கால்சியம் கம்மியா இருந்தா வாழ்க்கை முழுவதும் ரொம்ப கஷ்டப்படணும்… அதனால இந்த குறைபாட்டை கண்டுபிடிப்பது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க!!!

Author: Hemalatha Ramkumar
4 December 2024, 12:59 pm

பெண்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் ஒரு முக்கியமான ஊட்டச்சத்தாக அமைகிறது. வலுவான எலும்புகள் மற்றும் பற்களை பராமரிப்பதில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது. பெண்கள் அதிலும் குறிப்பாக மாதவிடாய், கர்ப்ப காலம் மற்றும் மெனோபாஸ் சமயத்தில் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் காரணமாக கால்சியம் இழப்பு ஏற்படுவதால் போதுமான அளவு கால்சியம் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாக கருதப்படுகிறது. 

கால்சியம் குறைபாடு பெண்களில் ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நிலையை ஏற்படுத்தலாம். இதனால் எளிதில் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கிறது. கூடுதலாக குறைவான கால்சியம் அளவுகள் தசை வலி, சோர்வு மற்றும் மனநிலை மாற்றங்களை ஏற்படுத்துகிறது. சரிவிகித உணவு மற்றும் சப்ளிமெண்ட்கள் மூலமாக கால்சியம் எடுத்துக் கொள்வதை உறுதி செய்வதன் மூலம் பெண்கள் தங்களுடைய எலும்பு ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் கவனித்துக் கொள்ளலாம். அந்த வகையில் பார்க்கும் பொழுது பெண்கள் அலட்சியப்படுத்த கூடாத குறைந்த கால்சியம் அளவுகளுக்கான பொதுவான சில அறிகுறிகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

குறைவான கால்சியம் அளவுகளுக்கான எச்சரிக்கை அறிகுறிகள்

மாதவிடாய்க்கு முன்பு ஏற்படும் வலி 

மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு வயிற்று வலி வருவது குறைவான கால்சியம் அளவுகளுக்கான அறிகுறியாக கருதப்படுகிறது. கால்சியம் கர்ப்பப்பையில் உள்ள தசைகளை ஓய்வடைய செய்து வலியை குறைக்கிறது. எனவே மாதவிடாய் வலியில் இருந்து விடுபடுவதற்கு பெண்கள் தங்களுடைய கால்சியம் அளவை அதிகரிப்பது அவசியம்.

சோர்வு 

சோர்வு என்பது பெண்களில் குறைவான கால்சியம் அளவுகள் இருப்பதற்கான ஒரு மறைமுகமான அறிகுறி. கால்சியம் சத்து என்பது ஆற்றல் உற்பத்தி மற்றும் நரம்பு செயல்பாட்டில் முக்கிய பங்கு கொண்டுள்ளது. எனவே கால்சியம் குறைவாக இருந்தால் பெண்களுக்கு அடிக்கடி சோர்வு, தசை வீக்கம் மற்றும் சோம்பேறித்தனம் ஏற்படும். அன்றாட வேலைகளை செய்வது கூட சிரமமாக இருக்கும்.

பல் வலி அல்லது வாய்வழி பிரச்சனைகள் 

பற்களில் வலி மற்றும் வாய்வழி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் பெண்களில் குறைவான கால்சியம் இருப்பதற்கான முக்கியமான அறிகுறிகள். வலுவான பற்கள் மற்றும் ஈறுகளை பராமரிப்பதற்கு கால்சியம் அத்தியாவசியமானது. ஆனால் போதுமான அளவு கால்சியம் இல்லாவிட்டால் பற்களின் எனாமல் வலுவிழந்து, உணர்திறன் அதிகரிக்கும். இதனால் கேவிட்டி, பற்சொத்தை மற்றும் ஈறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம்.

எளிதில் உடைந்து போகும் தலைமுடி மற்றும் நகங்கள்

உங்களுடைய தலைமுடி மற்றும் நகங்கள் எளிதில் உடைந்து போவதும் கால்சியம் குறைபாட்டிற்கான அறிகுறியாக உள்ளது. ஆரோக்கியமான மயிர்கால்கள் மற்றும் நக வளர்ச்சியை பராமரிப்பதற்கு கால்சியம் மிகவும் தேவை. போதுமான அளவு கால்சியம் இல்லாவிட்டால் உங்களுடைய தலைமுடியும் நகங்களும் எளிதில் உடைந்து போகக்கூடும். மேலும் அவற்றின் வளர்ச்சியும் குறைந்து விடும்.

மனநிலை மாற்றங்கள்

நம்முடைய உடலில் குறைவான கால்சியம் இருப்பதற்கான மற்றும் ஒரு அறிகுறி மனநிலை மாற்றங்கள். கால்சியம் நரம்பு கடத்திகளை சீராக்கி நம்முடைய மனநிலை மற்றும் உணர்வை ஒருங்கமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்களுடைய உடலில் போதுமானால் அளவு கால்சியம் இல்லாவிட்டால் அடிக்கடி எரிச்சல், பதட்டம், மனசோர்வு மற்றும் உணர்வுகளில் தடுமாற்றம் ஏற்படும். எனவே உங்களுடைய மனநலனை கவனித்துக் கொள்வதற்கும் போதுமான அளவு கால்சியம் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Honey Rose Complaint Chemmanur Owner Bobby Arrest பிரபல நடிகையிடம் பாலியல் அத்துமீறல்… பதுங்கிய பிரபல தொழிலதிபர் கைது!
  • Views: - 118

    0

    0