தொப்புளில் விளக்கெண்ணெய் வைத்தால் தொப்பை குறையுமா… இது என்ன புது கதையா இருக்கு!!!

Author: Hemalatha Ramkumar
8 November 2024, 5:55 pm

விளக்கெண்ணெய் என்பது அதன் வலிமையான மலமிளக்கும் விளைவுகள் காரணமாக ஒரு காலத்தில் இத்தாலியில் தண்டனைகளுக்காக பயன்படுத்தப்பட்டது. கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்… இப்போது இது உடல் எடையை குறைப்பதற்கு பயன்படுவதாக டிக் டாக்கில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. ஆனால் இதற்காக நீங்கள் விளக்கெண்ணையை பருக தேவையில்லை அதனை உங்கள் வயிற்றில் தடவினால் போதுமானது. 

டிக் டாக்கில் உள்ள பல இன்ஃப்ளுயன்ஸர்கள் விளக்கெண்ணெயை தங்களுடைய தொப்புள் பகுதியில் ஊற்று அதன் மீது ஒரு சுத்தமான காட்டன் துண்டினை வைக்கிறார்கள். இது தொப்பை கொழுப்பை கரைத்து வயிற்று உப்புசத்தை தடுக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர். விளக்கெண்ணெய் என்பது ஒரு பாரம்பரிய மருந்தாக அமைகிறது. விளக்கெண்ணெய் மலமிளக்கியாக மற்றும் பல்வேறு சரும பிரச்சனைகளை சமாளிப்பதற்கு பண்டைய எகிப்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டது என்பதற்கான குறிப்புகள் உள்ளன. கிளியோபட்ரா விளக்கெண்ணையை அவருடைய கண்களில் உள்ள வெள்ளை பகுதியை பளிச்சிட செய்வதற்கும், தலைமுடிக்கும் பயன்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. 

எந்தவித வாசனையும் இல்லாமல் இருக்கும் இந்த எண்ணெயில் ரிசினோலெயிக் அமிலம் என்ற கொழுப்பு பொருள் ஒன்று உள்ளது. இதுவே விளக்கெண்ணெய்க்கு மலமிளக்கும் பண்புகளை அளிக்கிறது. இன்று கூட ஒரு சில நாடுகளில் மலச்சிக்கல் பிரச்சனைக்கு விளக்கெண்ணெய் ஒரு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் விளக்கெண்ணெயில் உள்ள மலமிளக்கும் விளைவுகள் குறித்த அதிகப்படியான அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. 

இதையும் படிக்கலாமே: குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் பொழுது மறக்காம இந்த விஷயங்கள ஞாபகம் வச்சுக்கோங்க!!!

அதே நேரத்தில் விளக்கெண்ணெய் கண்களில் ஏற்பட்டுள்ள வீக்கம் மற்றும் அரிப்பை போக்குவதற்கும், மூட்டு வலி மற்றும் மாதவிடாய் வலியில் இருந்து நிவாரணம் பெறுவதற்கும் பிரசவ வலியை தூண்டுவதற்கும் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ஒரு சில ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் இதனை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

இன்று பல சரும கிரீம்கள், ஹேர் கண்டிஷனர்கள் மற்றும் லிப்ஸ்டிக் போன்ற பிற காஸ்மெட்டிக் பொருட்களில் விளக்கெண்ணெய் ஒரு மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. தலைமுடி பராமரிப்பு ப்ராடக்டுகளில் பயன்படுத்தப்படும் விளக்கெண்ணெய் தலைமுடி உதிர்வை தடுத்து பொடுகு பிரச்சனைக்கு தீர்வு தருகிறது. ஆனால் விளக்கெண்ணையை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது அடி வயிற்று வலி, வாந்தி, வயிற்று உப்புசம் மற்றும் மயக்கத்தை ஏற்படுத்தலாம். 

வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கல்லீரல் அல்லது சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் விளக்கெண்ணெய் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். உணவு கோளாறுகள் இருப்பவர்களும் விளக்கெண்ணெய் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. 

உங்களுடைய சருமம் அல்லது மயிர்கால்களில் விளக்கெண்ணெயை பயன்படுத்த நினைத்தால் அதனையும் எச்சரிக்கையோடு செய்ய வேண்டும். ஏனெனில் ஒரு சில நபர்களில் இது அலர்ஜி விளைவை ஏற்படுத்தலாம். எப்பொழுதும் சிறிய அளவில் சுத்தமான விளக்கெண்ணையை பயன்படுத்துங்கள். மேலும்  விளக்கெண்ணெய் முழுவதுமாக பயன்படுத்துவதற்கு முன்பு பேட்ச் சோதனை செய்து பார்த்து 24 மணி நேரம் காத்திருந்த பிறகு பயன்படுத்துவது பாதுகாப்பானது. அதே நேரத்தில் உங்களுடைய தொப்பையில் இதனை தடவுவதால் நிச்சயமாக தொப்பை கொழுப்பு குறையாது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 273

    0

    0