வாய் துர்நாற்றம்முதல் பக்கவாதம் வரை எல்லாத்துக்கும் தீர்வு இந்த ஒரு விதையில இருக்கு!!!

Author: Hemalatha Ramkumar
13 September 2024, 10:41 am

ஜாதிக்காய் என்ற பிரபலமான மசாலா பொருள் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தை கொண்டுள்ளது. வீக்க எதிர்ப்பு, ரத்த உறைவு எதிர்ப்பு, வாத எதிர்ப்பு ஆகிய பண்புகள் ஜாதிக்காயை ஒரு அற்புதமான மருத்துவ விதையாக மாற்றுகிறது. அது மட்டுமல்லாமல் ஜாதிக்காயில் பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, சிங்க், மெக்னீசியம் மற்றும் காப்பர் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஒரு சிட்டிகை அளவு ஜாதிக்காய் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வர அதன் பலன்களை நாம் பெறலாம். இப்போது ஜாதிக்காய் கலந்து தண்ணீர் குடிப்பதால் நமக்கு கிடை என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஜாதிக்காய் செரிமானத்தை ஊக்குவிக்கிறது. இதன் காரணமாக வயிற்று உப்புசம், வாயு மற்றும் அஜீரணம் போன்ற செரிமான கோளாறுகளில் இருந்து நாம் நிவாரணம் பெறலாம்.

போதுமான அளவு தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்கள் அல்லது தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கட்டாயமாக ஜாதிக்காய் தண்ணீர் எடுத்து வர நல்ல பலன் கிடைக்கும். ஜாதிக்காய் ஓய்வை ஊக்குவித்து தூக்கத்தை மேம்படுத்துவதன் மூலமாக தூக்கமின்மை பிரச்சினைக்கு ஒரு இயற்கையான தீர்வாக அமைகிறது.

கடைகளில் பல்வேறு விதமான மவுத் ஃப்ரெஷ்னர்கள் கிடைத்தாலும் இயற்கையான முறையில் இதற்கு ஜாதிக்காய் ஒரு தீர்வாக அமைகிறது. வாயிலிருந்து துர்நாற்றம் வருவது ஒரு சங்கடமான சூழ்நிலையை உருவாக்கும். இதனை சமாளிப்பதற்கு ஜாதிக்காய் உதவுகிறது. அது மட்டுமல்லாமல் ஜாதிக்காயில் யூஜனால் என்ற பொருள் இருப்பதால் இது பல் சொத்தை மற்றும் பல் வலியை தவிர்ப்பதற்கு உதவுகிறது.

ஆரோக்கிய நலன்கள் மட்டுமல்லாமல் ஜாதிக்காயில் சரும பலன்களும் கிடைக்கிறது. வீக்க எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ள ஜாதிக்காய் சருமத்தில் ஏற்படும் வீக்கம் மற்றும் எரிச்சலை குறைக்கிறது. மேலும் முகப்பருக்கு சிகிச்சை அளிக்கிறது. வயதான எதிர்ப்பு பண்புகள் நிறைந்த ஜாதிக்காய் சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகளை மறையச் செய்கிறது.

நாம் ஏற்கனவே கூறியது போல ஜாதிக்காயில் வீக்க எதிர்ப்பு பண்பு இருப்பதால் இது வலியை குறைத்து ஆர்த்ரைட்டிஸ் போன்றவற்றிற்கு சிறந்த முறையில் தீர்வு அளிக்கிறது.

பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் பல காம்பவுண்டுகள் ஞாபக சக்தியை மேம்படுத்துவதற்கும், அறிவு திறன் செயல்பாட்டிற்கும் அவசியமானது. இந்த காம்பவுண்டுகள் அனைத்தும் ஜாதிக்காயில் உள்ளதால் இது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்த ஜாதிக்காய் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த ஒரு மருந்தாக அமைகிறது. இது இரத்த அழுத்தத்தை சீராக்கி பிற இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கிறது.

ஒருவித மர வாசனை கொண்ட ஜாதிக்காய் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வை சமாளிப்பதற்கும் உதவுகிறது. இதனால் ஜாதிக்காய் மன ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

  • sivakarthikeyan movie cameraman ravi k chandran had chest pain திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி; சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் நடந்த திடீர் சம்பவம்! 
  • Close menu