எவ்வளோ பொல்யூஷன் இருந்தாலும் அத சமாளிக்க இந்த யோகாசனங்கள் உங்களுக்கு ஹெல்ப் பண்ணும்!!!

Author: Hemalatha Ramkumar
16 November 2024, 12:50 pm

போகப்போக காற்றின் தரம் அதிவேகமாக குறைந்து வருகிறது. இது நம்முடைய நுரையீரல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது. மேலும் ஏற்கனவே நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இது அதிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நம்முடைய ஆரோக்கியத்தை தாக்கும் இந்த அதிக அளவு மாசுபாட்டை சமாளிப்பதற்கு யோகாசனங்கள் உதவும். ஒரு சில யோகா ஆசனங்கள் மற்றும் சில வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமாக இந்த மாசுபாட்டால் ஏற்படக்கூடிய தாக்கத்தை நாம் எளிதாக கையாளலாம். 

யோகாசனங்கள் நம்முடைய நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. தினமும் யோகாவை உங்களுடைய வழக்கத்தில் சேர்த்து வந்தால் நிச்சயமாக நுரையீரல் சம்பந்தமான பிரச்சினைகளில் இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளலாம். இப்போது நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில யோகாசனங்கள் பற்றி பார்க்கலாம்.

நாசி துளைகளில் மாறி மாறி மூச்சு விடுதல்:

சௌகரியமான ஒரு நிலையில் அமர்ந்து கொண்டு கண்களை மூடிக்கொள்ளுங்கள். பிறகு உங்களுடைய ஒரு கையின் கட்டைவிரல் மற்றும் மோதிர விரலை பயன்படுத்தி மூக்கு துளைகளை மாறி மாறி திறந்து மூடவும். ஒரு நாசித்துளையில் மூச்சு விடும் பொழுது மற்றொன்றை மூடி கொள்ளுங்கள். பின்னர் மற்றொரு நாசித் துளை மூலமாக மூச்சை வெளியேற்றவும். 

கபால்பதி பிராணாயாமம்:

சௌகரியமாக ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு ஆழமாக மூச்சை உள்ளிழுத்துக் கொள்ளுங்கள். பிறகு விரைவாக மற்றும் வலு கட்டாயமாக உங்களுடைய மூக்கு மூலமாக மூச்சை வெளியேற்றவும். மூச்சை வெளியேற்றும் பொழுது உங்களுடைய வயிற்றை உள்ளே இழுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வது உங்கள் நுரையீரல்களை சுத்தப்படுத்தி ஆற்றலை அதிகரிக்கும். 

இதையும் படிக்கலாமே: உப்பு கொஞ்சம் தூக்கலா இருந்தா தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிப்பவர்களை பயமுறுத்த காத்திருக்கும் வயிறு புற்றுநோய்!!!

பாலம் தோரணை:

தரையில் நேராக படுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய முட்டிகளை வளைத்து, கால்களை தரையில் தட்டையாக வைக்கவும். இப்போது மூச்சை உள்ளுறுத்தவாறு பொறுமையாக ஒரு சௌகரியமான அளவுக்கு  உங்களுடைய இடுப்பை தூக்கவும். இதன்போது உங்களுடைய கைகளைக் இடுப்புக்கு கீழே வைத்து ஆதரவு பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு 10 முதல் 15 வினாடிகள் காத்திருந்து மூச்சை வெளியே விடும் பொழுது பொறுமையாக கீழே பழைய நிலைக்கு திரும்பவும். 

ஒட்டகம் தோரணை:

பாயில் முட்டி போட்டு உங்களுடைய கைகளை குதிகால்களின் மேல் வைக்கவும். பொறுமையாக முதுகை பின்னோக்கி வளைத்து, மார்பை வெளிநோக்கி தூக்கியவாறு ஆழமாக சுவாசிக்கவும். 15 வினாடிகள் இதே நிலையில் இருந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் பொழுது மூச்சை வெளியே விடவும். 

நீங்கள் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறை மாற்றங்கள் 

*வீட்டிற்குள் ஸ்நேக் பிளான்ட், கற்றாழை, மணி பிளான்ட் போன்ற காற்றை தூய்மைப்படுத்தும் தாவரங்களை வளர்க்கலாம். இவற்றிற்கு குறைவான தண்ணீர் மற்றும் மறைமுகமான சூரிய வெளிச்சம் போதுமானது. 

*உங்கள் வீட்டிற்குள் உள்ள காற்றில் கலந்துள்ள நச்சுக்களை அகற்றுவதற்கு ஏர் பியூரிஃபையிங் மெஷினை பயன்படுத்தலாம். 

*வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைக்கவும். 

*வீட்டிற்கு வெளியே மரங்களுக்கு கீழ் அமர்ந்தவாறு யோகாசனங்களை பயிற்சி செய்யுங்கள். இவ்வாறு செய்வது உங்கள் நுரையீரலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஃபிரஷான காற்றை சுவாசிப்பதற்கு உதவும்.

  • Nayanthara and Vignesh Shivan viral video சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 144

    0

    0