எவ்வளவு வெயில் அடிச்சாலும் நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்க இத குடிங்க!!!

Author: Hemalatha Ramkumar
18 May 2022, 9:53 am

ஆண்டு முழுவதும் தண்ணீர் அருந்துவதும், நீரேற்றமாக இருப்பதும் நல்லது என்றாலும், கோடை காலத்தில் உடலில் உள்ள நீர்ச்சத்து வியர்வை வடிவில் விரைவாக இழக்க நேரிடும்.

இதன் காரணமாகவே அவ்வப்போது இனிமையான மற்றும் நீர்ச்சத்து நிறைந்த ஏதாவது ஒன்றை பருகுவது முக்கியம். சாதாரண தண்ணீரைத் தவிர, நீங்கள் குளிரூட்டிகளையும் தேர்வு செய்யலாம். தேங்காய் தண்ணீரைக் காட்டிலும் சிறந்த குளிரூட்டி எதுவாக இருக்கும்?

இந்த கோடை வெப்பத்தில் நீரிழப்புக்கு எதிராக இது மிகவும் புத்துணர்ச்சியூட்டும் பானம். இதனை எவ்வாறு செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
2 கப் தேங்காய் தண்ணீர்
½ எலுமிச்சை தோல்
1 ஆரஞ்சு
1 டீஸ்பூன் தேன்
3-4 ஐஸ் கட்டிகள்

முறை
– அனைத்து பொருட்களையும் ஒரு பிளெண்டரில் சேர்த்து அரைக்கவும்.
– ஒரு டம்ளரில் வடிகட்டி பருகி மகிழுங்கள்.

ஆரஞ்சு கலந்த இந்த தேங்காய் பானத்தில் உள்ள எலுமிச்சை மற்றும் தேனில் உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட்டுகள், பொட்டாசியம் மற்றும் சோடியம் உள்ளது.

எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களின் தோல் மற்றும் கூழ் எலக்ட்ரோலைட்களை அதிகமாக கொண்டு உள்ளது மற்றும் தேங்காய் நீரில் பொட்டாசியம் மற்றும் சோடியம் உள்ளது. இது ஒரு சரியான வீட்டில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரோலைட் பானத்தை உருவாக்குகிறது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!