உணவுகள் கெடாமல் இருக்கவும், அவற்றை ஃபிரஷாக வைக்கவும் பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட யுக்திகள்!!!

Author: Hemalatha Ramkumar
31 December 2022, 3:59 pm

நவீன தொழில்நுட்பங்கள் இதற்கு ஒரு தீர்வாக அமைந்தாலும், உணவைச் சேமிப்பது எளிதான காரியம் அல்ல. ஏனெனில், ஒரு உணவுப் பொருளை ஃப்ரெஷ்ஷாக வைத்திருப்பதில் சிக்கல் எழுகிறது. இருப்பினும், பண்டைய ஆயுர்வேத நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் உணவைச் சிறப்பாகச் சேமிக்க முடியும்.

இந்த உத்திகள் உணவை நீண்ட காலத்திற்குப் பாதுகாக்க உதவுகின்றன. மேலும் உணவுப் பொருளை ஃபிரஷாக வைத்திருக்க உதவுகின்றன. ஃப்ரிட்ஜ் போன்ற நவீன உணவு சேமிப்பு சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, ஆயுர்வேத முனிவர்கள் உணவை புதியதாக வைத்திருக்க எப்படி சேமிப்பது என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

வெவ்வேறு பொருட்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் மற்றும் வெவ்வேறு மரங்களிலிருந்து இலைகள் நெய், சாஸ்கள், தண்ணீர் மற்றும் பல உணவுகளை சேமிக்க பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:

பழச்சாறுகள் மற்றும் குளிர் பானங்கள்:
நவீன காலத்தில் குளிர்சாதன பெட்டிகளில் பழச்சாறுகள் மற்றும் குளிர் பானங்களை சேமிப்பது எளிது. ஆனால் அவற்றை இயற்கையாக குளிர்ச்சியாக வைத்திருக்க மற்றொரு வழி உள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, பழச்சாறுகள் மற்றும் பானங்களை வெள்ளி பாத்திரங்களில் சேமித்து வைக்கலாம். ஏனெனில் அவை இயற்கையில் குளிர்ச்சியடைகின்றன. மேலும் அவை நீண்ட காலத்திற்கு ஃபிரஷாக இருக்கும்.

நெய்
நெய்யை இரும்பு பாத்திரம் அல்லது ஜாடியில் சேமித்து வைக்க வேண்டும்.

புளிப்பு உணவு:
புளிப்பு சாஸ்கள் மற்றும் சமைத்த மோர் கல் பாத்திரங்களில் சேமிக்கப்பட வேண்டும். ஏனெனில், உலோகங்களைப் போலல்லாமல் புளிப்பு உணவுடன் கல் வினைபுரிவதில்லை. இது தவிர, புளிப்பு உணவுகளை இரும்பு அல்லது செம்பு பாத்திரங்களில் சேமித்து வைக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊறுகாய்:
கண்ணாடி, பாறை அல்லது படிகங்களால் ஆன பாத்திரங்களில் சேமிக்கப்படும் போது ஊறுகாய்கள் ஃபிரஷாகவே இருக்கும்.

  • Vidamuyarchi record-breaking release ரிலீசுக்கு முன்னே வரலாற்று சாதனை படைக்குமா ‘விடாமுயற்சி’…ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு..!