உங்க வீட்டு கிட்சன்ல அசால்ட்டா தூங்கிகிட்டு இருக்க இந்த பொருள் BPக்கு மருந்தா இருக்கும்னு நினைச்சு கூட பார்த்து இருக்க மாட்டீங்க!!!

Author: Hemalatha Ramkumar
26 November 2024, 6:17 pm

தனித்துவமான சுவை மற்றும் வாசனை மூலமாக உணவுக்கு நல்ல ஒரு ஃபிளேவரை கொடுக்கக் கூடியது தான் ஏலக்காய். இது பல்வேறு விதமான உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஏலக்காய் பொதுவாக உணவின் சுவை மற்றும் வாசனையை அதிகரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அது மட்டுமல்லாமல் ஏலக்காயில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களும் காணப்படுகின்றன. சமையலில் மட்டும் அல்லாமல் ஏலக்காய் இன்னும் பல பயன்பாடுகளை கொண்டுள்ளது. அவற்றை ஒவ்வொன்றாக இந்த பதிவில் பார்க்கலாம். 

இரவு தூங்குவதற்கு முன்பு வாயில் ஏலக்காயை போட்டுக் கொள்வது வயிற்று உப்புசம், வாயு தொல்லை மற்றும் வயிறு அசௌகரியங்கள் போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட உதவும். ஏலக்காயை வாயில் வைத்தபடி நீங்கள் தூங்கும் பொழுது அதில் உள்ள சாறு மெதுமெதுவாக உங்கள் வயிற்றுக்குள் நுழைய ஆரம்பிக்கும். இது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை போக்குகிறது. 

ஒருவேளை உங்கள் வாயிலிருந்து கெட்ட சுவாசம் வருகிறது என்றால் இரவில் உங்கள் வாயில் ஏலக்காயை போட்டுக் கொள்வது இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க உதவும். ஏலக்காயில் உள்ள இயற்கை எண்ணெய்கள் உங்களுக்கு புத்துணர்ச்சியான உணர்வை தருகிறது. இது வாய் துர்நாற்றத்தை போக்கி உங்களுடைய சுவாசத்தை புத்துணர்ச்சியாக மாற்றுகிறது. 

ஏலக்காயில் வீக்க எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே நமது உடலில் உள்ள வீக்கத்தை குறைத்து ஆரோக்கியமான செல்களை ஊக்குவிக்கிறது. 

ஏலக்காய் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு உதவுகிறது. இதில் உள்ள பண்புகள் நம்முடைய ரத்த அழுத்தத்தை குறைக்கும். நமது உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. வாயில் ஏலக்கையை போட்டுக் கொண்டு தூங்குவதால் உங்களுடைய மனநிலை  மேம்படும். இது மன அழுத்தத்தை குறைத்து, மனதிற்கு அமைதி தருகிறது. 

இதையும் படிக்கலாமே: தலைமுடிக்கு மீன் எண்ணெயா… இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!!

ஏலக்காயில் உள்ள இயற்கை காம்பவுண்டுகள் நமது உடலில் இருந்து நச்சு கழிவுகளை வெளியேற்றுகிறது. நச்சுகள் நமது உடலில் சேமிக்கப்படுவதால் பல்வேறு விதமான பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே ஏலக்காய் ஒரு இயற்கை டீடாக்சிஃபையராக செயல்படுகிறது. 

ஏலக்காயில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. அவை ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராடி வயதான அறிகுறிகளை தடுக்கிறது. மேலும் ஏலக்காய் பல்வேறு விதமான சரும பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது. சரும செல்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்சிஜனை வழங்கி அவை சமூகமாக செயல்படுவதற்கு ஏலக்காய் உதவுகிறது. 

ஏலக்காய் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி அதற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குகிறது. ஒரு ஸ்பூன் ஏலக்காய் பொடியை ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் ஒரு சில துளிகள் எலுமிச்சை சாற்றோடு கலந்து முகத்தில் தடவினால் நல்ல முடிவுகளை பெறலாம். ஆனால் இதனை பயன்படுத்துவதற்கு முன்பு நீங்கள் பேட்ச் சோதனை செய்து பார்ப்பது அவசியம். முகத்தில் ஏதேனும் சிவத்தல், தடிப்பு அல்லது தொற்று ஏற்பட்டால் இதனை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Squid Game Season 2 Review and Explain the Endingஸ்குவிட் கேம் சீசன் 2 : முதல் சீசன் ஒரு பார்வை மற்றும் இரண்டாவது சீசன் விமர்சனம்!!
  • Views: - 143

    0

    0