நாள் முழுவதும் லேப்டாப் முன்னாடி வேலை செய்ய வேண்டி உள்ளதா… நீங்க பயிற்சி செய்ய வேண்டிய சில யோகாசனங்கள்!!!
Author: Hemalatha Ramkumar21 April 2023, 11:02 am
கோவிட் வந்த பிறகு அலுவலகங்களில் வீட்டில் இருந்து வேலை செய்யும் கலாச்சாரம் நிலவி வருகிறது. வீட்டில் இருந்தபடியே சௌகரியமாக வேலை செய்வதற்கான சூழ்நிலை அமைந்தாலும், இதில் ஏகப்பட்ட மைனஸ் இருக்கத்தான் செய்கிறது. அலுவலகத்தில் வேலை செய்ததை விட வீட்டில் இருந்து வேலை செய்யும் போது அதிக நேரத்தை செலவிட வேண்டி உள்ளது. காலை முதல் இரவு வரை லேப்டாப் முன் உட்கார்ந்திருப்பதே இன்று பலரது வேலையாக உள்ளது. ஒரு வேலை நீங்களும் இதில் ஒருவராக இருந்தால், உங்கள் உடலை ரிலாக்ஸ் செய்ய உதவும் யோகா பயிற்சிகளை இப்போது பார்க்கலாம்.
மர்ஜாராசனம்
உங்கள் தோரணை மற்றும் சமநிலையை மேம்படுத்துவதற்கு இந்த ஆசனம் சிறந்தது. இந்த ஆசனம் தோள்பட்டை மற்றும் கழுத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவுகிறது.
தடாசனம்
நீண்ட நேரம் மேசையில் அமர்ந்ததால் ஏற்பட்ட வலியைப் போக்கி முதுகு தசைகளை தளர்த்துகிறது.
புஜங்காசனம்
உங்கள் முதுகை நீட்சி பெற உதவுகிறது. முதுகுத்தண்டில் கூடியுள்ள பதற்றத்தை விடுவிக்கிறது.
மத்ஸ்யாசனம்
உங்கள் கழுத்து தசைகளை நீட்டுகிறது மற்றும் மார்பு மற்றும் தலையில் இருந்து பதற்றத்தை வெளியிடுகிறது.
சேது-பந்தாசனம்
உங்கள் முதுகுத் தண்டை அதன் இயல்பு நிலைக்குக் கொண்டு வருகிறது. அதிக நேரம் உட்காருவதால் சேதமடைந்த உங்கள் மேல் முதுகின் தசைகளுக்கு வலிமையையும் உறுதியையும் சேர்க்கிறது.
உட்கடாசனம்
உடல் தோரணையை மேம்படுத்துகிறது மற்றும் நீங்கள் உண்மையில் உட்கார்ந்திருக்கும் போது பயன்படுத்தப்படும் அனைத்து தசைகளையும் தளர்த்துகிறது.
உத்தனாசனம்
மன அழுத்தம் மற்றும் பதட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சிறந்தது. தோள்கள், கைகள் மற்றும் கழுத்தில் இருந்து பதற்றத்தை விடுவிக்க உதவுகிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
0
0