நீங்க தினமும் சாப்பிடுற உணவு இப்படித்தான் இருக்கணும்… அறிவுரை கூறும் உலக சுகாதார மையம்!!!

Author: Hemalatha Ramkumar
10 October 2024, 5:04 pm

தினமும் வகை வகையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மற்றும் ஆரோக்கியமற்ற உணவு சார்ந்த பழக்க வழக்கங்களை  கைவிடுவதன் முக்கியத்துவத்தை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள வழிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் காரணமாக நம்முடைய உணவு சார்ந்த பழக்க வழக்கங்களையும் மாற்றிக் கொள்வது அவசியம். 

ஒரு ஆரோக்கியமான உணவின் முக்கியமான அங்கங்கள் 

பழங்கள் மற்றும் காய்கறிகள்: ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஐந்து பவுல் அளவு பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். இவற்றில் வைட்டமின்கள், மினரல்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளது. 

முழு தானியங்கள்: சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை விட அதிக நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முழு தானியங்களை சாப்பிடுவது நல்லது. உதாரணமாக பிரவுன் ரைஸ், முழு கோதுமை மற்றும் கினோவா. 

பீன்ஸ் வகைகள்:

உங்களுடைய அன்றாட உணவில் பீன்ஸ் வகைகளை சேர்க்க மறக்காதீர்கள். இவற்றில் புரோட்டின், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது.

நட்ஸ் மற்றும் விதைகள்:

நட்ஸ் மற்றும் விதைகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை நீங்கள் ஸ்நாக்ஸாக சாப்பிடலாம். இவை உங்களுக்கு ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் தாவர அடிப்படையிலான புரோட்டீனை வழங்கும். 

அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள்:

அவகாடோ பழங்கள், ஆலிவ் எண்ணெய், நப்ஸ் மற்றும் விதைகளில் அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளது. இது நம்முடைய இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. 

சாச்சுரேட்டட் மற்றும் டிரான்ஸ்ஃபேட்டுகளை குறைவாக சாப்பிடவும்:

சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பாமாயில் போன்றவற்றில் உள்ள சாச்சுரேட்டட் மற்றும் டிரான்ஸ்ஃபேட் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்பதால் இவற்றை முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது. 

சர்க்கரை:

பதப்படுத்தப்பட்ட உணவுகள், பானங்கள் மற்றும் இனிப்பு வகைகளில் உள்ள சர்க்கரை நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இதனால் உடல் எடை அதிகரிப்பு மற்றும் பிற ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம். 

உப்பு: 

அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு உங்களுடைய உப்பு அளவை குறைத்துக் கொள்வது நல்லது. மேலும் அதிக சோடியம் நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் குறைந்த அளவில் சாப்பிடவும். 

மேலும் படிக்க: நீங்க நினைச்சா மாதிரியே நீளமா, கரு கருன்னு, அடர்த்தியான தலைமுடிய பெற ஒரு இரகசிய பொருள் இருக்கு!!!

வயதின் அடிப்படையில் உணவு சார்ந்த வழிமுறைகள்:- குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் 

குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் உடல் வளர்ச்சிக்கு ஆதரவு தரும் வகையில் சரிவிகித உணவு எடுத்துக் கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும். பல்வேறு வகையான உணவுகளை சாப்பிடுவதற்கு அவர்களை ஊக்குவியுங்கள். அதே நேரத்தில் ஆரோக்கியமற்ற தின்பண்டங்கள் மற்றும் சர்க்கரை அதிகமாக உள்ள பானங்களை கொடுக்க வேண்டாம். 

கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் 

கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தங்களுடைய ஆரோக்கியத்தோடு சேர்த்து தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்வது அவசியம். அவர்களின் உணவில் புரோட்டின், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகமாக இருக்க வேண்டும். 

வயதானவர்கள்

வயதானவர்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய உணவு சரிவிகிதமாகவும், அதே நேரத்தில் எளிதில் ஜீரணமாக கூடியதாகவும் இருக்க வேண்டும். 

நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள்: 

டயாபடீஸ் அல்லது இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களால் அவதிப்பட்டு வருபவர்கள் குறிப்பிட்ட சில உணவு சார்ந்த மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 157

    0

    0