உங்க வீட்டு கிட்சன்ல வீணாகுற இந்த பொருளை இப்படி யூஸ்ஃபுல்லா மாத்திடுங்க!!!

Author: Hemalatha Ramkumar
6 September 2024, 12:12 pm

நம்முடைய சமையலறையில் இருந்து கிடைக்கக்கூடிய கழிவுகளில் கட்டாயமாக வெங்காயத்தோல் இருக்கும். ஆனால் வெங்காயத் தோல்கள் ஊட்டச்சத்து நிறைந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆமாம், வெங்காய தோலில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. வெங்காயத் தோலை நீங்கள் பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம். அவ்வாறு சமையலை தவிர வெங்காயத்தோலை நீங்கள் எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

துணிகளுக்கு இயற்கையான சாயம்

துணிகளுக்கு இயற்கையான சாயத்தை வழங்குவதற்கு நீங்கள் வெங்காயத்தோலை பயன்படுத்தலாம். நீங்கள் மஞ்சள் முதல் ஆரஞ்சு கலர் வரை இதனை பயன்படுத்தி பெற முடியும். சாயம் தயாரிக்க வெங்காயத் தோலை தண்ணீரில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் நிறம் மாறியதும் அதனை வடிகட்டவும். பின்னர் துணிகளை ஒரு சில மணி நேரத்திற்கு இந்த தண்ணீரில் ஊற வைத்து எடுக்கவும்.

ஆர்கானிக் உரம்

வெங்காயத் தோல்கள் மிக எளிதாக மக்கி விடுவதால் அது மண்ணுக்கு இயற்கை உரமாக செயல்படுகிறது. வெங்காயத்தோலில் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற மண்ணுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதற்கு நீங்கள் வெங்காயத் தோல்களை உங்களுடைய காம்போஸ்ட் அல்லது நேரடியாக உங்களுடைய தோட்டத்தில் போடலாம். இது மண்ணின் அமைப்பை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் தாவரங்களின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.

இயற்கை பூச்சிக்கொல்லி தோட்டத்தில் உள்ள பூச்சிகளில் இருந்து விடுபடுவதற்கும் நீங்கள் வெங்காயத் தோல்களை தாராளமாக பயன்படுத்தலாம். இதன் வலிமையான வாசனை கொசுக்கள் போன்ற பூச்சிகளை விரட்டும் இயற்கை பூச்சி விரட்டியாக செயல்படுகிறது. இதற்கு நீங்கள் வெங்காயத்தோலை நன்றாக கசக்கி தோட்டம் முழுவதும் தூவி விடலாம் அல்லது தண்ணீரில் சேர்த்து தாவரங்களுக்கு அதனை ஸ்பிரே செய்யலாம். இந்த இயற்கையான சொல்யூஷன் எந்தவித கெமிக்கல் பெஸ்டிசைடு இல்லாமல் தாவரங்களை பாதுகாக்க உதவுகிறது.

வீட்டில் செய்யப்பட்ட கிளீனிங் சொல்யூஷன்

வெங்காயத் தோல்களை பயன்படுத்தி உங்களால் இயற்கையான கிளீனிங் சொல்யூஷனை தயாரிக்க முடியும். இதற்கு வெங்காய தோல்களை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து டீ போன்ற டிகாஷன் பதத்திற்கு அதனை கொண்டு வரவும். பின்னர் உங்களுடைய சமையலறையில் உள்ள கவுண்டர் டாப், கட்டிங் போர்ட் மற்றும் பிற மேற்பரப்புகளை சுத்தம் செய்ய இந்த ஹோம் மேடு சொல்யூஷனை பயன்படுத்தலாம். இதில் பாக்டீரியாவுக்கு எதிரான பண்புகள் மற்றும் சமையலறையில் வீசும் கெட்ட துர்நாற்றத்தில் இருந்து விடுபட உதவுகிறது.

பளபளப்பான தலைமுடிக்கு உங்களுடைய தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அதற்கு பளபளப்பு சேர்க்கவும் நீங்கள் வெங்காயத் தோல்களை பயன்படுத்தலாம். அதற்கு வெங்காய தோலை தண்ணீரில் கொதிக்க வைத்து பின்னர் ஆற விட்டு தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்திய பிறகு இறுதியாக இந்த தண்ணீர் கொண்டு உங்கள் தலை முடியை அலசவும். வெங்காயத் தோலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்களுடைய தலைமுடியை வலுவாக்கி, பொடுகு குறைத்து, அதற்கு இயற்கையான பளபளப்பை சேர்க்கும். மேலும் வெங்காயத் தோலில் உள்ள அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் மயிர் கால்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

மெழுகுவர்த்தி
பேப்பர், மெழுகுவர்த்தி அல்லது அலங்கார பொருட்களை உருவாக்கவும் நீங்கள் வெங்காய தோல்களை பயன்படுத்தலாம். இதற்கு வெங்காயத்தோலை ஊற வைத்து நன்றாக அரைத்து பேப்பர் அல்லது மெழுகுவர்த்தி தயாரிக்கும் போது அதற்கு கூடுதல் அமைப்பு மற்றும் நிறத்தை சேர்க்க உபயோகிக்கலாம்.

ஹோம் மேட் காஸ்மெட்டிக் பொருட்கள்
சோப்பு மற்றும் லிப் பாம் போன்ற ஹோம் மேட் காஸ்மெட்டிக் பொருட்களை செய்யும் பொழுது அவற்றில் இயற்கையான நிறத்தை சேர்ப்பதற்கு நீங்கள் வெங்காயத் தோல்களை பயன்படுத்தலாம். இது நிறத்தை சேர்ப்பதற்கு மட்டுமல்லாமல் உங்களுடைய அழகு சாதன பொருட்களுக்கு நன்மை தரும் பண்புகளையும் அளிக்கிறது.

Curd
  • again ajith join with adhik ravichandran in ak 64AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!