பெருசா செலவு எதுவும் பண்ண மாட்டேன்… ஆனா நேச்சுரல் குலோ வேணும்னு கேட்கறவங்களுக்கு இந்த பொருள் கரெக்ட்டா இருக்கும்!!!

Author: Hemalatha Ramkumar
8 January 2025, 4:00 pm

சந்தைகளில் எக்கச்சக்கமான ஸ்கின்கேர் ப்ராடக்டுகள் கிடைக்கும் இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு ப்ராடக்ட்டுக்கும் கொடுக்கப்படும் ஹைப்புக்கு இடையே நல்ல ஒன்றை கண்டுபிடிப்பது என்பது கடினமான காரியமாக அமைகிறது. இந்த குழப்பங்களுக்கு மத்தியில் ரோஸ் வாட்டர் என்பது எளிமையான அதே நேரத்தில் பயனுள்ள ஒரு தீர்வாக இருக்கிறது. இதன் இயற்கையான வீக்க எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் சரும பராமரிப்பில் ஒரு சிறந்த கேம் செயிஞ்சராக இதனை மாற்றுகிறது.

சருமத்திற்கு ரோஸ் வாட்டர் வழங்கும் நன்மைகள் ஏராளம். இதில் சரும pH சமநிலையை பராமரிப்பது, முகப்பரு மற்றும் வீக்கத்தை குறைப்பது, ஈரப்பதத்தை வழங்குவது மற்றும் சருமத்தின் தொனியை மேம்படுத்துவது, கொலாஜன் உற்பத்தி போன்ற எக்கச்சக்கமான நன்மைகள் அடங்கும். எனவே இந்த பதிவில் பொலிவான மற்றும் மினுமினுப்பான சருமத்தை பெறுவதற்கு ரோஸ் வாட்டரை பயன்படுத்துவதற்கான எளிமையான வழிகள் பற்றி பார்க்கலாம்.

டோனர் 

ரோஸ் வாட்டர் என்பது ஒரு அற்புதமான இயற்கை டோனராக செயல்படுகிறது. சருமத்தை சுத்தம் செய்த பிறகு ஒரு காட்டன் பந்தை ரோஸ் வாட்டரில் முக்கி முகத்தில் பயன்படுத்துங்கள். இது தோலில் உள்ள துளைகளை இறுக்கி pH -ஐ சமநிலையாக்கி, அழுக்குகளை அகற்றும். மேலும் இதன் மூலமாக உங்களுக்கு புத்துணர்ச்சியான மற்றும் பளபளப்பான சருமம் கிடைக்கும்.

ரோஸ் வாட்டர், முல்தானி மிட்டி மற்றும் கிளிசரின்

ரோஸ் வாட்டருடன் முல்தானி மிட்டி மற்றும் கிளிசரின் கலந்து ஒரு ஃபேஸ் மாஸ்க்கை தயார் செய்து பயன்படுத்துவது மினுமினுப்பான சருமத்தை பெறுவதற்கு உதவும். ரோஸ் வாட்டரில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் வீக்க எதிர்ப்பு பண்புகள், முல்தானி மிட்டியின் நச்சு நீக்க விளைவுகள் மற்றும் கிளிசரினின் நீரேற்ற பண்புகளோடு இணைந்து உங்களுக்கு பளபளப்பான மென்மையான சருமத்தை அளிக்கும்.

ரோஸ் வாட்டர், தயிர், மஞ்சள் மற்றும் தேன் 

தயிர், மஞ்சள், தேன் மற்றும் ரோஸ் வாட்டரை கலந்து போஷாக்கு நிறைந்த ஃபேஸ் மாஸ்க்கை நீங்கள் தயார் செய்யலாம். தயிர் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றுகிறது. அதே நேரத்தில் மஞ்சளில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் தேனில் உள்ள ஈரப்பதமூட்டும் பண்புகள் ரோஸ் வாட்டரின் டோனிங் விளைவுகளோடு இணைந்து உங்களுக்கு பளபளப்பான, அழகான சருமத்தை அளிக்கிறது.

இதையும் படிக்கலாமே: டெய்லி உண்டாகுற ஸ்ட்ரெஸ் குறைக்க இத விட ஈசியான வழி இருக்கவே முடியாது!!!

இயற்கை மிஸ்ட் ஆக பயன்படுத்தலாம் 

சருமத்தின் குலோவை அதிகரிப்பதற்கு ரோஸ் வாட்டரை நீங்கள் இயற்கை ஃபேஸ் மிஸ்ட் ஆக பயன்படுத்தலாம். இதற்கு நாள் முழுவதும் உங்களுடைய முகத்தில் ரோஸ் வாட்டரை ஸ்பிரே செய்யலாம் அல்லது தூங்க செல்வதற்கு முன்பு பயன்படுத்தலாம். இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் நீரேற்றும் பண்புகள் சிறப்பாக வேலை செய்து உங்களுக்கு இயற்கையான குலோவை கொடுக்கும்.

ரோஸ் வாட்டர் மற்றும் தயிர் 

தயிருடன் ரோஸ் வாட்டர் கலந்து ஒரு பேஸ்ட்டை உருவாக்கி முகத்தில் தடவும் போது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்பட்டு, அதற்கு தேவையான போஷாக்குகள் கிடைக்கும். அடிக்கடி இதனை பயன்படுத்தி வர உங்களுடைய சருமம் பளபளப்பாக மாறும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!