எப்போதும் ஆக்டிவா இருக்கணும் சொல்றாங்களே அந்த மாதிரி இருக்க ஏதாவது டிப்ஸ் இருக்கா…???
Author: Hemalatha Ramkumar7 November 2024, 5:51 pm
நம் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் நம் மனநலனிற்கும் மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது. இன்று பல நோய்கள் நம்முடைய வாழ்க்கை முறையின் காரணமாகவே ஏற்படுகிறது. பலர் பின்பற்றி வரும் உட்கார்ந்த வாழ்க்கை முறை ஏகப்பட்ட நோய்களை குவித்து வருகிறது. எனவே இந்த பதிவில் உங்களை எப்பொழுதும் ஆக்டிவாக வைத்துக் கொள்ள உதவும் சில குறிப்புகள் பற்றி பார்க்கலாம்.
இலக்குகளை அமைத்துக் கொள்ளுங்கள்
எப்பொழுதும் சிறிய அதே நேரத்தில் உங்களால் அடையக்கூடிய இலக்குகளை அமைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக தினமும் 20 நிமிடங்கள் நடப்பது அல்லது ஏதாவது வலிமை பயிற்சியில் ஈடுபடுவது போன்றவற்றை நீங்கள் செய்யலாம். இவ்வாறு நீங்கள் முன்னேறும் பொழுது பொறுமையாக உங்களுடைய உடற்பயிற்சிக்கான நேரத்தையும் தீவிரத்தையும் அதிகரிக்கலாம்.
நாள் முழுவதும் நடமாட்டம்
நீங்கள் அங்கும் இங்கும் நடமாடுவதற்கு சிறிய வழிகளை தேடுங்கள். எலிவேட்டருக்கு பதிலாக படிக்கட்டுகளை பயன்படுத்துவது, வாகனங்களை சற்று தூரமாக பார்க் செய்வது அல்லது இடைவேளை கிடைக்கும் பொழுது எழுந்து அங்கும் இங்குமாக நடப்பது போன்றவற்றை செய்யலாம்.
உங்களுடைய வழக்கம் உங்களுடைய அன்றாட வழக்கத்தை எப்பொழுதும் ஒரே மாதிரியாக வைத்துக் கொள்ளாமல் வெவ்வேறு வித்தியாசமான விஷயங்கள் மற்றும் சவால்களை ஏற்றுக் கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் ஓடுதல் அல்லது சைக்கிள் ஓட்டுதல், யோகா, பைலேட் அல்லது ஆடல் போன்றவற்றை கூட தேர்வு செய்யலாம்.
உங்களுக்கு பிடித்தமான வொர்க்-அவுட்டுகள்
எப்பொழுதும் உங்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்யும் போது அதனை நீங்கள் அதிக ஆர்வத்தோடும், ஈடுபாடோடும் செய்வீர்கள். எனவே நீச்சல் அல்லது உங்களுக்கு பிடித்த விளையாட்டு விளையாடுவது போன்றவற்றை செய்வதன் மூலமாக உங்களுக்கு மகிழ்ச்சியும் அதே நேரத்தில் உங்களுக்கு உங்கள் உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
வார்ம்-அப் செய்வது
உடற்பயிற்சி செய்வதற்கு 5 முதல் 10 நிமிடங்களுக்கு முன்னர் மற்றும் அதன் பின்னர் மற்றும் கூல் டவுன் செய்வது மிகவும் அவசியம். இது உங்களுடைய தசைகளை அடுத்தடுத்த செயல்பாடுகளுக்கு தயார் செய்யும். மேலும் உடற்பயிற்சிக்கு பிறகு உங்களை நீங்கள் அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இது தசை மீண்டு வருவதற்கு உதவும்.
இதையும் படிக்கலாமே: கொலஸ்ட்ரால் பிரச்சனையை ஏழே நாட்களில் சரி செய்வதற்கான பிரம்மாஸ்திரம்!!!
வேலைகளுக்கிடையே சிறிய நடமாட்டம்
ஒரு மணி நேரத்திற்கு மேல் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டாம். ஒரு மணி நேரம் அமர்ந்திருந்த பிறகு 5 முதல் 10 நிமிடங்கள் இடைவெளி எடுத்துக்கொண்டு நடக்கலாம் அல்லது எளிமையான உடற்பயிற்சிகளை செய்யலாம். இது உங்களுடைய தசைகளில் உள்ள இறுக்கத்தை குறைத்து உங்களுக்கு அதிக ஆற்றலை வழங்கும்.
தண்ணீர் மற்றும் சரிவிகித உணவு
தண்ணீர் உங்களுடைய தசைகளுக்கு தேவையான மூலப்பொருளை வழங்குகிறது. எனவே நாள் முழுவதும் அதிக அளவு தண்ணீர் பருகுங்கள். அதே நேரத்தில் ப்ரோட்டீன், கார்போஹைட்ரேட், ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள்.
யோகாவை முயற்சி செய்யலாம்
காயங்களை தவிர்ப்பதற்கு உங்கள் உடலில் நெகிழ்வுத் தன்மை அதிகமாக இருக்க வேண்டும். எனவே நீட்சி பயிற்சிகள் அல்லது யோகா போன்றவற்றை செய்வதன் மூலமாக இதனை நீங்கள் அதிகப்படுத்தலாம்.