வெந்நீர் அல்லது குளிர்ந்த நீர்… காலை தூங்கி எழுந்தவுடன் எது குடிப்பது சிறந்தது…???

Author: Hemalatha Ramkumar
23 December 2024, 7:28 pm

காலை எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருப்பது பல்வேறு நன்மைகளை தரும். மெட்டபாலிசத்தை அதிகரிப்பது முதல் செரிமானத்தை மேம்படுத்துவது வரை இந்த பழக்கம் பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய பங்கு கொண்டுள்ளது. ஆனால் காலை பருகும் தண்ணீரின் வெப்பநிலை ஆரோக்கியத்தில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துமா? என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது.

குளிர்ந்த தண்ணீர் குடிப்பது உடல் எடையை குறைக்கும் என்று ஒரு சில ஆய்வுகளில் கூறப்படுகிறது. அதே நேரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது காலையில் தாகத்தை தணிப்பதோடு உடல் எடையை பராமரிக்கவும் உதவும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. உங்கள் உடலுக்கு நீங்கள் நீர்ச்சத்தை கொடுப்பது மட்டுமே இங்கு தலையாய முக்கியத்துவமாக அமையும் பொழுது உங்களுடைய தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் அதனை வெதுவெதுப்பாகவோ அல்லது குளிர்ந்த நிலையிலோ குடிக்கலாம்.

வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் :-

செரிமானத்திற்கு நல்லது

வெதுவெதுப்பான தண்ணீர் குடலில் செரிமான நொதிகளை ஊக்குவிப்பதன் மூலமாக செரிமானத்தை அதிகப்படுத்துகிறது. மேலும் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது நல்ல ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, செரிமான உறுப்புகள் சிறந்த முறையில் செயல்படுவதற்கு உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் மற்றும் வயிற்று உப்புசம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்.

நச்சு நீக்கம் 

வெதுவெதுப்பான தண்ணீர் நமது உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுவதற்கு உதவுகிறது என்று ஆய்வு மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய உடலில் போதுமான அளவு தண்ணீர் இருக்கும் பொழுது நச்சுக்கள் வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகிறது. நம்முடைய உடல் கதகதப்பாக இருந்தால், ரத்த நாளங்கள் விரிவடைந்து கழிவு பொருட்களை செல்களில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் உறுப்புகளை நோக்கி கொண்டு செல்கிறது.

ரத்த ஓட்டம் 

தண்ணீரை வெதுவெதுப்பாக குடிப்பது ரத்த நாளங்களை விரிவடைய செய்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். எனவே செல்கள் மற்றும் திசுக்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கிறது.

இதையும் படிச்சு பாருங்க: வீட்டிலிருந்தே தினம் தினம் ஸ்பா அனுபவம் பெற மாதம் ஒருமுறை இந்த விதைகளை மட்டும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்…!!!

குளிர்ந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்:-

உடல் எடை குறைப்பு 

குளிர்ந்த நீர் குடிப்பது உடல் எடையை குறைப்பதற்கு உதவுவதாக 2003 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. குளிர்ந்த வெப்பநிலை கலோரி எரிப்பதை அதிகரித்து, மெட்டபாலிசத்தை மேம்படுத்துகிறது. இதனால் உடல் எடை குறைகிறது.

புத்துணர்ச்சி 

இது குறிப்பாக கோடை காலத்தில் மிகவும் உண்மையானது. குளிர்ந்த நீர் சோர்வு உணர்வை போக்கி உங்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் குளிர்ந்த நீர் குடிப்பது உங்களை நாள் முழுவதும் ஆற்றலோடு வைப்பதற்கு உதவும்.

நீர்ச்சத்து 

குளிர்ந்த நீர் வெதுவெதுப்பான நீரோடு ஒப்பிடும் பொழுது மிகவும் விரைவாக நம்முடைய உடலால் உறிஞ்சப்படுகிறது. ஆய்வுகளின் படி, குளிர்ந்த நீர் உடலின் உறிஞ்சும் விகிதத்தை அதிகரிப்பதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. உடற்பயிற்சிக்கு பிறகு நீரேற்றம் பெறுவதற்கு குளிர்ந்த நீர் ஒரு சிறந்த சாய்ஸ்.

எனவே குளிர்ந்த நீர் மற்றும் வெதுவெதுப்பான நீர் குடிப்பது தனி தனியான பலன்களை கொண்டிருந்தாலும் உங்களுடைய உடலின் தேவைக்கு தகுந்தார் போல தண்ணீரை குடிப்பது அறிவுறுத்தப்படுகிறது. அது மட்டுமல்லாமல் நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் அவசியம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 24

    0

    0

    Leave a Reply