இந்த உலகத்துல நல்லவங்க எங்க தேடினாலும் கிடைக்க மாட்டாங்க.. வைரலாகும் மீனா வெளியிட்ட வீடியோ..!
Author: Vignesh13 April 2024, 3:07 pm
சினிமா உலகில் நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, உச்ச நடிகையாக சிகரம் தொட்டவர். உச்ச நடிகர்களான ரஜினிகாந்த், கமல், விஜயகாந்த், அஜித், விஜய், பிரபு, சத்யராஜ், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து வெற்றி கண்டு உள்ளார். இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!
நடிகை மீனா 40 ஆண்டுகளாக சினிமாவில் ஆக்டிவாக உள்ளார், இவர் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இதனிடையே, கடந்த 40 ஆண்டுகளாக நடிகை மீனா சினிமாவில் சாதனை படைத்ததை கவுரவிக்கும் விதமாக தனியார் யூட்யூப் சேனல் ஒன்று மீனா 40 என்று தலைப்பில் விழா எடுத்தது.
மேலும் படிக்க: காதலில் சொதப்பி… 4 நடிகைகளை டீலில் விட்டு அடங்கிய 44 வயது பிளேபாய் நடிகர்..!
இந்நிலையில், நடிகை மீனா வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், இந்த உலகத்தில் நல்லவங்க எங்க தேடினாலும் கிடைக்க மாட்டாங்க ஏன்னா நான் வீட்டில் இருக்கேன் என்று குழந்தைத்தனமாக பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.