காலரா தொற்றில் இருந்து தப்பிக்க என்ன பண்ணலாம்…???

Author: Hemalatha Ramkumar
23 October 2024, 10:59 am

காலரா என்பது விப்ரியோ காலரை என்ற பாக்டீரியா காரணமாக ஏற்படக்கூடிய ஒரு மோசமான தொற்று நோய். இது குறிப்பாக அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவு மூலமாக பரவுகிறது. இதனால் வயிற்றுப்போக்கு, டீஹைட்ரேஷன் மற்றும் மோசமான சூழ்நிலையில் இறப்பு கூட ஏற்படலாம். எனினும் காலராவை சரியான சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு மூலமாக நம்மால் தடுக்க முடியும். எனவே காலரா வராமல்  நம்மை பாதுகாப்பதற்கு நாம் என்னென்ன விஷயங்களை செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம். 

பாதுகாப்பான குடிநீர் எப்போதும் பாதுகாப்பான சுத்தமான தண்ணீரை குடிக்கவும். பல் துலக்க மற்றும் சமைக்க கொதிக்க வைக்கப்பட்ட மற்றும் வடிகட்டப்பட்ட தண்ணீரை பயன்படுத்தவும். ஆறுகள், குளங்கள் அல்லது குழாய் தண்ணீரை குடிப்பதை தவிர்த்து விடவும். 

சரியான சுகாதாரம் எப்பொழுதும் கைகளை சோப்பு மற்றும் சுத்தமான தண்ணீர் பயன்படுத்தி கழுவ வேண்டும். அதிலும் குறிப்பாக சாப்பிடுவதற்கு முன்பு அல்லது உணவு தயாரிக்கும் போது கழிவறையை பயன்படுத்திய பிறகு மற்றும் கழிவுகளை கையாண்ட பிறகு கட்டாயமாக கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். சோப்பு மற்றும் தண்ணீர் இல்லாத பட்சத்தில் ஆல்கஹால் அடிப்படையிலான ஹேண்ட் சானிட்டைசரை பயன்படுத்தலாம். 

ஃபிரஷாக சமைக்கப்பட்ட உணவுகள் 

உணவுகளை பச்சையாக சாப்பிடுவது அல்லது பாதி வேக வைத்த உணவுகளை சாப்பிடுவது அதிலும் குறிப்பாக கடல் சார்ந்த உணவுகளை இந்த மாதிரி சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் அவற்றில் காலரா பாக்டீரியா இருக்கலாம். எப்பொழுதும் உணவை நன்றாக சமைத்து அது சூடாக இருக்கும் போதே சாப்பிடவும். பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கு முன்பு அவற்றை தண்ணீரில் கழுவவும். முடிந்தால் அவற்றை தோலுரித்து பயன்படுத்தவும். 

இதையும் படிக்கலாமே: தீபாவளி ஸ்பெஷல்: குட்டி குட்டியா டேஸ்டா பட்டன் பாதுஷா ரெசிபி!!!

ரோட்டோர கடைகளில் விற்கப்படும் உணவுகள்

தெருவோரங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகள் பெரும்பாலான நேரத்தில் சுகாதாரமற்ற சூழ்நிலையில் சமைக்கப்பட்டவையாக இருக்கும். எனவே நீங்கள் காலரா பரவுகின்ற பகுதியில் வாழ்ந்தால் முடிந்தவரை ரோட்டோர கடைகளில் உணவு சாப்பிடுவதை தவிர்க்கவும். 

தடுப்பூசி 

காலரா அதிகமாக பரவுகின்ற பகுதிகளில் இருப்பவர்களுக்கு தடுப்பூசி பாதுகாப்பு வழங்கும். காலராவுக்கு தற்போது வாய் வழி மருந்தும் கிடைக்கிறது. எனவே தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்கு முன்பு மருத்துவரை ஆலோசித்து அவரின் அதன்படி நடப்பது நல்லது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்