காலை உணவு என்பது ஒரு நாளில் மிக முக்கியமான உணவாக கருதப்படுகிறது. ஊட்டச்சத்து மிகுந்த காலை உணவு என்பது நாள் முழுவதும் தேவையான ஆற்றலை வழங்குவதற்கு மிகவும் அவசியம். காலை உணவை ஒவ்வொரு மாதிரியான நேரத்தில் சாப்பிடுவார்கள். ஆனால் காலை உணவை சாப்பிடுவதற்கான சரியான நேரம் எது என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. காலை உணவை காலை 10 அல்லது 11 மணிக்கு சாப்பிடுவது நம் ஆரோக்கியத்தில் பல அதிசயங்களை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
அதாவது இரவு நேரத்திற்கும் அடுத்த நாள் காலை நீங்கள் சாப்பிடும் முதல் உணவிற்குமான இடைவெளியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு நீங்கள் நீட்டிக்கும் பொழுது அது உங்களுடைய வளர்சிதை மாற்ற நெகிழ்வு தன்மையை மேம்படுத்தும். அதே நேரத்தில் உங்களுடைய ஆயுள் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இடைப்பட்ட விரதத்தின் ஒரு பகுதியாக அமையும் இந்த தாமதமாக காலை உணவு சாப்பிடும் முறையானது குறிப்பிட்ட சில ஆரோக்கிய நலன்களை வழங்குகிறது. எனவே உங்களுடைய காலை உணவை காலை 10 மணி முதல் 11 மணிக்கு தள்ளி வைப்பதன் மூலமாக நம் உடலில் கொழுப்பு எரிக்கும் செயல்முறை விரைவாகும்.
மேலும் இன்சுலின் உணர்திறன் அதிகரிக்கிறது. இதனால் நம்முடைய உடலில் சேமிக்கப்பட்டுள்ள ஆற்றலை உடல் பயன்படுத்த ஆரம்பிக்கிறது. எனினும் சரியான காலை உணவுக்கான நேரம் என்பது தனிநபரின் வாழ்க்கை முறை மற்றும் மெட்டபாலிசத்தை பொறுத்து மாறுபடலாம். மேலும் நீங்கள் தாமதமாக காலை உணவை சாப்பிடும் பொழுது உங்களுடைய ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளல் குறையும்.
அது மட்டுமல்லாமல் உங்களுக்கு மன தெளிவு அதிகமாகும். இது மெட்டபாலிக் மற்றும் ஹார்மோனல் விளைவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். அதே நேரத்தில் உங்களுடைய காலை உணவில் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆற்றல் தரக்கூடிய உணவுப் பொருட்கள் இருக்க வேண்டும். பெரும்பாலான நபர்கள் காலை 8:00 மணி முதல் 10 மணியில் தங்களுடைய காலை உணவை முடித்து விடுகிறார்கள். ஆனால் உடல் எடையை பராமரிக்க நினைப்பவர்கள் 10 மணி முதல் 11 மணிக்கு காலை உணவை சாப்பிடுவது உதவக்கூடும்.
இதையும் படிக்கலாமே: கார், பஸ்ல போகும் போது வாந்தி வர பிரச்சினை இருக்கவங்க இத செய்தாலே பயணத்த ஜாலியா என்ஜாய் பண்ணலாம்…!!!
காலை உணவை சாப்பிடுவதற்கு குறிப்பிட்ட நேரம் ஏதேனும் உள்ளதா?
அனைவருக்கும் காலை உணவை சாப்பிடுவதற்கு குறிப்பிட்ட நேரம் என்ற ஒன்று கிடையாது. வாழ்க்கை முறை அட்டவணை, தனிப்பட்ட தேர்வுகள் போன்றவற்றின் அடிப்படையில் காலை உணவுக்கான சிறந்த நேரத்தை நீங்களே தேர்வு செய்து கொள்ள வேண்டும். காலை தூக்கத்திலிருந்து விழித்த ஒரு மணி நேரத்திற்குள் காலை உணவை சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்று ஒரு சில ஆய்வுகள் பரிந்துரை செய்கிறது. மேலும் சில தாமதமாக சாப்பிட பரிந்துரை செய்கின்றன.
எனினும் உங்களுடைய உடல் உங்களுக்கு உணர்த்தும் அறிகுறிகளின் அடிப்படையில் நீங்கள் உணவை சாப்பிடுவது அவசியம். அதாவது உங்களுக்கு பசி எடுக்கும் பொழுது உணவு சாப்பிடுவது சிறந்தது. உங்களுடைய காலை உணவில் முழு தானியங்கள், புரோட்டின் மற்றும் நார்ச்சத்து இருப்பது ரத்த சர்க்கரையை சீராக்கி உங்களுடைய கவனத்திறன் மற்றும் மனநிலையை மேம்படுத்தும்.
நீங்கள் எந்த நேரத்தில் சாப்பிடுகிறீர்கள் மற்றும் என்ன சாப்பிடுகிறீர்கள் ஆகிய இரண்டுமே உங்கள் ஆரோக்கியத்தை தீர்மானிக்கும். அதே நேரத்தில், உணவு மட்டுமல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதும் அவசியம்.