அடுத்தமுறை தலைக்கு குளிக்கும்போது இத யூஸ் பண்ணி பாருங்க… வெல்வெட் துணிய விட கூந்தல் சாஃப்டா இருக்கேன்னு கேட்பாங்க!!!

Author: Hemalatha Ramkumar
16 November 2024, 6:43 pm

வெண்டைக்காய் தண்ணீர் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் என்பது நமக்கு நன்றாக தெரியும். ஆனால் இது நம்முடைய தலைமுடிக்கும் பல்வேறு பலன்களை தரக்கூடியது என்பது நிச்சயமாக நீங்கள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டீர்கள். ஊட்டச்சத்து மிகுந்த வெண்டைக்காய் தலைமுடி பராமரிப்புக்கு தேவையான ஊட்டச்சத்து களஞ்சியமாக திகழ்கிறது. இந்த இயற்கையான தீர்வு தலைமுடியின் ஆரோக்கியம், அதன் வளர்ச்சியை அதிகரிப்பது போன்ற பலன்களுக்கு தற்போது அதிக அளவில் பிரபலமடைந்து வருகிறது. எனவே இந்த பதிவில் வெண்டைக்காய் தண்ணீர் நம்முடைய தலைமுடிக்கு எவ்வாறு பலன் அளிக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 

ஈரப்பதம் 

வெண்டைக்காய் தண்ணீரில் இருக்கக்கூடிய மிக முக்கியமான பண்புகளில் அதன் ஈரப்பதத்தை தக்க வைக்கும் திறன் அடங்கும். இது இயற்கை கண்டிஷனாராக செயல்பட்டு, உங்கள் தலைமுடிக்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கி, அது வறண்டு போவதை தவிர்க்கிறது. மேலும் இது உங்கள் தலைமுடியை மென்மையாக்கி சில்க்கியாக மாற்றுகிறது. இதற்கு நீங்கள் வழக்கமாக ஷாம்பு பயன்படுத்திய பிறகு உங்கள் தலைமுடியை வெண்டைக்காய் தண்ணீரில் அலச வேண்டும் அல்லது இதனை நீங்கள் ஹேர் ஸ்பிரேயாகவும் பயன்படுத்தலாம். 

தலைமுடி வளர்ச்சி

தலைமுடி வளர்ச்சியை அதிகரிப்பதற்கு ஏதேனும் வழிகளை தேடிக் கொண்டிருந்தால் உங்களுக்கு நிச்சயமாக வெண்டைக்காய் தண்ணீர் உதவும். வெண்டைக்காயில் உள்ள வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் மயிர்க்கால்களுக்கு தேவையான போஷாக்கை வழங்கி, அதனை வலிமையாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்றி தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. குறிப்பாக இதில் உள்ள ஃபோலேட் சத்து தலைமுடி வளர்ச்சிக்கு அத்தியாவசியமான செல் பிரிவு மற்றும் புதிய செல்களின் உற்பத்தி செயல்முறையில் முக்கிய பங்கு கொண்டுள்ளது. வழக்கமான முறையில் நீங்கள் வெண்டைக்காய் தண்ணீரை பயன்படுத்தி வந்தால் மயிர்க்கால்களில் ரத்த ஓட்டம் அதிகரித்து தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும். 

இதையும் படிக்கலாமே: உங்க எலும்புகளை நான்  வலுவாக்குவேன்… கேரண்டி கொடுக்கும் ப்ரூன் பழங்கள்!!!

தலைமுடி வலிமை மற்றும் பொடுகு பிரச்சனை

வெண்டைக்காய் தண்ணீர் நம்முடைய தலைமுடிக்கு தேவையான வைட்டமின்களை வழங்கி, அது எளிதில் உடைந்து போகாமல் வலிமையாக இருப்பதை உறுதி செய்கிறது. ஸ்ப்ளிட் எண்டு அல்லது தலைமுடி உதிர்வு பிரச்சனையை அனுபவித்து வருபவர்கள் தங்களுடைய தலைமுடி பராமரிப்பு வழக்கத்தில் வெண்டைக்காய் தண்ணீரை பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கலாம். மேலும் இது பொடுகு மற்றும் அரிப்பு போன்ற மயிர்க்கால்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது. 

மயிர்க்கால்களின் ஆரோக்கியம் 

தலைமுடியின் ஆரோக்கியம் என்பது ஆரோக்கியமான மயிர்க்கால்களில் இருந்து துவங்குகிறது. வெண்டைக்காய் தண்ணீரை பயன்படுத்துவது உங்களுடைய மயிர்க்கால்களின் ஆரோக்கியத்தை பராமரித்து அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி pH சமநிலையை கவனித்துக் கொள்கிறது. மேலும் இதில் உள்ள வீக்க எதிர்ப்பு பண்புகள் மயிர்க்கால்களில் ஏற்படும் எரிச்சல்களை ஆற்றி, பொடுகை போக்கி தலைமுடி வளர்வதற்கு ஏதுவான ஒரு சுத்தமான சூழலை உருவாக்குகிறது. 

பளபளப்பு 

வெண்டைக்காய் தண்ணீர் உங்களுடைய தலைமுடிக்கு ஒரு இயற்கை பளபளப்பை தருகிறது. இதில் உள்ள ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தலைமுடியை மென்மையாக்கி அதற்கு பளபளப்பை சேர்க்கிறது. இயற்கையாகவே உங்களுடைய கூந்தல் பொலிவிழந்து இருந்தாலும் அல்லது ஹீட் ஸ்டைலிங் சாதனத்தை பயன்படுத்தியதால் சேதம் அடைந்திருந்தாலோ அதனுடைய பளபளப்பை மீட்டெடுப்பதற்கு நீங்கள் வெண்டைக்காய் தண்ணீரை பயன்படுத்தலாம். 

குறிப்பு: உங்களுடைய மயிர்க்கால்கள் அல்லது தலைமுடியில் வெண்டைக்காய் தண்ணீரை பயன்படுத்துவதற்கு முன்பு ஏதேனும் அலர்ஜி ஏற்படுகிறதா என்பதை தெரிந்து கொள்வதற்கு ஒரு பேட்ச் சோதனை செய்து பார்ப்பது நல்லது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Pathikichu Song Release விடாமுயற்சி பொங்கல் கொண்டாட்டத்திற்கு எண்டே கிடையாது…படத்தின் அடுத்த பாடல் ரெடி ஆட ரெடியா…!