத்தம் கொடுப்பது மற்றும் கைகளைப் பிடித்துக் கொள்வது அன்பையும், பாதுகாப்பையும் பரிமாறும் விஷயங்கள். உடல் ரீதியாக தொடும்பொழுது அவர்களுக்கு நீங்கள் கதகதப்பையும், நெருக்கத்தையும் தருகிறீர்கள். நீங்கள் அவர்கள் மீது எவ்வளவு அக்கறையோடு இருக்கிறீர்கள் என்பதை இந்த விஷயங்கள் வெளிப்படுத்தும்.

குழந்தைகள் எந்த ஒரு விஷயத்தையுமே டிரையல் அண்ட் எரர் மூலமாகவே கற்றுக் கொள்வார்கள். எனவே அவர்கள் செய்யும் தவறுகளுக்கு கோபப்படுவதற்கு பதிலாக பொறுமையாக அவர்களுக்கான வழிகாட்டுதலை வழங்குங்கள். கனிவோடு நீங்கள் சொல்லிக் கொடுக்கும் பொழுது அது அவர்களுடைய தன்னம்பிக்கையை அதிகரிக்கும். மேலும் உங்கள் இருவருக்குமான உறவையும் வலுப்படுத்தும்.

உங்களுடைய குழந்தை பருவத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றிய கதைகள் அல்லது சிரிப்பை உண்டாக்கக்கூடிய தருணங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இது ஒரு மகிழ்ச்சிப்பூர்வமான சூழலை உருவாக்கி, உங்களுடைய குழந்தையை சந்தோஷமாக வைத்துக் கொள்ளும்.

உங்கள் குழந்தைக்கு விருப்பமான விஷயங்களை கண்டுபிடித்து, அதில் அவர்கள் மேலும் முன்னேறுவதற்கு ஊக்கத்தை வழங்குங்கள். வரைதல், விளையாட்டு அல்லது மியூசிக் போன்ற அவர்களுடைய ஓய்வு நேர செயல்பாடுகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இது அவர்களுடைய திறன்களை வளர்ப்பது மட்டுமல்லாமல், அவர்களுக்கு நீங்கள்  எத்துனை மதிப்பு கொடுக்கிறீர்கள் என்பதையும் உணர்த்தும்.

உங்களுடைய தவறுகளை ஒப்புக்கொண்டு, மன்னிப்பு கேட்பது தன்னடக்கத்தையும், மரியாதையும் காட்டும். இவ்வாறு நீங்கள் செய்வது உங்கள் குழந்தைக்கு நீங்கள் மரியாதை கொடுக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தும். மேலும் இந்த நேர்மைதன்மை உங்கள் இருவருக்குமான அன்பை அதிகமாக்கும்.

இதையும் படிச்சு பாருங்க:  பாலா . . கேழ்வரகா… கால்சியம் எதுல அதிகமா இருக்குன்னு பார்த்திடுவோமா…???

வாரம் ஒரு முறை நைட் மூவி பார்ப்பது அல்லது படுக்கை நேரத்தில் சில வழக்கங்களை பின்பற்றுவது போன்ற விஷயங்களை நீங்கள் செய்யும் பொழுது அந்த நாளுக்காக உங்கள் குழந்தை காத்திருப்பதை உங்களால் கவனிக்க முடியும். இந்த தொடர்ச்சியான அர்த்தமுள்ள அனுபவங்கள் நல்ல நினைவுகளை சேகரிப்பதற்கு உதவும்.

உங்கள் குழந்தை மீது நீங்கள் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதை தினமும் வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலமாக அவர்களுக்கு வெளிப்படுத்துங்கள். சிறு குறிப்புகள் எழுதுவது, சிறிய பொருட்கள் மூலமாக சர்ப்ரைஸ் கொடுப்பது அல்லது சத்தமாக நீங்கள் நினைப்பதை சொல்வது போன்றவை உதவும். தொடர்ச்சியாக நீங்கள் அவர்களுக்கு அன்பை வெளிப்படுத்தும் பொழுது அவர்கள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்ந்து, உங்கள் இருவருக்குமான பந்தம் ஆழமாகும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…