தற்போது, உடல் பருமன் மற்றும் எடை பிரச்சினைகள் பெரும் கவலைகளாக இருந்து வருகிறது. அதிக எடையுடன் இருப்பது பல உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இதில் எலும்பியல் பிரச்சனைகள், இதய பிரச்சனைகள் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவை அடங்கும். எடை இழப்பு மற்றும் உடல் பருமன் ஆகியவற்றுக்கான தீர்வுகள் எப்போதும் பலரின் தேடலாக உள்ளது. ஒரு சிலர் உடல் எடையை குறைக்க பல்வேறு வகையான உணவுத் திட்டங்களை தீவிரமாக பின்பற்றுபவர்களாகவும் மாறி வருகின்றனர். கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் பி மற்றும் வைட்டமின் டி போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் எடை இழப்புக்கு உதவுகின்றன என ஒரு சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய சில ஆய்வுகள் வைட்டமின் பி 12 எடை இழப்புக்கு தொடர்பு இருப்பதாகக் கூறுகின்றன. இருப்பினும், வைட்டமின் பி 12 எடை இழப்புக்கானதா அல்லது அதற்கு எதிரானதா என்பது குறித்த கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.
வைட்டமின் பி12 சில உணவுகளில் இயற்கையாகவே உள்ளது.
வைட்டமின் பி 12 இன் குறைபாடு மொத்த உடல் கொழுப்பு, அதிக எடை மற்றும் உடல் பருமனை அதிகரிக்க வழிவகுக்கும் என்று முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன.
இருப்பினும், இதை உறுதிப்படுத்த இன்னும் நிறைய ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். வைட்டமின் பி12 உங்கள் எடையை மறைமுகமாக பல வழிகளில் பாதிக்கிறது. வைட்டமின் பி12 மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வைட்டமின் பி 12 இன் குறைபாடு சோர்வு மற்றும் பலவீனத்தை ஏற்படுத்தும். எனவே, இது ஒருவரின் எடை இழப்பு முயற்சிகளுக்கு இடையூறு விளைவிக்கும். எடை இழப்புக்கான வைட்டமின் 12 இன் சில இயற்கை ஆதாரங்களில் பால், தயிர், கோழி மற்றும் முட்டை ஆகியவை அடங்கும்.