இந்த வருடம் ஆரோக்கியமான உடலை பெறுவதற்கு நீங்கள் தவிர்க்க வேண்டிய சில வாழ்க்கைமுறை தவறுகள்!!!

Author: Hemalatha Ramkumar
1 January 2025, 3:11 pm

புதிய ஒரு வருடத்திற்குள் நுழைந்திருக்கும் இந்த சமயத்தில் நல்ல ஆரோக்கியம் என்பது மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உடல் இருந்தால் தான் நம்முடைய வாழ்க்கையை திருப்திகரமாக நிறைவாக வாழலாம். ஆனால் பெரும்பாலும் தெரிந்தோ தெரியாமலோ நம்முடைய ஆரோக்கியத்திற்கு கேடு தரக்கூடிய ஒரு சில விஷயங்களை நாம் செய்து விடுகிறோம்.

அவ்வாறு செய்வதால் நமது ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த 2025 ஆம் ஆண்டில் ஆரோக்கியமான உடலை கொண்டிருப்பதற்கு நீங்கள் கட்டாயமாக தவிர்க்க வேண்டிய சில வாழ்க்கை முறை தவறுகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

குறைவாக தண்ணீர் குடிப்பது 

பெரும்பாலான நபர்கள் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது கிடையாது. தண்ணீர் என்பது நம்முடைய ஆற்றல் அளவுகள், செரிமானம் மற்றும் அறிவுத்திறன் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம். ஆகவே நீங்கள் நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம்.

உடல் செயல்பாடு இல்லாமல் இருப்பது 

உட்கார்ந்த வாழ்க்கை முறை என்பது பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் ஒரு மோசமான தவறு. எனவே தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும், இதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்கவும், தசைகளை வலுப்பெற செய்யவும் உதவும். எனவே தினமும் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

தரமற்ற தூக்கம் 

நீங்கள் தினமும் வெவ்வேறு நேரத்தில் படுக்கைக்கு செல்லும் பொழுது அது உங்களுடைய உடலின் இயற்கை கடிகாரத்தை குஜப்பி, அதனால் தரமான தூக்கம் கிடைக்காமல் போகலாம். எனவே இதனால் அடுத்த நாள் நீங்கள் சோர்வாக காணப்படுவீர்கள். நாளடைவில் உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி குறையும். எனவே தினமும் ஒரே நேரத்தில் படுத்து ஒரே நேரத்தில் எழுந்திருக்கும் பழக்கத்திற்கு வாருங்கள்.

ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது

ஆரோக்கியமற்ற உணவுகள் நம்முடைய ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே அளவுக்கு அதிகமான பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்புகளை சாப்பிடுவது உடல் எடை அதிகரிப்பு, வீக்கம் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும். இதற்கு பதிலாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் மெலிந்த புரதங்களை சாப்பிடுங்கள்.

இதையும் படிக்கலாமே: யூஸ் பண்ண டீ பேக்குகளை யூஸ்ஃபுல்லா மாற்ற சில டிப்ஸ்!!!

அதிக அளவு மது அருந்துதல் 

அளவுக்கு அதிகமாக மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் கல்லீரலை சேதப்படுத்தி புற்றுநோய் மற்றும் சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அதிகரிக்கலாம். எனவே புகை பிடிப்பதை முற்றிலுமாக தவிர்ப்பது மற்றும் மது அருந்துவதை குறைத்துக் கொள்வது நாள்பட்ட நோய்களிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு திறவுகோல்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Allu Arjun Pushpa2 box office collection புத்தாண்டில் புது மைல்கல்…அதிர வைக்கும் அல்லு அர்ஜுன் புஷ்பா2 வசூல்..!
  • Views: - 96

    0

    0

    Leave a Reply