இந்த ஒரு பொருள் இருந்தா இனி தலைமுடியை ஸ்ட்ரெய்ட்டன் செய்ய காசு செலவு செய்யவே மாட்டீங்க!!!

Author: Hemalatha Ramkumar
18 December 2024, 5:38 pm

ரோஜா பூக்களின் இதழ்களை வைத்து தயாரிக்கப்படும் பன்னீர் அல்லது ரோஸ் வாட்டர் என்பது நம்முடைய சருமம் மற்றும் தலைமுடிக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடியது. தலைமுடியை பொறுத்தவரை ரோஸ் வாட்டர் ஒரு இயற்கை டானிக்காக செயல்பட்டு, ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், பொடுகு மற்றும் அரிப்பை குறைத்து, தலைமுடியின் pH அளவை சமநிலையாக வைக்கிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் பண்புகள் சுற்றுச்சூழல் சேதத்தில் இருந்து தலைமுடியை பாதுகாக்கிறது. அதே போல ரோஸ் வாட்டரின் வீக்க எதிர்ப்பு பண்புகள் மயிர்க்கால்களில் உள்ள எரிச்சல்களை ஆற்றுகிறது. மேலும் ரோஸ் வாட்டர் உங்களுடைய தலைமுடிக்கு இயற்கையான பளபளப்பை சேர்த்து அதனை அழகாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றுகிறது.

வழக்கமான முறையில் நீங்கள் உங்களுடைய தலைமுடிக்கு ரோஸ் வாட்டரை பயன்படுத்தி வந்தால் ஸ்ப்ளிட் எண்டு, தலைமுடி உடைந்து போதல் மற்றும் படியாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் நீங்கி தலைமுடி மென்மையாகவும், பட்டுப்போலவும் மாறிவிடும். அப்படி இருக்க ஆரோக்கியமான மற்றும் விரைவான தலைமுடி வளர்ச்சிக்கு ரோஸ் வாட்டரை உங்களுடைய தலைமுடி பராமரிப்பு வழக்கத்தில் எப்படி சேர்க்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மயிர் கால்களில் மசாஜ் செய்யவும் 

ரோஸ் வாட்டரை உங்களுடைய மயிர்க்கால்களில் ஸ்பிரே பாட்டில் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து மசாஜ் செய்வது அதற்கு தேவையான ஈரப்பதத்தையும், போஷாக்கையும் வழங்கி, ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும். ரோஸ் வாட்டரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, பொடுகு மற்றும் அரிப்பை குறைக்கிறது. இதனால் மயிர்க்கால்கள் ஆரோக்கியமாக மாறுகிறது. எனவே அடிக்கடி உங்களுடைய மயிர்க்கால்களை ரோஸ் வாட்டர் கொண்டு மசாஜ் செய்யும் போது அது தலைமுடி வளர்ச்சியை ஊக்குவித்து, வலுவான மயிர்க்கால்களை வழங்கி, தலைமுடி உதிர்வை குறைக்கும்.

எண்ணெய்களோடு சேர்த்து பயன்படுத்துதல் 

தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் போன்ற போஷாக்கு நிறைந்த எண்ணெய்களோடு இணைத்து நீங்கள் ரோஸ் வாட்டரை பயன்படுத்தலாம். இந்த காம்பினேஷன் மயிர்கால்களுக்கு ஈரப்பதத்தை வழங்கி, ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சியை கொடுத்து, பொடுகை குறைக்கும்.

ரோஸ் வாட்டர் ஸ்ப்ரே

வீட்டிலேயே ரோஸ் வாட்டர் ஸ்ப்ரே தயாரிப்பதற்கு நீங்கள் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஒரு கப் ரோஸ் வாட்டர் மற்றும் உங்களுக்கு விருப்பமான அத்தியாவசிய எண்ணெய்களில் 10 துளிகளை சேர்த்து நன்றாக கலந்து பயன்படுத்தலாம். இதனை உங்களுடைய மயிர்கால்கள் மற்றும் தலைமுடியில் தெளிப்பது அதற்கு தேவையான போஷாக்கு, ஈரப்பதம் மற்றும் பாதுகாப்பை வழங்கும். இதனை நீங்கள் ஷாம்பூ பயன்படுத்துவதற்கு முன்பு அல்லது ஹேர் ரெஃப்ரஷராகவோ அல்லது ஸ்டைலிங் ப்ராடக்டாகவோ பயன்படுத்தலாம்.

இதையும் படிச்சு பாருங்க:  எளிமையான வழியில் குழந்தைகளுக்கு கனிவாக நடந்துகொள்வது எப்படி என்பதை கற்றுக்கொடுக்க பெற்றோர்களுக்கான டிப்ஸ்!!!

ரோஸ் வாட்டர் ஹேர் மாஸ்க் 

உங்களுடைய ஹேர் மாஸ்கின் நன்மைகளை அதிகரிப்பதற்கு உங்களுக்கு விருப்பமான பொருட்களுடன் இந்த ரோஸ் வாட்டரையும் இணைத்து பயன்படுத்தலாம். இதற்கு நீங்கள் 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரை ஒரு டேபிள் ஸ்பூன் தேன், தயிர் அல்லது அவகாடோ பழத்துடன் கலந்து தலைமுடியில் ஹேர் மாஸ்காக தடவ வேண்டும். 1/2 மணி நேரம் கழித்து தலைமுடியை அலசிவர உங்களுக்கு நீளமான, வலிமையான மற்றும் அழகான கூந்தல் கிடைக்கும்.

தலை முடியை அலசுவதற்கு 

உங்கள் தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்திய பிறகு அதற்கு நல்ல நறுமணத்தை கொடுப்பதற்கும், போஷாக்கை வழங்கவும் இந்த ரோஸ் வாட்டர் மூலமாக தலைமுடியை அலசலாம். இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் ஈரப்பதத்தை லாக் செய்து, உங்களுக்கு மென்மையான, சில்க்கியான கூந்தலை தருவதோடு, தலைமுடி வளர்ச்சியையும் மேம்படுத்தும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Director Selvaraghavan responds to Kamal Haasan கமல் ஆணவப் பேச்சு…தக் லைப் கொடுத்த செல்வராகவன்..!