ஒரு சில உணவுகள் சில வகையான புற்று நோய்களை ஏற்படுத்துவதற்கான அபாயத்தோடு தொடர்புடையவையாக அமைகின்றன. அவற்றில் சில உடற்பருமன் மற்றும் வகை 2 நீரழிவு நோயை ஏற்படுத்தி சில வகையான புற்றுநோயுடனும் தொடர்பு கொண்டுள்ளன. மறுபுறம், ஒரு சில உணவுகளில் கார்சினோஜென்கள் அல்லது புற்றுநோயை ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் காணப்படுகிறது. இந்த பொருட்களை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் ஒரு முக்கியமான விஷயமாக அமைகிறது. அந்த வகையில் நீங்கள் தவிர்க்க வேண்டிய புற்றுநோய் ஏற்படுத்தும் சில உணவுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி
பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் அதிக அளவு உப்பு அல்லது கெமிக்கல் பிரிசர்வேட்டிவ்கள் உள்ளன. உதாரணமாக சாசேஜ் மற்றும் பர்கர் போன்றவை.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை
சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள், சர்க்கரை மிகுந்த தானியங்கள் போன்றவை மறைமுகமாக புற்றுநோயை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் இதில் உள்ள அதிக அளவு சர்க்கரை காரணமாக இது வகை 2 நீரிழிவு நோய் மற்றும் உடற்பருமனுடனும் தொடர்புடையதாக அமைகிறது.
மதுபானம்
மதுபானம் குடிப்பது உங்களுடைய இதயம், சிறுநீரகம் மற்றும் கணையத்தை பாதிப்பது மட்டுமல்லாமல் ஒரு சில புற்றுநோயையும் ஏற்படுத்தலாம். இன்னும் சொல்லப் போனால், மது அருந்துவது பல வகையான புற்றுநோய்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
உருளைக்கிழங்கு சிப்ஸ்
உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுவதால் என்ன ஆகிவிடும் என்று நினைத்து விடாதீர்கள். இது அளவுக்கு அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவு என்பதால் இதனால் இதய நோய், வீக்கம், டயாபடீஸ் மற்றும் புற்றுநோய் ஏற்படலாம்.
பால் சார்ந்த ப்ராடக்டுகள்
பால் சார்ந்த ப்ராடக்டுகளை எடுத்துக் கொள்வது குடல் புற்றுநோயை குறைப்பதற்கான சாத்தியங்களை ஏற்படுத்தும் என்று ஒரு சில ஆய்வுகள் கூறினாலும் பால் சார்ந்த பொருட்களை அடிக்கடி சாப்பிடும் நபர்களுக்கு கல்லீரல் மற்றும் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக வேறு சில ஆய்வுகள் கூறுகின்றன.
இதையும் படிக்கலாமே: நூறாண்டு காலமாக மலச்சிக்கலுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் இயற்கை வைத்தியம்!!!
செயற்கை நிறங்கள்
மிட்டாய், பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களில் சேர்க்கப்பட்டுள்ள செயற்கை ஃபுட் கலர்கள் தீங்கு விளைவிக்கும் பொருட்களாக அமைகின்றன. இவை பல்வேறு விதமான புற்றுநோய்களை ஏற்படுத்தலாம்.
சோடா
சோடா மற்றும் பிற ஃபிஸ்ஸி பானங்களில் அதிக அளவு சர்க்கரைகள், கெமிக்கல்கள் மற்றும் பிரிசர்வேட்டிவ்கள் காணப்படுகின்றன. இவற்றில் உள்ள அதிக சர்க்கரை அளவு உடல் பருமன் மற்றும் வகை 2 நீரிழிவு நோயோடு இணைக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் புற்றுநோயை உண்டாக்கும் அபாயத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது. மேலும் சோடாக்களில் உள்ள பாஸ்போரிக் அமிலம் எலும்புகளை வலுவிலக்க செய்து, வீக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலமாக புற்றுநோய் வளர்ச்சியை உண்டாக்குகிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.