ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ வேண்டும் என்பதற்கான நம்முடைய தேடலில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் நிச்சயமாக நமது பட்டியலில் இருக்கும். இந்த உணவுகள் நமக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. ஆனால் நம்மில் பலர் மார்க்கெட்டில் இருந்து ஆரோக்கியமான உணவு என்று நினைத்துக் கொண்டு நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை இதுவரை வாங்கி வருகிறோம். நாம் நினைப்பது போல அவற்றில் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் கிடையாது. மாறாக அவை அளவுக்கு அதிகமாக பதப்படுத்தப்பட்ட மற்றும் சர்க்கரைகள், பிரிசர்வேட்டிவுகள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளால் செய்யப்பட்டவை.
ஆகவே நாம் எந்த ஒரு உணவை தேர்வு செய்யும் பொழுதும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். அந்த வகையில் நாம் ஆரோக்கியமான உணவுகள் என்று நினைத்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் சில தீங்கு விளைவிக்கும் உணவுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
டயட் சோடா
உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று நினைக்கும் பலர் வழக்கமான சோடாக்கு பதிலாக டயட் சோடா குடித்து வருகின்றனர். ஆனால் டயட் சோடா என்பது நம்முடைய வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை பாதிக்கலாம் என்பது ஆய்வு மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் சேர்க்கப்பட்டுள்ள செயற்கை இனிப்பான்கள் கலோரிகளை சீராக்கும் நம்முடைய உடலின் திறனை குழப்பி மெட்டபாலிசம் கோளாறுகள், உடல் எடை அதிகரிப்பு மற்றும் நாள்பட்ட நோய்களுக்கான அபாயத்தை உருவாக்குகிறது.
ஃபிளேவர் சேர்க்கப்பட்ட தயிர்
ஃபிளேவர் சேர்க்கப்பட்ட தயிர் இன்று ஆரோக்கியமான ஒரு தின்பண்டமாக கருதப்பட்டு வருகிறது. ஆனால் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஃபிளேவர் சேர்க்கப்பட்ட தயிர் வகைகளில் அதிக சர்க்கரைகள், செயற்கை ஃபிளேவர்கள் மற்றும் பிரிசர்வேட்டிவ்கள் உள்ளன. இவற்றை நீங்கள் சாப்பிடும் பொழுது உங்களுடைய தினசரி பரிந்துரைக்கப்படும் சர்க்கரை உட்கொள்ளலை விட அதிகமான அளவு சர்க்கரையை சாப்பிடுகிறீர்கள். எனவே இது ஒரு ஆரோக்கியமான திண்பண்டம் கிடையாது.
புரோட்டீன் பார்கள்
புரோட்டீன் பார் வழக்கமாக ஆரோக்கியமான மற்றும் சௌகரியமான ஒரு உணவாக கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் இது அதிக அளவு பதப்படுத்தப்பட்டது மற்றும் ஊட்டச்சத்துக்கள் குன்றியது..இதில் அதிக அளவு சர்க்கரை மற்றும் பிரிசர்வேட்டிவ்கள் இருப்பதோடு அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் மினரல்களை கொண்டிருக்கவில்லை.
இதையும் படிக்கலாமே: நம்ம வீட்டு குட்டீஸ்களை HMPV வைரஸிடம் இருந்து பாதுகாக்க நாம செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்!!!
பிரேக்ஃபாஸ்ட் தானியங்கள்
பிரபலமான பிரேக்ஃபாஸ்ட் தானியங்களை கொண்டு பலர் தங்களுடைய நாளை ஆரம்பிக்கின்றனர். ஆனால் இவை அதிக அளவு பதப்படுத்தப்பட்டவை மற்றும் சர்க்கரைகள், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் செயற்கை பொருட்களை கொண்டவை.
வெஜிடபிள் சிப்ஸ்
கமர்ஷியலாக விற்பனை செய்யப்படும் காய்கறி சிப்ஸ் சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது என்றும், அதனால் எந்த ஒரு பாதிப்பு ஏற்படாது என்றும் நான் நினைத்துக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் இந்த சிப்ஸ் வகைகள் அளவுக்கு அதிகமாக பதப்படுத்தப்பட்டவை மற்றும் அதிக அளவு சோடியம், பிரிசர்வேட்டிவ்கள் மற்றும் செயற்கை ஃபிளேவர்கள் சேர்க்கப்பட்டவை. இந்த சிப்ஸ் அதிக கலோரிகள், கொழுப்பு மற்றும் சோடியம் கொண்டிருப்பதால் இது நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.