மனச்சோர்வுக்கு தீர்வு தரும் காளானின் அடுக்கடுக்கான மருத்துவ குணங்கள்!!!
Author: Hemalatha Ramkumar10 June 2023, 5:59 pm
குறைந்த கலோரி உணவான காளானில் காப்பர், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் இரண்டு வகையான B வைட்டமின்கள் காணப்படுகிறது. காளான்கள் கிட்டத்தட்ட 126 உடல் சார்ந்த செயல்பாடுகளுக்கு உதவுவதாக ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வைட்டமின்கள் மற்றும் மினரல்களைத் தவிர காளானில் ஆன்டி ஆக்ஸிடன்டுகளும் காணப்படுகிறது. இவை உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகளை வழங்குகின்றன. இந்த பதிவில் காளான்கள் நமக்கு தரும் குறிப்பிட்ட சில முக்கியமான நன்மைகளை மட்டும் பார்க்கலாம்.
நாம் ஏற்கனவே சொன்னது போல காளான்களில் ஆன்டி ஆக்சிடன்டுகள் இருப்பதால் அவை செல்களில் ஏற்படும் அழுத்தம் மற்றும் வீக்கத்தை போக்க உதவுகிறது. இதன் மூலம் செல்கள் சேதம் அடையாமல் கவனித்துக் கொள்கிறது. மேலும் நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
வயதாகும் காரணத்தால் ஏற்படும் ஞாபக மறதி போன்ற அறிகுறிகளை காளான்கள் சாப்பிடுவதன் மூலமாக மேம்படுத்தலாம் என கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் காளானில் காணப்படும் ஒருவகையான ஆன்டி ஆக்சிடன்ட் ஆகும்.
கடைகளில் விற்கப்படும் ஒரு சில காளான்களில் UV கதிர் செலுத்தப்படுவதன் மூலமாக அவற்றில் உள்ள வைட்டமின் டி சத்து அதிகரிக்கப்பட்டுள்ளது. இது போன்ற காளான்களை சாப்பிடுவது வைட்டமின் டி குறைபாட்டை சரி செய்ய உதவும். இதனால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.
காளான்களில் போதுமான அளவு நார்ச்சத்து காணப்படுகிறது. இது வகை 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது என 2020 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது.
நீங்கள் நாள்பட்ட மனச்சோர்வு அல்லது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் உங்கள் அன்றாட உணவில் காளான்களை சேர்ப்பது இந்த பிரச்சனையில் இருந்து எளிதாக வெளிவர உங்களுக்கு உதவும். ஆகவே இனியும் காளான்களை அவ்வப்போது மட்டுமே வாங்கி உண்ணாமல் உங்களது அன்றாட உணவில் காளான்களை சேர்க்க முயற்சி செய்யுங்கள்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.