இந்த பிரச்சினை இருந்தா நீங்க நெய் சாப்பிட கூடாது!!!

Author: Hemalatha Ramkumar
8 February 2022, 10:02 am

நெய் அதன் எண்ணற்ற நன்மைகளுக்காக அறியப்படுகிறது. தலைமுடி ஆரோக்கியம் முதல் மூளையின் செயல்பாடு வரை அனைத்தையும் செய்யக்கூடிய மூலப்பொருளின் நற்பெயரை நெய் கொண்டுள்ளது.

நெய் ஆயுர்வேதத்தின் படி ஆரோக்கியமான அன்றாட உணவுகளில் ஒன்றாகும். ஆனால் பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக, இது அனைவருக்கும் இல்லை. நெய்யின் பலன்களைப் போலவே, நெய் உண்பதில் குறைவாக அறியப்படாத சில குறைபாடுகள் உள்ளன.

இந்த பதிவில் நெய் பற்றிய சில உண்மைகளைப் பற்றி பார்க்கலாம். உடல்நலக் கோளாறுகளைத் தவிர்க்க யார் நெய்யை உட்கொள்ளக் கூடாது என்பது பற்றிய தகவலை இங்கு நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். நெய் சிறந்தது என்பதில் சந்தேகமில்லை! இது அன்றாட பயன்பாட்டிற்கு சிறந்தது. இருப்பினும், சில சுகாதார நிலைகளில் இது அவ்வளவு சிறப்பாக இல்லை!

நெய்யை எப்போது தவிர்க்க வேண்டும்?
●நெய் ஜீரணிக்க கனமானது:
நெய் செரிப்பதற்கு கனமானது. எனவே, சிலருக்கு நெய் ஒரு மலமிளக்கியாகச் செயல்படும் அதே வேளையில், அஜீரணக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது முற்றிலும் எதிர்மாறாகச் செயல்படும். நீங்கள் நாள்பட்ட அஜீரணம் மற்றும் வயிற்றில் பிரச்சினைகள் உள்ளவராக இருந்தால், நெய்யை அதிகமாக உட்கொள்ளாதீர்கள்.

நெய் கபாவை அதிகரிக்கிறது:
உங்கள் இருமல் மற்றும் சளிக்கான அனைத்து DIY தீர்வாக நெய்யை ஒரு மூலப்பொருளாக பயன்படுத்தலாம். ஆயுர்வேதத்தின் படி, நெய் கபாவை அதிகரிக்கும். எனவே, இருமல் மற்றும் சளியுடன் தொடர்புடைய காய்ச்சலின் போது இதனை சாப்பிடுவது நல்லதல்ல என்று கருதப்படுகிறது.

அஜீரணக் கோளாறு உள்ள கர்ப்பிணிப் பெண்கள்:
கர்ப்பிணிப் பெண்கள் பொதுவாக வயிறு வீக்கம் மற்றும் அஜீரணத்தால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கர்ப்பிணிப் பெண்களுக்கு சளி அல்லது வயிற்றுக் கோளாறு இருந்தால், நெய் உட்கொள்வதைக் கட்டுப்படுத்துவது நல்லது.

கல்லீரல் பிரச்சனைகள்:
கல்லீரல் மற்றும் மண்ணீரல் சம்மந்தமான நோய்கள் உள்ளவர்கள் நெய்யைத் தவிர்க்க வேண்டும்.

நெய்யின் நன்மைகள்:
நெய் முதுமையைத் தடுக்கும். இதன் பொருள் உங்கள் சருமம் இளமையாகவும், பளபளப்பாகவும் இருக்கும். இதனை தொடர்ந்து உட்கொள்வதால் கண் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. எனவே, பார்வை குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தினமும் நெய் ஊட்ட வேண்டும். நுண்ணறிவு மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தவும் நெய் அறியப்படுகிறது. நெய் உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்தும். வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீருடன் ஒரு ஸ்பூன் நெய்யை எடுத்துக் கொள்ளுங்கள். அது மலமிளக்கிய பலன்களைப் பெறுகிறது. ஆயுர்வேதத்தில், நெய் ஓஜஸை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது. இது தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் சேதமடைவதை குறைக்கிறது.

  • Bala 25th anniversary celebration தூக்கிவிட்டவரை தூக்கி வீசிய விக்ரம்…இயக்குனர் பாலாவுடன் இப்படி ஒரு பகையா..!
  • Views: - 1988

    0

    0