தினமும் ஊறவைத்த பாதாம் பருப்புகளை சாப்பிடுவது பல வீடுகளில் ஒரு வழக்கமாக பின்பற்றப்பட்டு வருகிறது. பாதாம் என்பது நம்முடைய மூளை ஆரோக்கியம், ஞாபக சக்தி, அறிவுத்திறன் செயல்பாடு மற்றும் பலவற்றிற்கு சிறந்த நன்மைகளை தருகிறது. இந்த நட்ஸ் முழுக்க முழுக்க ஊட்டச்சத்துகளால் ஆனது. இதில் புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின் E, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இந்த உலர்ந்த பழத்தை பச்சையாகவோ அல்லது இனிப்புகள் மற்றும் மில்க் ஷேக் போன்றவற்றில் கார்னிஷ் செய்தோ சாப்பிடலாம்.
தினமும் ஒரு கைப்பிடி அளவு பாதாம் சாப்பிடுவது நம்முடைய ஆரோக்கியத்திற்கு நல்லது என்று சொல்லப்படுகிறது. ஆனால் எவ்வளவு பாதம் சாப்பிடுவது அதிகப்படியாக கருதப்படுகிறது? பொதுவாக பாதாமின் நன்மைகள் பற்றி நாம் பெருமை பேசிக்கொள்ளும் பொழுது அதனை நாம் அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக்கூடாது. எனவே ஒரு நாளைக்கு ஒருவர் எத்தனை பாதாம் பருப்புகளை சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
பாதாம் பருப்பை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது செரிமான பிரச்சனைகள், உடல் எடை அதிகரிப்பு மற்றும் சிறுநீரகத்தில் ஆக்சலேட் காரணமாக கற்கள் உருவாக வாய்ப்புள்ளது. பெரியவர்களை பொருத்தவரை ஒரு நாளைக்கு 20 முதல் 25 பாதம் பருப்புகளை தாராளமாக சாப்பிடலாம். இதுவே குழந்தைகளுக்கு 10 பருப்புகள் போதுமானது. பாதாம் பருப்புகள் சூப்பர் ஹெல்தியாக கருதப்பட்டாலும் அதனை எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்துவது முக்கியம்.
இதையும் படிக்கலாமே: இரவு நேரத்தில் ரத்த சர்க்கரை அளவுகள் குறையாமல் இருக்க இந்த குறிப்புகளை பின்பற்றினாலே போதும்!!!
அதுமட்டுமல்லாமல் பாதாம் பருப்புகளை சாப்பிடுவதற்கு குறிப்பிட்ட நேரம் எதுவும் இருக்கிறதா என்பது போன்ற சந்தேகங்கள் ஒரு சிலருக்கு இருக்கலாம். பொதுவாக பாதாம் பருப்புகளை உணவுகளுக்கு இடையே அல்லது ஒரு நாளில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நீங்கள் சாப்பிடலாம். அதிகாலை அல்லது மாலை நேரத்தில் சாப்பிடுவது சிறந்தது. உங்களுடைய நாளை பாதாம் பருப்புடன் ஆரம்பிப்பது மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.
பாதாம் பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
பாதாம் பருப்பில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அல்லது நல்ல கொழுப்புகள் இருப்பதால் இது கெட்ட கொலஸ்ட்ரால் அல்லது குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டீனை குறைத்து நல்ல கொலஸ்ட்ரால் அல்லது அதிக அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டீனை அதிகரிக்கிறது. நம்முடைய உடலில் கொலஸ்ட்ரால் சமநிலையாக இருந்தால் பிளேக் உருவாவது தடுக்கப்பட்டு, ரத்த நாளங்கள் சுத்தமாக வைக்கப்படும். அது மட்டுமல்லாமல் இந்த நட்ஸ் நம்முடைய உடலில் ஆக்சிடேட்டிவ் அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. எனவே பாதாம் பருப்பு நமது இதயத்திற்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது. வழக்கமான முறையில் பாதாம் பருப்புகளை சாப்பிட்டு வந்தால் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான அபாயத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.