உணவில் பிளாஸ்டிக்கா… அதை கண்டுபிடிப்பது எப்படி???

Author: Hemalatha Ramkumar
10 September 2024, 1:01 pm

இன்று எல்லா வகையான பொருட்களிலுமே கலப்படம் உள்ளது. உணவுகள் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? நாம் சாப்பிடக்கூடிய அரிசி, முட்டை, பழங்கள் என்று கிட்டத்தட்ட அனைத்து உணவுகளிலும் கலப்படம் காணப்படுகிறது. நாம் சற்று அசால்டாக இருந்து விட்டால் இந்த கலப்படங்களை சாப்பிட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே வெளியிலிருந்து வாங்கும் உணவுகளின் தரத்தை எப்பொழுதும் சோதித்துப் பார்ப்பது அவசியம். மனிதனால் செய்யப்பட்ட கலப்படங்கள் மட்டுமல்லாமல் எதிர்பாராத விதமாகவும் உணவுகளில் தேவையற்ற பொருட்கள் சேரலாம்.

அந்த வகையில் உணவில் மைக்ரோ பிளாஸ்டிக் கலந்திருப்பது தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்த மைக்ரோ பிளாஸ்டிக் பல்வேறு நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும் மோசமான ஒன்று. எனவே மைக்ரோ பிளாஸ்டிக் உணவில் கலந்து இருக்கிறதா என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். மைக்ரோ பிளாஸ்டிக் என்பது உணவில் பல்வேறு வழிகளில் கலக்கலாம்.

மைக்ரோ பிளாஸ்டிக் பொதுவாக நன்னீர் மற்றும் கடல் சூழலில் இருக்கும். இது கடல்வாழ் உயிரினங்கள் மூலமாக நுழைக்கப்படுகிறது. இந்த உயிரினங்களை பெரிய மீன்கள் சாப்பிட்டு அந்த மீன்களை மனிதர்கள் சாப்பிடும் பொழுது அது மனிதர்களுக்கு மோசமான விளைவுகளை உண்டாக்கும். மேலும் அடுத்த படியாக உணவை பதப்படுத்துதல், பேக்கேஜிங் அல்லது சேமிப்பு செயல்முறையின் பொழுது மைக்ரோ பிளாஸ்டிக் கலக்க வாய்ப்பு உள்ளது. அடுத்தபடியாக காற்று மூலமாகவும் மைக்ரோ பிளாஸ்டிக் உணவில் கலக்கலாம். குறிப்பாக பழங்கள், காய்கறிகள் மற்றும் கடல் சார்ந்த உணவுகள் சுற்றுச்சூழலுக்கு வெளிப்படும் பொழுது இந்த பிரச்சனை உருவாகிறது.

உணவில் மைக்ரோ பிளாஸ்டிக் கலந்திருக்கிறதா என்பதை அடையாளம் காண்பது எப்படி?
மைக்ரோ பிளாஸ்டிக் சிறிய அளவில் இருப்பதால் அதனை வெறும் கண்ணால் பார்த்து கண்டெடுப்பது சவாலான ஒன்றுதான். ஒருவேளை நீங்கள் உங்களுடைய உணவில் சிறிய நிறம் உள்ள துகள்கள் அல்லது ஃபைபர்கள் போல் ஏதேனும் கண்டால் அவை மைக்ரோ பிளாஸ்டிக் ஆக இருக்கக்கூடும்.

மைக்ரோ பிளாஸ்டிக் உணவின் அமைப்பை மாற்றிவிடும். உதாரணமாக கடல் சார்ந்த உணவுகள் கரகரப்பாகவும் அல்லது காய்கறிகள் சற்று நார் நாராகவும் இருப்பதைக் கண்டால் அதில் மைக்ரோ பிளாஸ்டிக் இருக்க வாய்ப்புள்ளது. கடல் உணவுகள் அதிலும் குறிப்பாக ஷெல்ஃபிஷ் போன்றவற்றில் அதிக அளவில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே கடல் உணவுகளை சாப்பிடும் பொழுது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும்.

மைக்ரோ பிளாஸ்டிக் காரணமாக ஏற்படும் அபாயங்கள்
மைக்ரோ பிளாஸ்டிக் சாப்பிடுவதால் வீக்கம், மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். ஒரு சில பிளாஸ்டிக் வகைகளில் உள்ள கெமிக்கல்கள் உணவில் நுழைய வாய்ப்புள்ளது. இந்த கெமிக்கல்கள் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் சிக்கல்களை ஏற்படுத்த கூடும். மைக்ரோ பிளாஸ்டிக் கடல்வாழ் உயிரினங்களின் திசுக்களில் சேர்ந்து ஒட்டுமொத்த உணவு சங்கிலியையே பாதிப்படைய செய்கிறது.

மைக்ரோ பிளாஸ்டிக்களை குறைப்பது எப்படி?

எப்பொழுதும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு பதிலாக எப்பொழுதும் ஃபிரஷான பழங்கள் மற்றும் காய்கறிகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். வெளியில் வாங்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் கடல்சார் உணவுகளை ஓடும் தண்ணீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்து அதன் பிறகு சாப்பிடுங்கள். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பை, பாட்டில், ஸ்ட்ரா போன்றவற்றை முடிந்த அளவு குறைத்துக் கொள்ளுங்கள். இது பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைக்க உதவும். நம்பகமான மூலங்களில் இருந்து மட்டுமே கடல் உணவுகளை வாங்கி சாப்பிடவும்.

  • Vidamuyarchi movie bookings அஜித்தின் விடாமுயற்சி கொண்டாட ரெடியா…படத்தின் புக்கிங் ஓபன்..குஷியில் ரசிகர்கள்..!
  • Views: - 198

    0

    0