இந்த அறிகுறிகள வச்சு அதிக கொலஸ்ட்ரால் இருக்கிறத ஈசியா கண்டுபிடிச்சிடலாம்!!!

Author: Hemalatha Ramkumar
22 October 2024, 2:26 pm

கொலஸ்ட்ரால் என்பது நமது இதயத்திற்கு மிகப்பெரிய வில்லனாக இருக்கிறது. பல இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் கொலஸ்ட்ரால் காரணமாகவே ஏற்படுகிறது. நமது உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறிகளை நாம் ஒருபோதும் அலட்சியமாக கருதக்கூடாது. ஆரம்பத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறிகளை நீங்கள் கண்டறிந்தால் உடனடியாக அதனை சரி பார்ப்பது அவசியம். நமது உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளன – நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால். இந்த இரண்டும் சமநிலையாக இருந்தால் மட்டுமே நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும். 

ஆகவே நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் ஆகிய இரண்டின் சமநிலையை பராமரிப்பது அவசியம். கெட்ட கொலஸ்ட்ரால் என்பது இதய நோய் உட்பட பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைகிறது. கெட்ட கொலஸ்ட்ரால் தமனிகளில் அழுக்கான மற்றும் பிசுபிசுப்பான ஒரு பொருளை சேமிக்க துவங்குகிறது. இது ஒருவருக்கு இறப்பை கூட ஏற்படுத்தலாம். ஆகவே இவ்வளவு மோசமான கொலஸ்ட்ரால் அதிகரித்தால் என்னென்ன மாதிரியான அறிகுறிகளை நமது உடல் வெளிப்படுத்தும் என்பதை இப்போது பார்க்கலாம். 

கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமானால் கைகள் மற்றும் கால்கள் அடிக்கடி மரத்துப் போகும். நடுக்கத்தை உணர்வீர்கள். இது தவிர கால்களில் உள்ள முடி உதிர ஆரம்பிக்கும். 

கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் போது கண்களை சுற்றி மஞ்சள் நிற தடங்களை நீங்கள் கவனிக்கலாம். 

இதையும் வாசிக்கலாமே: படுத்த உடனே நல்ல தூக்கம் வரணும்னு நினைச்சா தூங்குறதுக்கு முன்னாடி இதெல்லாம் தொட்டுகூட பார்க்காதீங்க!!!

பதட்டத்தை ஒருபோதும் அலட்சியப்படுத்த வேண்டாம். பதட்டம் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கான ஒரு அறிகுறி. 

மேலும் உங்களுடைய உடல் எடை திடீரென்று அதிகரித்தால் அதற்கும் கொலஸ்ட்ரால் காரணமாக இருக்கலாம். 

இது போன்ற அறிகுறிகள் இருப்பதை நீங்கள் கவனித்தால் உடனடியாக மருத்துவரை ஆலோசித்து தேவையான பரிசோதனைகளை எடுத்துக் கொள்ளுங்கள். 

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 173

    0

    0