ரன்னிங் ஷூக்களை மாற்றுவதற்கான சரியான நேரத்தை கண்டுபிடிப்பது எப்படி…???

Author: Hemalatha Ramkumar
18 October 2024, 7:05 pm

உங்களுடைய ரன்னிங் ஷூக்களை மாற்றுவதற்கான நேரம் எது என்பதை எப்படி கண்டுபிடிப்பீர்கள்? பொதுவாக ஒரு ரன்னிங் ஷுவின் சராசரி ஆயுட்காலம் என்பது 500 முதல் 800 கிலோ மீட்டராக நம்பப்படுகிறது. ஓடும்போது ஒரு ஷூ தரையோடு எப்படி தொடர்பு கொள்கிறது மற்றும் நீண்ட நாட்களுக்கு ஷூக்களை அணிந்து கொள்ளும் நபர்களை தொடர்ந்து கண்காணித்ததன் விளைவாக இந்த ஆயுட்காலம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமான ஆய்வில் ஷூவின் அமைப்பு மற்றும் அது செய்யப்பட்ட பொருள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு வழங்கும் சௌகரியம், செயல்திறன் மற்றும் காயம் ஏற்படுவதற்கான அபாயம் ஆகியவை ஒரு ஷூவை மாற்ற வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும். உங்களுடைய ரன்னிங் ஷூக்களை மாற்றுவதற்கான சரியான நேரத்தை கண்டுபிடிப்பதற்கு உதவும் மூன்று முக்கியமான குறிகாட்டிகளை இப்போது பார்க்கலாம். 

செயல் திறன் 

ஷூ தயாரிக்கப்பட்ட மெட்டீரியலின் பண்புகள், அதிலும் குறிப்பாக கார்பன் ஃபைபர் பிளேட் ஷூக்கள் ஓடும்போது அதன் செயல்திறனை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்கும். ஆனால் ஒரு குறிப்பிட்ட மைலேஜ் அடைந்தவுடன் அதன் செயல் திறன் குறையும். குறிப்பிட்ட சில ஷூக்களை 240 கிலோமீட்டர் பயன்படுத்திய பிறகு அதன் செயல்திறன் குறைந்ததாக ஆய்வுகள் கூறுகிறது. எனவே எந்த பிராண்ட் ஷூவாக இருந்தாலும் 160 முதல் 240 கிலோமீட்டர் வரை பயன்படுத்திய பிறகு அவற்றை மாற்றி விடுவது நல்லது. 

இதையும் வாசிக்கலாமே: 

நிம்மதியான இரவு தூக்கத்தை தூண்டும் இரகசியங்கள்!!!

காயம் அல்லது அசௌகரியம் 

ஒரு ஷூவின் தேய்மானம் மற்றும் காயம் ஏற்படுவதற்கான அபாயம் ஆகியவற்றிற்கு இடையேயான உறவு என்பது சரியாக புரிந்து கொள்ளப்படாமல் இருக்கிறது. இது சார்ந்த பல்வேறு ஆய்வுகள் தேவைப்படுகிறது. எனினும் இது சம்பந்தமாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ஒவ்வொரு 22 வார காலத்திற்கும் புது ஷூக்களை மாற்றும் நபர்களுக்கு மற்றவர்களுடன் ஒப்பிடும்போது குறைவான காயம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஒரே ஜோடி ரன்னிங் ஷூக்களை நீங்கள் பயன்படுத்தினால் உங்களுக்கு காயம் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாக இருக்கும். எனவே நீங்கள் ஒரே ஷூவை தினமும் பயன்படுத்துபவர் என்றால் 320 கிலோமீட்டர் பயன்படுத்திய பிறகு அதனை மாற்றி விடுங்கள். 

சௌகரியம் 

ஷூக்களை அணிந்து கொண்டு ஓடும் போது  நமக்கு சௌகரியம் இருப்பது மிகவும் அவசியம். ஒருவேளை அது உங்களுக்கு கிடைக்காவிட்டால் ஷூக்களை மாற்ற வேண்டிய நேரம் இது என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஷூக்களை 120 கிலோமீட்டர் பிறகு பயன்படுத்துவது கால்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்று 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் இது மாதிரியான மாற்றங்கள் பொறுமையாகவே நடைபெறும். 10% சதவீதம் மாற்றத்தை நீங்கள் எதிர்கொண்டாலும் அதனை அர்த்தமுள்ளதாக கருதி புதிய சூழலை மாற்றுவது புத்திசாலித்தனம். எனவே இறுதியாக 240 கிலோமீட்டர் பயன்படுத்திய ஷூக்களை மாற்றி விடுவது சிறந்த யோசனையாக இருக்கும். அது உங்களுக்கு சௌகரியத்தை தருவதோடு காயங்கள் ஏற்படாமல் உங்களுடைய பாதுகாப்பையும் உறுதி செய்யும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 147

    0

    0