இந்த காய்கறிகளை உறைய வைத்து சாப்பிட்டால் அதன் ஊட்டச்சத்துக்கள் டபுள் ஆகுமாம்!!!
Author: Hemalatha Ramkumar28 October 2024, 7:37 pm
உறைய வைப்பதால் காய்கறிகளின் ஊட்டச்சத்துக்கள் குறைந்துவிடும் என்று பலர் கருதுகின்றனர். ஆனால் உண்மையில் ஒரு சில காய்கறிகளை உறைய வைப்பதன் மூலமாக அதன் ஊட்டச்சத்துக்கள் இன்னும் அதிகமாகவே ஆகிறது. ஆனால் எந்தெந்த காய்கறிகளை உறைய வைத்து சாப்பிடலாம் என்பதை நாம் இதற்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் உறவைப்பதால் அதிக பலன்களை தரும் காய்கறிகளின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.
சோளம்
உறைய வைக்கப்பட்டாலும் கூட சோளத்தின் நிறம், ஊட்டச்சத்துக்கள், ஃப்ளேவர் மற்றும் அமைப்பு போன்றவை எதுவும் மாறாமல் அப்படியே இருக்கும் வகையில் அதிலுள்ள இயற்கை என்சைம்கள் ஆக்டிவேட் செய்யப்படும். வழக்கமாக பிரிட்ஜில் வைக்கப்படும் சோளத்தை விட உறைய வைக்கப்படும் சோளத்தில் அதிக அளவு வைட்டமின் C இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இதையும் படிக்கலாமே: இந்த வருட தீபாவளிய ஹெல்தியாக்க வேண்டாமா… வெள்ளை சர்க்கரைக்கு பதிலா இதெல்லாம் டிரை பண்ணி பாருங்க!!!
பச்சை பீன்ஸ்
உறைய வைக்கப்பட்ட பச்சை பீன்ஸ் ஃபிரஷ்ஷாக இருக்கும் பீன்ஸை போலவே மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. உறைய வைக்கும் செயல்முறை பச்சை பீன்ஸில் உள்ள நார்ச்சத்து, புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை தக்க வைக்கிறது. ஆனால் அதே நேரத்தில் பச்சை பீன்ஸை அளவுக்கு அதிகமாக வேக வைக்க கூடாது. இதனால் அதில் உள்ள ஒரு சில மினரல்கள் அழிய கூடும்.
ப்ரோக்கோலி
உறைய வைக்கப்பட்ட ப்ரோக்கோலியும் ஃபிரெஷான ப்ரோக்கோலியும் ஆரோக்கியமானவை தான். ஃபிரஷாக இருக்கும் போதே ப்ரோக்கோலியை உறைய வைத்து விட்டால் இந்த உறை வைக்கும் செயல்முறை மூலமாக அதில் உள்ள ஆரோக்கியமான ரிபோஃபிளவின்கள் தக்கவைக்கப்படும்.
கேரட்
ஃபிரஷான கேரட்டை உறைய வைக்கும் செயல்முறை அதில் பாசிட்டிவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உறைய வைத்த பின்னர் கூட கேரட்டின் ஃபிளேவர், நிறம், அமைப்பு மற்றும் ஊட்டச்சத்துக்களில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது. இதற்கு முதலில் கேரட்டுகளை தோல் சீவி அவற்றை உங்களுக்கு விருப்பமான அளவுகளில் நறுக்கவும். பின்னர் 2 நிமிடங்கள் கொதிக்கும் தண்ணீரில் போட்டு எடுத்து ஐஸ் வாட்டரில் அவற்றை முக்கி காயவையுங்கள். அதன் பின்னர் உறைய வைக்கவும்.
பச்சை பட்டாணி
பச்சை பட்டாணிகளை உறைய வைப்பது அவற்றில் உள்ள இயற்கை வைட்டமின்கள் மற்றும் மினரல்களை தக்க வைக்க உதவும் ஒரு சிறந்த செயல்முறையாகும். உறைம வைக்கப்பட்ட பச்சை பட்டாணிகள் செலவை மட்டும் குறைக்காமல் அவற்றில் வைட்டமின் C, வைட்டமின் K, மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
கீரை
கீரைகள் ஃபிரஷ்ஷாக இருக்கும் பொழுது அவற்றை சுடு தண்ணீரில் முக்கி அரைத்து உறைய வைத்துக் கொள்ளலாம். உறைய வைக்கப்பட்ட கீரையில் உள்ள இரும்புச்சத்து, வைட்டமின் C மற்றும் கால்சியம் ஆகியவை ஃபிரெஷான கீரையை விட நான்கு மடங்கு இருப்பதாக ஆய்வுகள் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குடைமிளகாய்
உறைய வைக்கப்பட்ட சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் குடை மிளகாய்களில் அதிக வைட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உள்ளன. உறைய வைக்கும் செயல்முறையின்போது வைட்டமின் C தக்க வைக்கப்படுவதே காரணம்
காலிஃப்ளவர்
காலிஃப்ளவரை சுடு தண்ணீரில் 2 நிமிடங்கள் ஊறவைத்து அதனை உறைய வைக்கும் போது அதன் அமைப்பு, ஃப்ளேவர் மற்றும் வைட்டமின் C, வைட்டமின் A, நார்ச்சத்து மற்றும் புரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் தக்கவைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் காலிஃப்ளவரில் காணப்படும் பாக்டீரியாக்களும் இந்த செயல் முறையில் கொள்ளப்படுகின்றன.