தூக்கி வீசுற கிரீன் டீ பேக் வச்சு இவ்வளோ விஷயம் பண்ணலாமா…???
Author: Hemalatha Ramkumar13 December 2024, 5:15 pm
நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு அற்புதமான பலன்கள் கொண்டது கிரீன் டீ என்பது நமக்கு தெரியும். ஆனால் கிரீன் டீ பைகளின் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆமாம், கிரீன் டீ போடுவதற்கு நீங்கள் பயன்படுத்தும் கிரீன் டீ பேகில் பல நன்மைகள் உள்ளது. அது நம்முடைய வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கு ஒரு எளிமையான வழியாக அமைகிறது. ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்த கிரீன் டீ பேக்குகள் சோர்வான கண்களுக்கு அமைதி கொடுக்கவும், வீக்கத்தை குறைக்கவும், சருமத்தை பளிச்சிட செய்யவும் இன்னும் எக்கச்சக்கமான பலன்களை அளிக்கிறது. மேலும் கிரீன் டீ பேக்குகள் இயற்கையான டியோடரைஸராக செயல்படுகிறது. கிரீன் டீ பேக்குகள் சுற்றுச்சூழலுக்கு எந்த ஒரு தீங்கையும் ஏற்படுத்தாத எக்கோ-ஃபிரண்ட்லி பொருளாக இருப்பதால் இதனை மிக எளிதாக மீண்டும் பயன்படுத்த சிறந்த ஒன்றாக அமைகிறது. குறிப்பாக தோட்டத்தில் மண்ணின் ஊட்டச்சத்துக்களை அதிகரிப்பதற்கு, பூச்சிகளை விரட்டுவதற்கு போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். எனவே கிரீன் டீ பேகுகளை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆரோக்கியமான சருமம்
கிரீன் டீ பேக்குகளில் உள்ள இயற்கையான ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் வீக்க எதிர்ப்பு பண்புகள் காரணமாக பலரால் இது சரும பராமரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. எரிச்சல் அடைந்த சருமத்தை ஆற்றவும், வீக்கத்தை குறைக்கவும், கருவளையத்தை போக்கி, சருமத்தை ஃபிரஷாகவும், ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகிறது.
நேச்சுரல் டியோடரைசர்
கிரீன் டீ பேக் துர்நாற்றத்தை உறிஞ்சுவதற்கான தன்மையை கொண்டுள்ளது. உங்கள் ஷூக்கள், உடல் அல்லது எந்த விதமான இடத்திலும் இதனை நீங்கள் பயன்படுத்தலாம். துர்நாற்றத்தை நீக்க நினைக்கும் இடத்தில் இந்த கிரீன் டீ பேக்களை வைத்து விட்டால் போதுமானது.
இதையும் படிச்சு பாருங்க: 2024ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட டாப் 3 ஊட்டச்சத்துக்கள்!!!
தோட்டத்தில் கிரீன் டீ பேக்குகளின் பயன்பாடு
மண்ணின் ஊட்டச்சத்துக்களை அதிகரிப்பதற்கும், இயற்கையான பூச்சி விரட்டியாகவும் தோட்டத்தில் நீங்கள் கிரீன் டீ பேக்குகளை பயன்படுத்தலாம். இது ஆரோக்கியமான தாவர வளர்ச்சியை அதிகரித்து தரக்கூடிய ஒரு அற்புதமான பொருள்.
சுத்தம் செய்வதற்கு
கிரீன் டீ பேக்குகள் ஒரு அற்புதமான இயற்கை கிளீனிங் ஏஜென்டாக அமைகிறது. கண்ணாடி, மர மேற்பரப்புகள் போன்றவற்றை பாலிஷ் செய்வதற்கு இதனை நீங்கள் பயன்படுத்தலாம். இந்த மேற்பரப்புகளை சுத்தமாகவும், பளபளப்பாகவும் மாற்றும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.