முழு ஆரோக்கியத்துடன் இருக்க உங்கள் மனதையும் கொஞ்சம் கவனிச்சுக்கோங்க!!!

Author: Hemalatha Ramkumar
26 June 2022, 5:38 pm

மனநலம் பற்றி அடிக்கடி பேசப்படுகிறது. ஆனால் அது குறைவாகவே கையாளப்படுகிறது. உங்கள் முந்தைய உடற்தகுதியைப் பொருட்படுத்தாமல், மனநலப் பிரச்சினைகள் ஏற்படலாம். இதனை நிர்வகிப்பது மிகவும் அவசியம். இல்லையெனில் அது பெரிய சிக்கலில் முடிவடைந்து விடும். உங்கள் மன ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள உதவும் சில டிப்ஸ்களை இப்போது பார்க்கலாம்.

காலையில் எழுந்தவுடன், சூரிய ஒளியைப் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்:
உங்கள் வழக்கமான விழிப்பு நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன் அலாரத்தை அமைத்து சிறிது நேரம் வெயிலில் நிற்கவும். உங்கள் தொலைபேசி அல்லது செய்தித்தாள் இல்லாமல் இந்த சுய-கவனிப்புச் செயலைச் செய்வதை உறுதிசெய்யவும். காலையில் இந்த சூரிய வெளிப்பாடு உங்கள் உடல் கடிகாரத்தையும் உங்கள் ஹார்மோன் சுழற்சியையும் அமைக்கும். உங்கள் மூளையில் இருக்கும் சுரப்பிகள் இயற்கையான ஒளிக்கு பதிலளிக்க ஆரம்பித்தவுடன், உங்கள் முழு உடலும் சீராகச் செயல்படுவதோடு, உங்கள் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கும். இந்த புதிய ஆற்றல் எழுச்சியானது உங்களுக்கு புத்துணர்ச்சியூட்டுவதாகவும், மனதையும் உடலையும் மகிழ்ச்சியாகவும் உணர வைக்கும்.

சூரிய ஒளியில் இருப்பதால் வைட்டமின் D உங்கள் BPயைக் குறைக்க உதவுகிறது. மேலும் சூரியனின் தாக்கம் இரவு வரை நீடித்து உறங்கும் போது உங்களுக்கு நல்ல தூக்கத்தைத் தரும்.

வீட்டில் இருந்து வேலை செய்வதற்கான விதிகள்:
கோவிட் தொற்றுநோயில் ஆரம்பித்த இந்த போக்கு காரணமாக, பல துறைகள் இன்னும் வீட்டிலிருந்து வேலை செய்வதை ஊக்குவிக்கின்றன. நீங்கள் எவ்வளவு வேலை செய்கிறீர்கள் என்பதற்கு எல்லையை அமைத்து கோடு வரையவும். காலையில் உங்கள் கணினியில் உள்நுழைந்து, மதிய உணவு இடைவேளை மற்றும் தேநீர் இடைவேளையை எடுத்துக்கொள்வதை உறுதிசெய்து, உங்கள் சாதனங்களிலிருந்து வெளியேறுவதை உறுதிசெய்யவும்.

சோஷியல் மற்றும் ஆன்டி சோஷியலாக இருப்பது:
நாம் ஒரு விசித்திரமான உலகில் வாழ்கிறோம். நாம் எல்லா இடங்களிலும் இருக்க விரும்புகிறோம். அனைவருடனும் இணைந்திருக்க விரும்புகிறோம். நமது ஒவ்வொரு அசைவையும் பற்றி நமக்குத் தெரிந்தவர்களிடம் தெரிவிக்க ஆசைப்படுகிறோம். ஆனாலும் நாம் முன்பை விட தனிமையில் இருக்கிறோம். சமூக ஊடகங்கள் நம்மை சமூக விரோதிகளாக மாற்றியுள்ளன. அவை எதிர்பார்த்ததை விட அதிக தீங்கு விளைவிக்கும். ஒருவரின் குடும்பம் மற்றும் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படுவது மூளை செல்கள் மட்டத்தில் ஒரு நபரைப் பாதிக்கிறது. ஒருவர் தனிமையில் இருக்கும்போது மூளையின் பாகங்கள் சுருங்கி மன ஆரோக்கியத்திற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தியானம்:
நீங்கள் நினைப்பது போல் இது கடினம். தியானம் செய்வது எப்படி என்பதை அறிய ஆன்லைனில் கிடைக்கும் சில ஆப்ஸ்களை நீங்கள் பார்க்கலாம். மியூசிக் கேட்கலாம், புத்தகங்கள் படிக்கலாம். மனதை ஒருமுகப்படுத்தும் இவையும் தியானம் தான்.

உடற்பயிற்சி:
உங்கள் மன ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி எவ்வளவு நல்லது என்பதற்கு முடிவே இல்லை. உங்கள் தசைகள் மைய நிலைக்கு வரும்போது இது உங்கள் மனதைத் தளர்த்த உதவுகிறது. மேலும் இது எண்டோர்பின்கள் மற்றும் செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன்கள் உங்கள் உடலின் மகிழ்ச்சியான ஹார்மோன்கள். உங்கள் உடற்பயிற்சியின் பின்னர் அமைதியான மற்றும் நிறைவான உணர்வு, அற்புதமான இரவுநேர தூக்கத்திற்காக உங்களை சோர்வடையச் செய்யும். கூடுதலாக, நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் உடலும் பராமரிக்கப்படுகிறது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 799

    0

    0