6-6-6 நடைபயிற்சி விதி… அப்படி என்ன இருக்கு இதுல…???

Author: Hemalatha Ramkumar
19 November 2024, 1:32 pm

வாக்கிங் என்பது மிகவும் எளிமையான அதே நேரத்தில் அதிக செயல்திறன் கொண்ட ஒரு உடற்பயிற்சியாகும். மேலும் தற்போது “6-6-6 நடைபயிற்சி விதி” என்பது அதிக அளவில் பிரபலமடைந்து வருகிறது. நடைப்பயிற்சியின் போது இந்த விதியை பின்பற்றுவது அதன் மூலமாக கிடைக்கும் பலன்களை பன்மடங்காக அதிகரிக்கும். காலை 6:00 மணி மற்றும் மாலை 6:00 மணிக்கு 60 நிமிடங்கள் நடைப்பயிற்சியுடன் 6 நிமிட வார்ம்-அப் மற்றும் கூல்-டவுன் செய்வதே இந்த விதியாகும். 

காலை மற்றும் மாலை நேரத்தில் நடைபயிற்சி செல்வது உங்களுக்கு பல வழிகளில் நன்மை தரும். காலை 6:00 மணி அளவில் நடைபயிற்சிக்கு போகும் போது உங்களுக்கு தூய்மையான காற்று மற்றும் அற்புதமான சூழலுக்கு மத்தியில் காலை 6 மணிக்கு நடைபயிற்சி செல்லும்போது உங்களுக்கு பல பலன்கள் கிடைக்கும். அதேபோல மாலை 6:00 மணிக்கு நடைபயிற்சி செல்வது மன அழுத்தம் நிறைந்த ஒரு நாளுக்கு பிறகு உங்களுக்கு ரிலாக்சேஷன் தருகிறது. கூடுதலாக 6 நிமிடங்கள் வார்ம்-அப் மற்றும் கூல் டவுன் செய்வது உடற்பயிற்சிக்கு உங்களை தயார் செய்யவும், தசைகளை ஆற்றவும் உதவுகிறது. 

இந்த நடைபயிற்சி வழக்கத்தை உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் சேர்ப்பது எப்படி? 

காலையில் அவசர அவசரமாக கிளம்புவதற்கு பதிலாக சற்று முன்னதாகவே எழுந்து காலை நேர நடைபயிற்சிக்கு நேரத்தை ஒதுக்குங்கள். அதேபோல வேலைகளை முடித்துவிட்டு இரவு உணவு சாப்பிடுவதற்கு முன்பு சிறந்த செரிமானம் மற்றும் ஓய்வுக்கு மாலை நேர நடைபயிற்சியில் ஈடுபடலாம். உடற்பயிற்சிக்கு செல்லும் பொழுது அந்தந்த வானிலைக்கு ஏற்றாற்போல் ஆடைகளை அணிய வேண்டும். 

இதையும் படிக்கலாமே: தினமும் முட்டை சாப்பிடுவது பெரிதல்ல… எப்போது சாப்பிடுவது சரி என்பதையும் தெரிஞ்சுக்கணும்!!!

காலை 6:00 மணி நடைபயிற்சி 

காலை நேரத்தில் உங்களுடைய நாளை ஆரம்பிப்பதற்கு நடைபயிற்சி சிறந்தது. முதலில் 6 நிமிடங்கள் வார்ம்-அப் செய்வது உங்களுடைய தசைகளை தளர்த்தி, உங்களை உடற்பயிற்சிக்கு தயார் செய்யும். அடுத்த 54 நிமிடங்களுக்கு சீரான வேகத்தில் நடைபயிற்சி செல்லுங்கள். இறுதியாக 6 நிமிடம் கூல்-டவுன் செல்வது அவசியம். காலையில் நடை பயிற்சி செல்வது உங்களுடைய மெட்டபாலிசம், கவனிப்பு திறன் ஆகியவற்றை அதிகரிக்கும்.

மாலை 6:00 மணி நடைபயிற்சி 

மாலை நேரத்தில் நடைபயிற்சி செல்வது உங்களை அனைத்து விதமான மன அழுத்தத்தில் இருந்தும் விடுபட உதவும். முதல் 6 நிமிடங்கள் வார்ம்-அப் செய்யும் பொழுது விறுவிறுப்பான நடைபயிற்சியை மேற்கொள்ளவும். அடுத்த 54 நிமிடங்களுக்கு நிலையான வேகத்தில் நடக்கவும். இறுதியாக 6 நிமிடங்கள் ஆழ்ந்த மூச்சு பயிற்சி செய்யவும். மாலை நேரத்தில் நடை பயிற்சிக்கு செல்வது செரிமானம், தூக்கத்தின் தரம் ஆகியவற்றையும் மேம்படுத்தும்.

நடைபயிற்சி மூலம் கிடைக்கும் நன்மைகள் 

*தினமும் சீரான வேகத்தில் நடை பயிற்சி செல்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ரத்த அழுத்தத்தை குறைத்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். 

*விறுவிறுப்பான நடைபயிற்சி செல்வது கலோரிகளை எரித்து, ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கும். 

*வழக்கமான முறையில், அதிலும் குறிப்பாக மாலை நேரத்தில் நடைபயிற்சி செல்வது உங்களுடைய கார்டீசால் அளவுகளை குறைத்து மனத்தெளிவை அளிக்கும்.

*வாரம்-அப் மற்றும் கூல் டவுன் செய்வது உங்களை எந்தவிதமான காயங்களில் இருந்தும் பாதுகாக்கும். 

*காலை மற்றும் மாலை ஆகிய இரு நேரங்களிலும் நடைபயிற்சி செல்வது உங்களுடைய தூக்க தரத்தை அதிகரிக்கும்.

  • Ram Gopal Varma urges actors to protest against Allu Arjun's arrest நடிகை ஸ்ரீதேவியை கைது செய்ய சொர்க்கத்துக்கு போவீங்களா? விளாசும் பிரபலம்!!
  • Views: - 147

    0

    0