கொலஸ்ட்ராலை பத்தே நாட்களில் இருந்த இடம் தெரியாமல் கரைக்கும் காய்கறிகள்!!!
Author: Hemalatha Ramkumar10 September 2024, 10:53 am
இன்று மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு உண்ணும் பழக்க வழக்கங்கள் போன்றவை பல்வேறு நோய்களுக்கு வழி வகுக்கிறது. அதனால் ஏற்படும் பிரச்சனைகளில் உடலில் அதிக கொலஸ்ட்ரால் ஒன்று. நமது உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளது. நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால். கொழுப்பு நம்முடைய ரத்த நாளங்களில் குவிய துவங்கும் போது தான் கொலஸ்ட்ரால் பிரச்சினை ஏற்படுகிறது. இது ரத்த ஓட்டத்தை தடை செய்து பல்வேறு உறுப்புகள் செயலிழந்து போகும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. இதே நிலை தொடர்ந்து நீடிக்கும் பொழுது அது உயிருக்கே ஆபத்தானதாக முடிகிறது.
பொதுவாக உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு எந்த ஒரு முக்கியமான அறிகுறிகளும் கிடையாது. கொலஸ்ட்ரால் பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கு மக்கள் விலையுயர்ந்த சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். உண்மையில் ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொண்டாலே இதிலிருந்து நாம் நிவாரணம் பெறலாம். அந்த வகையில் கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு உதவும் ஒரு சில காய்கறிகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வெங்காயம்
இந்திய சமையலில் முதன்மையாக பயன்படுத்தப்பட்டு வரும் வெங்காயம் கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு அதிக அளவில் செயல்படுகிறது. வெங்காயத்தை சமைத்து சாப்பிடுவதற்கு பதிலாக அதில் உள்ள அதிகபட்ச பலன்களை பெறுவதற்கு நீங்கள் அதனை சாலடாக சாப்பிட வேண்டும். குறைந்த கலோரி மற்றும் நார்ச்சத்து நிறைந்த இந்த வெங்காயம் கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
பூண்டு
கிட்டத்தட்ட அனைத்து விதமான உணவுகளிலும் பயன்படுத்தப்படும் இந்த பூண்டு நமது சமையலறையில் கட்டாயமாக இருக்கும். பூண்டு நமது உணவின் சுவையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் பல்வேறு விதமான நோய்களிலிருந்து நிவாரணம் பெற உதவும் மருத்துவ பலன்களையும் பெற்றுள்ளது. பூண்டில் காணப்படும் ஆன்டி ஹைபர்லிபிடிமியா பண்புகள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு உதவுகிறது.
கத்திரிக்காய்
கத்திரிக்காய் சாப்பிடுவதற்கு மட்டுமல்ல அது கொலஸ்ட்ராலை குறைப்பதற்கும் பேருதவி செய்கிறது. கத்திரிக்காயில் கரையும் நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி இருப்பதால் இது நமது ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக கருதப்படுகிறது.
வெண்டைக்காய்
வெண்டைக்காய் பலரது ஃபேவரட் காய்கறியாக இருக்கிறது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் ஒரு சில நாட்களிலேயே கொலஸ்ட்ரால் பிரச்சனையிலிருந்து முழுவதுமாக நிவாரணம் பெறலாம். வெங்காயத்தைப் போலவே வெண்டைக்காயிலும் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது.
பீன்ஸ் வகைகள்
எல்லா வகையான பீன்ஸ் வகைகளிலும் அதிக அளவு கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால் இதனை சாப்பிட்ட உடனேயே நமக்கு வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுகிறது. எனவே உங்களுடைய உணவில் ஏதாவது ஒரு வகையான பீன்ஸை தினமும் சேர்த்து சாப்பிட்டு வர கூடிய விரைவில் கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.