ஒரு நல்ல இரவு தூக்கம் என்பது நம்முடைய உடல் ஆரோக்கியம், மனத் தெளிவு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கு மிகவும் அத்தியாவசிய ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் பலருக்கு தூங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது மற்றும் தொடர்ந்து தூங்குவதிலும் சிக்கல்களை அனுபவிக்கின்றனர். இது அவர்களுடைய அடுத்தநாளைக்குரிய ஆற்றல் அளவுகளையும், மனநிலையையும் பாதிக்கிறது. தூக்கத்தின் தரம் என்பது சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தங்கள் போன்ற பல்வேறு காரணிகளின் விளைவாக பாதிக்கப்படலாம். ஆனால் அதே நேரத்தில் நல்ல அமைதியான தூக்கத்தை பெறுவதற்கு நீங்கள் தூங்குவதற்கு முன்பு பருக வேண்டிய ஒரு சில பானங்கள் உள்ளன.
பல்வேறு விதமான வெதுவெதுப்பான பாதங்கள் ஓய்வை ஊக்குவித்து, பதட்டத்தை குறைத்து, மெலடோனின் என்ற தூக்க ஹார்மோன்களை சீராக்கி நம்மை விரைவாக தூங்குவதற்கு உதவுகின்றன. இந்த அமைதியூட்டும் பானங்கள் ஆற்றும் விளைவை மட்டுமல்லாமல் இது தூங்க வேண்டிய நேரம் என்பதை நம்முடைய உடலுக்கு சிக்னல் மூலமாக அனுப்பவும் செய்கிறது. அந்த வகையில் தொந்தரவு இல்லாத நல்ல இரவு தூக்கத்தை பெறுவதற்கு நீங்கள் இரவில் பருக வேண்டிய 5 சிறந்த விதவிதமான பானங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சாமந்திப்பூ தேநீர்
இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு கப் வெதுவெதுப்பான சாமந்திப்பூ தேநீர் குடிப்பது உங்களுடைய மன அழுத்த அளவுகளை குறைத்து நல்ல தூக்கத்தை வரவழைக்கும். இந்த ஆற்றும் பானம் உங்கள் இரவு நேர வழக்கத்திற்கு ஒரு அமைதியை கொடுத்து, ஓய்வு மிகுந்த தூக்கத்தை அளிப்பதற்கான ஒரு சூழலை உருவாக்கும்.
வெதுவெதுப்பான பாலுடன் தேன்
பாலில் உள்ள டிரிப்டோபேன் மற்றும் தேனின் இனிப்பு சுவை ஆகிய இரண்டும் இணைந்து ஓய்வை அளிக்கிறது. டிரிப்டோபேன் என்ற அமினோ அமிலம் நம்முடைய உடலில் செரடோனின் உற்பத்தியாவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த நரம்பு கடத்தி நம்முடைய உடலுக்கு அமைதியையும், ஓய்வையும் அளிப்பதற்கு உதவுகிறது.
லாவண்டர் டீ
லாவண்டர் டீ குடிப்பது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தி உங்களுடைய தூக்கம் எந்த ஒரு தொந்தரவு இல்லாததாகவும் பார்த்துக் கொள்கிறது. இந்த பூக்களின் வாசனையும் ஃபிளேவரும் அமைதியான சூழலை உருவாக்கி கடினமான ஒரு நாளில் இருந்து அமைதி நிறைந்த ஒரு இரவுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.
மஞ்சள் பால்
தங்கப் பால் என்றும் அழைக்கப்படும் இந்த மஞ்சள் பாலை தூங்குவதற்கு முன்பு குடிப்பது உடலில் ஏற்பட்டுள்ள தேவையற்ற வீக்கத்தை குறைத்து, மனதை அமைதிப்படுத்தி, தசைகளின் டென்ஷனை போக்கி உங்களுடைய இரவு நேர வழக்கத்திற்கு அற்புதமான ஒரு கூடுதலாக அமைகிறது.
இதையும் படிக்கலாமே: சென்சிடிவ் சருமத்திற்கு இந்த பொருள் கண்டிப்பா வொர்க்-அவுட் ஆகும்!!!
அப்ரமாஞ்சி வேர் தேநீர்
அப்ரமாஞ்சி வேர் என்ற மூலிகை தூக்கத்தை ஊக்குவிக்கும் திறன்களுக்காக பெயர் போனது. இது தூக்கமின்மை மற்றும் பதட்டத்திற்கான ஒரு இயற்கை தீர்வாக அமைகிறது. இந்த தேநீர் நம்முடைய உடலுக்கு லேசான மயக்க விளைவை அளித்து, உடலுக்கு ஓய்வு கொடுத்து உங்களை தூக்க நிலைக்கு கொண்டு செல்லும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
This website uses cookies.