ரத்தசோகைக்கு உடனடி தீர்வு தரும் பழங்கள்!!!

Author: Hemalatha Ramkumar
8 November 2024, 11:08 am
Quick Share

ரத்தசோகை பிரச்சனையினால் அவதிப்பட்டு வருகிறீர்களா? மாத்திரை மருந்துகள் எதுவும் வேலைக்காகவில்லையா? எப்பொழுதும் பீட்ரூட் மற்றும் மாதுளம் சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? ஒருவேளை உங்களுடைய இரும்பு சத்து குறைபாட்டை சரி செய்வதற்கு நீங்கள் வேறு எதையாவது தேடிக் கொண்டிருந்தால் அதற்கான பதில் எங்களிடம் உள்ளது. ஆம், இரத்த சோகையை சரி செய்வதற்கு நெல்லிக்காய் மற்றும் பேரிச்சம் பழங்கள் உங்களுக்கு நிச்சயமாக உதவும். 

நெல்லிக்காய் என்பது வைட்டமின் C -யின் சிறந்த மூலமாக அமைகிறது. வைட்டமின் C சத்து நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் சரும ஆரோக்கியம் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்திற்கும் அவசியம். ரத்தசோகை பற்றி பேசும் பொழுது வைட்டமின் C இரும்புச்சத்தை  உறிஞ்சுவதற்கும், ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் உதவுகிறது. நெல்லிக்காய் இரத்த சோகைப் பிரச்சனையை எதிர்த்து போராடுவதற்கு உதவுகிறது, அதிலும் குறிப்பாக சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இது போதுமான அளவு வைட்டமின் C வழங்குகிறது. 100 கிராம் நெல்லிக்காயில் கிட்டத்தட்ட 252 மில்லி கிராம் வைட்டமின் C உள்ளது. ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 80 மில்லி கிராம் வைட்டமின் C தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

அடுத்தபடியாக பேரிச்சம் பழம் பற்றி பேசுகையில் இது பல வருடங்களாகவே இரும்பு சத்து நிறைந்த உணவுகளில் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. ஏனெனில் 100 கிராம் பேரிச்சம்பழத்தில் 4.7 மில்லி கிராம் இரும்பு சத்து உள்ளது. ஒரு சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்கு 19 முதல் 29 மில்லி கிராம் இரும்புச்சத்து தேவைப்படுகிறது. ஆரோக்கியமான ஹீமோகுளோபின் அளவை பராமரிப்பதற்கு பேரிச்சம்பழம் சாப்பிடுவது சிறந்தது. ஆனால் ஒரு நாளைக்கு 4 பழங்கள் மட்டும் சாப்பிடுவது அதாவது 15 முதல் 20 கிராம் பேரிச்சம் பழம் ஒரு கிராம் இரும்புச்சத்தை மட்டுமே தரும். எனவே இதன் மூலமாக உங்களால் ரத்த சோகையை எதிர்த்துப் போராட முடியாது. 

இதையும் படிக்கலாமே:

டயாபடீஸ் இருக்கவங்க கொஞ்சம் கேர்லெஸ்ஸா இருந்தா கூட இரத்த புற்றுநோய் வர சான்ஸ் இருக்கு!!!

ஆகவே ரத்தசோகை சரி செய்வதற்கு இரும்பு சத்து நிறைந்த உணவுகளோடு புரோட்டீனையும் சாப்பிடுவது அவசியம். கீரை, புதினா, கொத்தமல்லி, முருங்கைக்கீரை, சிறு தானியங்கள், பருப்பு, சோயா பீன்ஸ், முழு தானியங்கள், உலர்ந்த நட்ஸ் வகைகள் மற்றும் பழங்கள் போன்ற இரும்பு சத்து நிறைந்த உணவுகளை ஒருவர் எடுத்துக் கொள்ள வேண்டும். அசைவ உணவை பற்றி பேசும்பொழுது முட்டையின் மஞ்சள் கரு, கோழி இறைச்சி மற்றும் சிவப்பு இறைச்சி ஆகியவை இரும்புச்சத்தின் நல்ல மூலங்களாக அமைகின்றன.

குழந்தைகள், வளரிளம் பிள்ளைகள், கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மற்றும் கல்லீரல், சிறுநீரகம் போன்ற நாள்பட்ட நோய்கள் இருப்பவர்கள், உடற்பருமன் கொண்டவர்கள், குறைவான இரும்பு சத்து எடுத்துக் கொள்பவர்கள், ஊட்டச்சத்து குறைந்த உணவுகளை சாப்பிடுபவர்கள் ஆகியோருக்கு ரத்தசோகை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. 

ஹீமோகுளோபின் என்பது அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை சுமந்து செல்வதற்கு மிகவும் அவசியம். போதுமான அளவு ஹீமோகுளோபின் இல்லாவிட்டால் இதயம், நுரையீரல்கள் மற்றும் கணையம் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம். பொதுவாக ரத்த சோகை இருப்பவர்களுக்கு சோர்வு, தலைமுடி உதிர்வு, வெளிர் நிற சருமம், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் சோம்பேறித்தனம் போன்ற பொதுவான அறிகுறிகள் ஏற்படும்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 59

    0

    0

    Leave a Reply