உலக நீரிழிவு நோய் தினம் 2024: இரத்த சர்க்கரையை சீராக பராமரிக்க என்னென்ன வழி இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்!!!

Author: Hemalatha Ramkumar
14 November 2024, 12:02 pm

இன்று உலக நீரிழிவு தினம்  அனுசரிக்கப்படுவதால் நம்முடைய ஆயிலை அதிகரித்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு சில முக்கியமான வாக்குறுதிகளை எடுத்துக் கொள்ள இதுவே சிறந்த நேரம். நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் ரத்த சர்க்கரை அளவுகளை பராமரிப்பது என்பது மிக மிக முக்கியமானது. அதிலும் குறிப்பாக டயாபடீஸ் மற்றும் டயாபடீஸ்க்கு முந்தைய நிலையை கையாளுபவர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அன்றாட செயல்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்குவது மற்றும் வாழ்க்கை முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவது போன்றவை நம்முடைய ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கு இருக்கக்கூடிய மிக முக்கியமான படிகளில் நார்ச்சத்து, மெலிந்த புரதங்கள் மற்றும் முழு தானியங்கள் அடங்கிய சரிவிகித உணவு அடங்கும். இந்த ஊட்டச்சத்துக்கள் சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்கி ரத்த குளுக்கோஸ் அளவுகளில் திடீர் அதிகரிப்பு ஏற்படுவதை தவிர்க்க உதவும். அதுமட்டுமல்லாமல் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை தவிர்ப்பது ரத்த சர்க்கரை அதிகரிப்பை தடுக்கும். வாக்கிங், ஜாகிங் அல்லது நீட்சி பயிற்சிகள் போன்ற உடல் செயல்பாடுகளில் நீங்கள் தினமும் ஈடுபடுவது ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த எளிமையான வாழ்க்கை முறை மாற்றத்தை செய்தால் உடலின் இன்சுலினுக்கான உணர்திறன் மேம்படும். ரத்த சர்க்கரையை பராமரிப்பதற்கு பல வழிகள் உள்ளன அவற்றில் ஒவ்வொன்றாக இப்போது பார்க்கலாம். 

மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது 

மன அழுத்தம் என்பது இரத்த சர்க்கரை அளவுகளை அதிகரிப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க காரணியாக அமைகிறது. நீங்கள் பதட்டமாக இருக்கும் பொழுது ரத்த சர்க்கரை அளவுகள் பொதுவாக அதிகரிக்கும். எனவே மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு உடற்பயிற்சி, சரியான உணவுகளை சாப்பிடுவது, மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வது, அதே நேரத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய செயல்பாடுகளில் ஈடுபடுவது போன்றவற்றை செய்யுங்கள். 

இதையும் படிக்கலாமே: மழைக்கு இதமா ஈவ்னிங் டைம்ல கெட்டி சட்னி கூட இந்த சேமியா அடைய சாப்பிட்டு பாருங்க… அட அட அட பிரமாதமா இருக்கும்!!!

அடிக்கடி ஹெல்த் செக்கப் செய்வது 

வழக்கமான முறையில் ஹெல்த் செக்கப் அதாவது ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு முறையாவது ஹெல்த் செக்கப் செய்து உங்களுடைய கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் போன்றவற்றை கண்காணிப்பது முக்கியம். 

உடற்பயிற்சி 

இதற்காக நீங்கள் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. சிறிய, உங்களால் முடிந்த உங்கள் ஆரோக்கியத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய உடற்பயிற்சிகளை செய்தாலே போதும். தினமும் 40 நிமிடங்கள் வாக்கிங் செல்வது, 15 நிமிடங்கள் நீட்சி பயிற்சிகளை செய்வது அல்லது ஒவ்வொரு நாள் காலையும் 15 நிமிடங்களுக்கு மிதமான தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகளை செய்வது உதவும். இந்த வழக்கத்தை பின்பற்றுவது ரத்த சர்க்கரையை மட்டுமல்லாமல் இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தையும் குறைக்கும். 

புகைபிடிப்பதை தவிர்க்கவும் 

பலர் புகைபிடிப்பதால் ஏற்படக்கூடிய பல்வேறு உடல்நல பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர். ஆனால் உண்மையில் புகைப்பிடிப்பதால் இதய நோய், கண் தொடர்பான நோய்கள், பக்கவாதம், சிறுநீரக நோய், ரத்த நாளம் சம்பந்தப்பட்ட நோய்கள், நரம்பு சேதம் மற்றும் பாத நோய்கள் ஏற்படலாம். எனவே புகைப்பிடிப்பதை முற்றிலுமாக தவிர்ப்பது அவசியம்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 138

    0

    0