நம்மில் பெரும்பாலானவர்கள் கை, தோல் மற்றும் தலைமுடிக்கு கொடுக்கும் பராமரிப்பை கால்களுக்கு கொடுப்பதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். உங்களுடைய கைகளை நீங்கள் கவனித்துக் கொள்ளும் அதே அளவு பராமரிப்பு கால்களுக்கும் தேவைப்படுகிறது. அதிலும் குறிப்பாக கால்களை பொறுத்தவரை நல்ல சுகாதார வழக்கங்களை பின்பற்றுவது அவசியம். அழகான மற்றும் ஆரோக்கியமான கால்கள் உங்களுடைய தன்னம்பிக்கையை ஊக்குவித்து, வலியை குறைத்து, தோரணையை மேம்படுத்தும்.
அது மட்டுமல்லாமல் இது சுய பராமரிப்பு மற்றும் சுகாதாரம் பற்றிய உங்களுடைய எண்ணத்தை பிரதிபலிக்கிறது. கால் பராமரிப்பு விஷயத்தில் அலட்சியம் காட்டுவதால் பூஞ்சை தொற்றுகள், பாத வெடிப்பு மற்றும் கால்களில் துர்நாற்றம் போன்றவை ஏற்படலாம். எனவே அழகான மற்றும் ஆரோக்கியமான கால்களை பராமரித்துக் கொள்ள உதவும் சில குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
பொது இடங்களில் வெறும் காலில் நடக்க வேண்டாம்
பொது இடங்களில் செருப்பு அணியாமல் ஒருபோதும் நடக்காதீர்கள். ஏனெனில் அங்கு கிருமிகள், பாக்டீரியா மற்றும் கூர்மையான பொருட்கள் இருக்கலாம். வீட்டிலும் கூட வெறும் காலில் நடப்பதை முடிந்த அளவு குறைத்துக் கொள்வது காயங்கள் மற்றும் தொற்றுகள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கும். பொது இடங்களில் ஷூக்கள் அல்லது ஸ்லிப்பர் பயன்படுத்துவது உங்களுடைய கால்களை பாதுகாத்து நல்ல சுகாதாரத்தை பராமரிப்பதற்கு உதவும்.
கால் நகங்களை அடிக்கடி வெட்டுதல்
கால் நகங்கள் நீளமாக இருந்தால் அங்கு பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்வதற்கு தோதான இடம் கிடைத்து அதனால் தொற்றுகள் ஏற்படலாம். எனவே அடிக்கடி உங்களுடைய கால் நகங்களை சரியான முறையில் டிரிம் செய்வது இந்த மாதிரியான பிரச்சனைகளை தடுப்பதற்கு உதவும். அதே சமயத்தில் நீங்கள் உங்களுடைய கால் நகங்களை ஆரோக்கியமாக வைப்பதற்கு அதனை மிகவும் குறுகியதாக வெட்டக்கூடாது.
கால்களை அடிக்கடி கழுவவும்
உங்களுடைய கால்களை தினமும் கழுவுதல், அதிலும் குறிப்பாக நீண்ட பயணத்தை மேற்கொண்ட பிறகு கால்களை கழுவுவது நல்ல கால் சுகாதாரத்தை பேணுவதற்கு உதவும். சோப்பு மற்றும் வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு கால்களை கழுவுவது அழுக்கு, பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை அகற்றி தொற்றுகளை விரட்டும். மேலும் கால் விரல்களுக்கு இடையே ஸ்கிரப் செய்து அவற்றை முழுவதுமாக உலர வைப்பது, பூஞ்சை வளர்ச்சிகளை தடுக்கும்.
இதையும் படிக்கலாமே: வயிற்றில் சுரக்கும் அமிலம் பற்களை அரிக்குமா… அது எப்படி…???
மாய்சரைஸ் செய்தல்
ஆரோக்கியமான மற்றும் அழகான கால்களுக்கு நீங்கள் அதனை மாய்சரைஸ் செய்வது மிகவும் அவசியம். வறண்ட, விரிசல் நிறைந்த தோல் பார்ப்பதற்கு சற்று மோசமாகவும், வலி மிகுந்ததாகவும் இருக்கும். எனவே உங்கள் கால்களுக்கு நல்ல ஒரு மாய்சரைசரை பயன்படுத்துங்கள். குறிப்பாக குளித்து வந்த பிறகு அல்லது கால்களை மசாஜ் செய்த பிறகு அதில் மாய்சரைசர் பயன்படுத்துவது கால்களில் ஈரப்பதத்தை தக்க வைத்து அதனை மென்மையாக மாற்றும்.
கால்களுக்கு மசாஜ்
உங்களுடைய கால்களை வெதுவெதுப்பான எண்ணெய் அல்லது லோஷன் கொண்டு மசாஜ் செய்வதன் மூலமாக அதன் தோற்றத்தை நீங்கள் மெருகேற்றலாம். இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, சொரசொரப்பான சருமத்தை மென்மையாக்கும். மேலும் வெதுவெதுப்பான எண்ணெய் அல்லது லோஷன் கால்களுக்கு தேவையான போஷாக்கு மற்றும் ஈரப்பதத்தை வழங்கி அதனை மென்மையாக மற்றும் புத்துயிரோடு வைப்பதற்கு உதவுகிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.