இரத்தத்தை சுத்தப்படுத்தவும், தெளிவான சருமத்திற்கும் நீங்கள் ஃபாலோ பண்ண வேண்டிய விஷயங்கள்!!!
Author: Hemalatha Ramkumar21 January 2023, 5:22 pm
உடலில் இருக்கும் நச்சுப் பொருட்கள் முதல் நாம் பின்பற்றும் சில உணவுப் பழக்கம் வரை – சருமப் பிரச்சனைகள் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். முகப்பருவை ஊக்குவிப்பதில் ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றாலும், ஸ்டெராய்டுகள் போன்ற சில வகையான மருந்துகள் மற்றும் தரமற்ற அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் உடலில் நிறைய நச்சுகள் சேர்ந்து, தோலில் வெடிப்புகள் ஏற்படலாம்.
தெளிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை உறுதி செய்வதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் சுகாதார வழங்குநரைக் கலந்தாலோசிப்பதன் மூலம் உங்கள் முகப்பருவின் மூல காரணத்தை அடையாளம் காண்பது சிறந்தது. இரத்தத்தை சுத்தப்படுத்தவும் முகப்பருவை எதிர்த்துப் போராடவும் உதவும் சில குறிப்புகளை இப்போது பார்ப்போம்.
*சாக்லேட், கோலா போன்ற உணவுப் பொருட்களை அடிக்கடி உட்கொள்வது சருமத்தையும் பாதிக்கும்.
*பிட்சா, உருளைக்கிழங்கு சிப்ஸ், பொரித்த தின்பண்டங்கள் போன்ற டிரான்ஸ்ஃபேட் நிறைந்த உணவுப் பொருட்களும் முகப்பருவுக்கு வழிவகுக்கும்.
*நொறுக்கு தெனிகளை உட்கொள்வது முகப்பருவை துரிதப்படுத்தும். எனவே அவற்றை தவிர்க்க வேண்டும்.
* பழங்கள் மற்றும் காய்கறிகளை தவறாமல் உட்கொள்வது சருமத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த உதவுகிறது.
0
0